எஸ். வையாபுரிப் பிள்ளை: Difference between revisions

From Tamil Wiki
(எஸ். வையாபுரிப் பிள்ளை)
No edit summary
Line 12: Line 12:

1926-ல் சென்னைப் பல்கலைக்கழகம் உருவாக்கி வந்த தமிழ் அகராதியின் (ஏழு தொகுதிகள்) பதிப்பாசிரியர் பொறுப்பேற்றார். 1936-ல் முதல் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் ஆராய்ச்சித்துறைத் தலைவராக விளங்கினார். வையாபுரிப் பிள்ளை திருவிதாங்கூர் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவராக இருந்தபோது மலையாள மொழி லெக்சிகன் (சொற்களஞ்சியம்) பதிப்பிக்கப்பட்டது. "இரசிகமணி" டி.கே.சியுடன் இணைந்து திருநெல்வேலியில் கம்பன் கழகத்தை உருவாக்கினார்.

அவரது வீட்டில் இருந்த நூலகத்தில் மட்டும் 2,943 புத்தகங்களையும், ஆங்கிலம், தமிழ், பிரெஞ்சு, ஜெர்மன், மலையாளம் போன்ற மொழிகளிலான குறிப்புகளையும், ஓலைச்சுவடிகள் அனைத்தையும் கொல்கத்தாவில் இருந்த தேசிய நூலகத்துக்கு நன்கொடையாக அளித்தார்.

வையாபுரிப் பிள்ளை பதிப்பித்த 45 நூல்களில் இலக்கியம் / இலக்கணம் 5, சிற்றிலக்கியங்கள் 13, நிகண்டுகள் 6, நாட்டுப்புற இலக்கியம் 1, பிற 2 என அமையும். சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட பேரகராதியின் ஆக்கக் குழுத் தலைவர். திராவிட மொழிகளிலேயே முதல் அகராதியான தமிழிற்கு வையாபுரிப் பிள்ளையின் பங்களிப்பு இன்றியமையாதது.

Line 19: Line 17:
கால ஆராய்ச்சியின் போது ஒரு நூலின் அகச்சான்று, புறச்சான்று இரண்டையும் முறைப்படிக் கொள்ளுதல், இலக்கணவழக்கு, சாத்திரக்குறிப்புகள், குறிப்பிட்ட நூலின் வரிகளை மேற்கோள் காட்டல் போன்ற முறைகளாஇப் பயன்படுத்தினார்.

== விருதுகள் ==
== விருதுகள் ==
* மலையாளம் லெக்சிகன் பணிக்காக பிரிட்டிஷ் அரசு ராவ்சாகிப் பட்டம் கொடுத்தது.  
* தமிழ் அகராதி பணிக்காக பிரிட்டிஷ் அரசு வையாபுரி பிள்ளைக்கு ராவ்சாகிப் பட்டம் வழங்கியது.  
* 1953-ல் தமிழ் எழுத்தாளர் சங்கம் அன்றைய ஆளுநர் தலைமையில் வையாபுரிப்பிள்ளையைப் பாராட்டியது.
* 1953-ல் தமிழ் எழுத்தாளர் சங்கம் அன்றைய ஆளுநர் தலைமையில் வையாபுரிப்பிள்ளையைப் பாராட்டியது.

Revision as of 15:56, 2 February 2022

எஸ். வையாபுரிப் பிள்ளை

எஸ். வையாபுரிப்பிள்ளை (அக்டோபர் 12, 1891 - பெப்ரவரி 17, 1956) தமிழறிஞர், இருபதாம் நூற்றாண்டின் முதன்மை தமிழ் ஆராய்ச்சியாளர், பதிப்பாசிரியர், ஆய்வுக கட்டுரையாளர், திறனாய்வாளர், கால மொழி ஆராய்ச்சியாளர், மொழி பெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், எழுத்தாளர், கவிஞர், வழக்குரைஞர் என பன்முகம் கொண்டவர். தமிழ் அகராதி மற்றும் மலையாள லெக்சிகனுக்கான பங்களிப்பிற்காக நினைவு கூறப்படுகிறார்.

பிறப்பு,கல்வி

வையாபுரிப்பிள்ளை, நெல்லை மாவட்டத்தில் உள்ள சிக்கநரசய்யன்பேட்டை என்ற ஊரில் அக்டோபர் 12, 1891-ல் சரவணப்பெருமாலுக்கும் பாப்பம்மாளுக்கும் பிறந்தார். இவரது இயற்பெயர் பாலவராயர். பாளையங்கோட்டை புனித சவேரியர் பள்ளியிலும், திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரியிலும், பிறகு சென்னை கிறிஸ்துவக் கல்லூரியிலும் படித்துப் பட்டமும், சேதுபதி தங்க மெடலும் பெற்றார். பின்னர் திருவனந்தபுரம் சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயின்றார்.

