ஏழாம் உலகம் (நாவல்)

From Tamil Wiki
Revision as of 09:38, 22 January 2022 by Suchitra (talk | contribs)

‘ஏழாம் உலகம்’ (2007) எழுத்தாளர் ஜெயமோகனின் நாவல். பிச்சை எடுப்பதற்காக வாங்க, விற்கப்படும் உடற்குறைபாடுடைய விளும்புநிலை மனிதர்களின் வாழ்க்கையை சித்தரித்த நாவல். இந்து மதத்தில் ‘ஏழு கீழ் லோகங்கள்’ என்ற அமைப்பில் ஏழாம் உலகமான பாதாளத்தை இந்த மனிதர்களின் வாழ்க்கைக்கு உவமையாக்கி தலைப்பாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் திருவண்ணாமலையில் காவி உடுத்தி வாழ்ந்த நாட்களில் கண்ட நேரடி வாழ்க்கை இந்த நாவலுக்குப் பின்புலம். இந்த நாவலின் அப்பட்டமான யதார்த்தச்சித்தரிப்பும் பல்குரல்தன்மையும் விமர்சகர்களால் பேசப்பட்டது. அந்தக் கொடிய சூழலிலும் கதைமாந்தரிலிருந்து தொடர்ந்து மனிதத்துவம் (humanity) வெளிப்படும் இடங்கள் நாவலின் உக்கிரத்தை மீறி மானுட உள்ளத்தின் வெளிச்சத்தை காட்டுபவை என்று வாசகர்கள் கருதுகிறார்கள். 2009-ல் இந்த நாவலை அடிப்படையாகக்கொண்டு இயக்குனர் பாலாவின் ‘நான் கடவுள்’ என்ற திரைப்படம் இளையராஜாவின் இசையமைப்பில் வெளியானது.


பதிப்பு

ஆசிரியர்

கதைச்சுருக்கம்

கதைமாந்தர்

பின்புலம், உருவாக்கம்

இலக்கிய இடம், மதிப்பீடு

விவாதங்கள்

திரைப்படம்

உசாத்துணை