ஏழாம் உலகம் (நாவல்)

From Tamil Wiki
Revision as of 10:12, 22 January 2022 by Suchitra (talk | contribs)

‘ஏழாம் உலகம்’ (2007) எழுத்தாளர் ஜெயமோகனின் நாவல். பிச்சை எடுப்பதற்காக வாங்க, விற்கப்படும் உடற்குறைபாடுடைய விளும்புநிலை மனிதர்களின் வாழ்க்கையை சித்தரித்தது. இந்து மதத்தில் ‘ஏழு கீழ் லோகங்கள்’ என்ற அமைப்பில் ஏழாம் உலகமான பாதாளத்தை இந்த மனிதர்களின் வாழ்க்கைக்கு உவமையாக்கி தலைப்பாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் திருவண்ணாமலையில் காவி உடுத்தி வாழ்ந்த நாட்களில் கண்ட நேரடி வாழ்க்கை இந்த நாவலுக்குப் பின்புலம். இந்த நாவலின் அப்பட்டமான யதார்த்தச்சித்தரிப்பும் பல்குரல்தன்மையும் விமர்சகர்களால் பேசப்பட்டது. கொடிய சூழலிலும் கதைமாந்தரிலிருந்து தொடர்ந்து மனிதத்துவம் (humanity) வெளிப்படும் இடங்கள் நாவலின் உக்கிரத்தை மீறி மானுட உள்ளத்தின் வெளிச்சத்தை காட்டுபவை என்று வாசகர்கள் கருதுகிறார்கள். 2009-ல் இந்த நாவலை அடிப்படையாகக்கொண்டு இயக்குனர் பாலாவின் ‘நான் கடவுள்’ என்ற திரைப்படம் இளையராஜாவின் இசையமைப்பில் வெளியானது.


பதிப்பு

ஆசிரியர்

கதைச்சுருக்கம்

போத்திவேலு பண்டாரம் பிச்சையெடுப்பதற்காக உடற்குறையுடைய மனிதர்களை [இவர்கள் “உருப்படிகள்” என்று நாவலுக்குள் அழைக்கப்படுகிறார்கள்] வாங்கி, விற்கும் தொழிலை செய்து வருகிறார். மனைவியும், மூன்று மகள்களுடனும் வசிக்கிறார். முருக பக்தனாகவும், குடி, பெண்கள், கேளிக்கை என்றும் ஒரே சமயம் இருக்கிறார்.

இவருடைய ‘உருப்படிக’ளில் ஒருத்தியான முத்தம்மைக்கு குழந்தை பிறக்கிறது. ஒரு கண்ணும், கையும், காலும் மட்டுமே கொண்டுள்ள, சப்பைத்தலையுடைய முத்தம்மையை பண்டாரம் அவளைப்போலவே உடற்குறையுடைய மனிதர்களுடன் இணையவிட்டு குழந்தைகளைப் பெறச் செய்கிறார். பிறக்கும் குழந்தைகளும் பிச்சைத்தொழிலுக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

இது அவளுக்கு ***-ஆவது பிரசவம். முதல் பிரசவத்தில் ஒற்றை விரலுடன் பிறந்த குழந்தையைத் தவிர வேறெதையும் தனக்கு ஞாபகம் இல்லை, எல்லாம் விற்றுப்போய்விட்டன என்று முத்தம்மை ஒரு கட்டத்தில் சொல்கிறாள்.

குழந்தை பிறந்து ஒரு வாரமே ஆன நிலையில் பண்டாரம் முத்தம்மையையும் மற்ற சில ‘உருப்படிக’ளையும் தை பூசத்துக்கு பழனிக்குக் கொண்டுபோய் பிச்சையெடுக்க வைக்கிறார். பண்டாரம் தன்னுடைய முதல் மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டியதால் பணம் வேண்டிய சூழலில் இருக்கிறார். ஆகவே தொரப்பு என்ற கண்ணில்லாத கூனரை - இவர் முத்தம்மையின் குழந்தையின் தந்தை - உடலுறுப்பு விளைச்சலுக்காக விற்றுவிடுகிறார். வேறு சிலரையும் விற்கிறார். அப்போது மாங்காடி சாமி என்ற கைகால் முடமான, பேசாத, புன்னகைக்கவும் பாடவும் மட்டுமே செய்யக்கூடிய சித்தர் போன்றவரையும் விற்க நேர்கிறது.

திரும்ப ஊருக்கு வந்ததும் பண்டாரத்தின் மூத்த மகளுக்கு ஒரு வரன் வருகிறது. திருமணம் நிச்சயமானதும் வரனின் வேலை நிரந்தரமானதல்ல என்று தெரிய வருகிறது. மகளின் எதிர்காலம் குறித்து பண்டாரம் நிச்சயமான திருமணம் நிற்கக்கூடாது



கதைமாந்தர்

பின்புலம், உருவாக்கம்

இலக்கிய இடம், மதிப்பீடு

விவாதங்கள்

திரைப்படம்

உசாத்துணை