தனிவாழ்க்கை

திருவனந்தபுரத்தில் ஏழு ஆண்டுகளும், மூன்று ஆண்டுகள் திருநெல்வேலியிலும் வழக்குரைஞராகவும் பணியாற்றினார். வையாபுரிப் பிள்ளையின் நெல்லை வாழ்க்கையில் அவருக்கு நெருங்கிய நண்பர்களாக, "இரசிகமணி" டி. கே. சிதம்பரநாத முதலியார், நீலகண்ட சாஸ்திரியார், பேராசிரியர் சாரநாதன், பெ. அப்புசாமி போன்றோர் இருந்தனர்.

இலக்கியவாழ்க்கை

கட்டுரைகள், இலக்கிய ஆய்வுகள், பழந்தமிழ் இலக்கியங்களைத் தொகுத்தல், ஓலைச் சுவடிகளைப் பதிப்பித்தல், ஆய்வு செய்தல், கால நிர்ணயம் செய்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டார்.

1926-ல் சென்னைப் பல்கலைக்கழகம் உருவாக்கி வந்த தமிழ் அகராதியின் (ஏழு தொகுதிகள்) பதிப்பாசிரியர் பொறுப்பேற்றார். 1936-ல் முதல் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் ஆராய்ச்சித்துறைத் தலைவராக விளங்கினார். வையாபுரிப் பிள்ளை திருவிதாங்கூர் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவராக இருந்தபோது மலையாள மொழி லெக்சிகன் (சொற்களஞ்சியம்) பதிப்பிக்கப்பட்டது. "இரசிகமணி" டி.கே.சியுடன் இணைந்து திருநெல்வேலியில் கம்பன் கழகத்தை உருவாக்கினார்.

வையாபுரிப் பிள்ளை பதிப்பித்த 45 நூல்களில் இலக்கியம் / இலக்கணம் 5, சிற்றிலக்கியங்கள் 13, நிகண்டுகள் 6, நாட்டுப்புற இலக்கியம் 1, பிற 2 என அமையும். சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட பேரகராதியின் ஆக்கக் குழுத் தலைவர். திராவிட மொழிகளிலேயே முதல் அகராதியான தமிழிற்கு வையாபுரிப் பிள்ளையின் பங்களிப்பு இன்றியமையாதது.

கால ஆராய்ச்சியின் போது ஒரு நூலின் அகச்சான்று, புறச்சான்று இரண்டையும் முறைப்படிக் கொள்ளுதல், இலக்கணவழக்கு, சாத்திரக்குறிப்புகள், குறிப்பிட்ட நூலின் வரிகளை மேற்கோள் காட்டல் போன்ற முறைகளாஇப் பயன்படுத்தினார்.

அவரது வீட்டில் இருந்த நூலகத்தில் மட்டும் 2,943 புத்தகங்களையும், ஆங்கிலம், தமிழ், பிரெஞ்சு, ஜெர்மன், மலையாளம் போன்ற மொழிகளிலான குறிப்புகளையும், ஓலைச்சுவடிகள் அனைத்தையும் கொல்கத்தாவில் இருந்த தேசிய நூலகத்துக்கு நன்கொடையாக அளித்தார்.

விருதுகள்

  • தமிழ் அகராதி பணிக்காக பிரிட்டிஷ் அரசு வையாபுரி பிள்ளைக்கு ராவ்சாகிப் பட்டம் வழங்கியது.
  • 1953-ல் தமிழ் எழுத்தாளர் சங்கம் அன்றைய ஆளுநர் தலைமையில் வையாபுரிப்பிள்ளையைப் பாராட்டியது.

இறுதிக்காலம்

வையாபுரிப் பிள்ளை பிப்ரவரி 17,1956-ல் தனது 65வது வயதில் காலமானார்.

நூல் பட்டியல்

இயற்றிய நூல்கள்

  • 1930 - ஆராய்ச்சியுரைத் தொகுதி-1, ஆசிரியர் வெளியீடு
  • 1944 - சிறுகதை மஞ்சரி, தினமணி வெளியீடு
  • 1946 - Research in Dravidian Language, Madras Premier Co., Madras
  • 1947 - இலக்கியச் சிந்தனைகள், பாரி நிலையம்
  • 1949 - தமிழர் பண்பாடு, தமிழ்ப் புத்தகாலயம்
  • 1950 - கம்பன் ஆராய்ச்சிப் பதிப்பு, கம்பன் கழகம், காரைக்குடி
  • 1951 - உரைமணிமாலை, ஆசிரியர் பதிப்பு
  • 1952 - இலக்கிய தீபம், பாரி நிலையம்
  • 1952 - இலக்கிய உதயம் (பகுதி 2), தமிழ்ப் புத்தகாலயம்
  • 1954 - இலக்கிய மணிமாலை, தமிழ்ப் புத்தகாலயம்
  • 1955 - கம்பன் காவியம், தமிழ்ப் புத்தகாலயம்
  • 1956 - இலக்கணச் சிந்தனைகள், பாரி நிலையம்
  • 1956 - திராவிட மொழிகளில் ஆராய்ச்சி, தமிழ்ப் புத்தகாலயம், இரண்டாம் பதிப்பு
  • 1956 - History of Tamil Language & Literature, NCBH
  • 1956 - சொற்கலை விருந்து, பாரி நிலையம்
  • 1957 - காவியகாலம், தமிழ்ப் புத்தகாலயம்
  • 1958 - இலக்கிய விளக்கம், தமிழ்ப் புத்தகாலயம்
  • 1958 - ராஜி
  • 1959 - தமிழ்ச் சுடர்மணிகள், பாரி நிலையம், மூன்றாம் பதிப்பு
  • 1959 - அகராதி நினைவுகள், தமிழ்ப் புத்தகாலயம்
  • 1960 - தமிழின் மறுமலர்ச்சி, பாரி நிலையம், நான்காம் பதிப்பு

மொழிபெயர்ப்புகள்

  • லகு சித்தாந்த கௌமுதி (தமிழில்)
  • Shelley (houe's philosophy) (தமிழில்)
  • william Henry Davies (leisure) (தமிழில்)
  • walt whitman கவிதைகள் (தமிழில்)

ஆங்கில நூல்கள்

  • History of Tamil Literature
  • Research in Dravidian Languages

பதிப்பித்த நூல்கள்

  • மனோன்மணியம், 1922
  • துகில்விடு தூது, 1929
  • நாமதீப நிகண்டு, 1930
  • அரும்பொருள் விளக்க நிகண்டு, 1931
  • களவியற்காரிகை, 1931
  • கம்பராமாயணம்-யுத்த காண்ட1-3 படலம்), 1932
  • குருகூர் பள்ளு, 1932
  • திருக்குருங்குடி அழகிய நம்பி உலா, 1932
  • தினகர வெண்பா, 1932
  • நெல்விடு தூது, 1933
  • தொல்காப்பியம்-(பொருளதிகாரளம, இளம்பூரணம்), 1933
  • திருமந்திரம் (சேர்ந்து பதிப்பித்தது), 1933
  • திருமுருகாற்றுப்படை (சேர்ந்து பதிப்பித்தது, புதிய உரையுடன்), 1933
  • கம்பராமாயணம்-பால காண்டம் (1-7படலம்), 1933
  • பூகோள விலாசம், 1933
  • திருப்பணி மாலைகள் (தென்திருப்பேரை, திருக்கோளூர்),1933
  • மூப்பொந்தொட்டி உலா, 1934
  • பொதிகை நிகண்டு, 1934
  • இராஜராஜதேவர் உலா, 1934
  • தொல்காப்பியம்-பொருளதிகாரம் (நச்சினார்க்கினியம்),1934
  • இராமலிங்கேசர் மீது பணவிடு தூது, 1934
  • மதுரைக் கோவை, 1934
  • தெய்வச்சிலையார்விறலிவிடு தூது, 1936
  • புறத்திரட்டு, 1938
  • கயாதரம், 1939
  • சங்க இலக்கிய பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்), 1940
  • சீவக சிந்தாமணி, 1941
  • சாத்தூர் நொண்டி நாடகம், 1941
  • நவநீதப் பாட்டியல் - உரையுடன், 1943
  • திருமுருகாற்றுப்படை-பழைய உரை, 1943
  • நான்மணிக்கடிகை, 1944
  • இன்னா நாற்பது, 1944
  • திரிகடுகமும் சிறுபஞ்ச மூலமும், 1944
  • இனியவை நாற்பது, 1949
  • இராமப்பய்யன் அம்மானை, 1950
  • முதலாயிரம், 1955
  • திருவாய்மொழி
  • கொண்டல் விடு தூது

உசாத்துணை