எஸ்.ராமகிருஷ்ணன் (ஆய்வாளர்): Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
[[File:எஸ்.ராமகிருஷ்ணன்.jpg|thumb|எஸ்.ராமகிருஷ்ணன்]]
[[File:எஸ்.ராமகிருஷ்ணன்.jpg|thumb|எஸ்.ராமகிருஷ்ணன்]]
எஸ்.ராமகிருஷ்ணன் (ஆய்வாளர்) தமிழறிஞர், மார்க்ஸிய அறிஞர். மார்க்ஸிய அரசியலில் ஈடுபட்டார். இதழாளராக இருந்தார். இலக்கியத்திறனாய்வு நூல்களை எழுதியிருக்கிறார். ரஷ்யப்படைப்புகளை மொழியாக்கம் செய்திருக்கிறார். (பார்க்க [[எஸ்.ராமகிருஷ்ணன்]] எழுத்தாளர்)
எஸ்.ராமகிருஷ்ணன் (ஆய்வாளர்) (எஸ்.ஆர்.கே) தமிழறிஞர், மார்க்ஸிய அறிஞர். மார்க்ஸிய அரசியலில் ஈடுபட்டார். இதழாளராக இருந்தார். இலக்கியத்திறனாய்வு நூல்களை எழுதியிருக்கிறார். ரஷ்யப்படைப்புகளை மொழியாக்கம் செய்திருக்கிறார். (பார்க்க [[எஸ்.ராமகிருஷ்ணன்]] எழுத்தாளர்)


== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
எஸ்.ஆர்.கே. என்றும் அழைக்கப்படும் எஸ்.ராமகிருஷ்ணன் நாகப்பட்டினம் மாவட்டம் கிளிமங்கலத்தில் வி.கெ.சுந்தரம் மங்களம் இணையருக்கு 2 ஏப்ரல் 1921ல் பிறந்தார். மாயவரம் பள்ளியில் உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முடித்தபின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இண்டர்மீடியட் கற்கச் சேர்ந்தார். சுதர்ந்திரப்போரில் ஈடுபட்டமையால் அதை முடிக்கவில்லை. 1940ல் இண்டர்மீடியட் முடித்துவிட்டு காசி பல்கலையில் பட்டப்படிப்பில் சேர்ந்தார். அங்கு இடதுசாரி இயக்கங்களுடன் இணைந்து மாணவர் கிளர்ச்சியை நிகழ்த்தியமையால் படிப்பை முடிக்கவில்லை. 1942ல் திருச்சி தேசியக்கல்லூரியில் மீண்டும் பட்டப்படிப்பை தொடர்ந்தாலும் விடுதலைப்போரில் ஈடுபட்டமையால் அதை முடிக்கவில்லை.
இந்திய சுதந்திரத்திற்கு பின்னர் உத்கல் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்து நேபாள பல்கலை கழகத்தில் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் மதுரை பல்கலைக் கழகத்தில் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இவருடைய முனைவர் பட்ட ஆய்வேடு [[கம்பனும் மில்ட்டனும் ஒரு புதிய பார்வை]] ஒரு முன்னோடி நூல் என கருதப்படுகிறது.
== தனிவாழ்க்கை ==
எஸ்.ராமகிருஷ்ணன் 1944 ல் தன்னுடன் கட்சிப்பணியாற்றிய கமலாவை மணந்தார். மூன்று குழந்தைகள். தன் பாரம்பரியச் சொத்துக்களை முழுக்க விற்று கட்சிக்கே அளித்தார். கட்சியின் முழுநேர ஊழியராக சென்னையில் கம்யூனில் தங்கி பணியாற்றினார். அப்போது அந்த கம்யூனில் [[ஜெயகாந்தன்]] சிறுவனாக இருந்தார். ஜெயகாந்தனின் ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் நூலில் எஸ்.ஆர்.கே பற்றி விரிவாக சொல்லப்பட்டுள்ளது. கட்சியில் கருத்துமோதல்கள் உருவானபோது எஸ்.ராமகிருஷ்ணன் முழுநேர ஊழியர் பணியை துறந்து 1953ல் மதுரைக்கு வந்து பேராசிரியர் சங்கரநாராயணனுடன் இணைந்து தனிப்பயிற்சிக் கல்லூரி ஒன்றை தொடங்கினார். அது அவருக்கு நிரந்தர வருமானத்தையும் புகழையும் அளித்தது. மதுரை (காமராஜ்) பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றபின் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் அழைப்பின் பேரில் அங்கேயே பேராசிரியராகப் பணியாற்றினார்.
== அரசியல் வாழ்க்கை ==
சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் பயில்கையில் விடுதிக்கு வந்து மாணவர்களைச் சந்தித்த [[கே.பாலதண்டாயுதம்]] பேசிய பேச்சால் கவரப்பட்டார்.1936 -1937 ஆம் ஆண்டுகளில் இந்திய தேசிய காங்கிரஸின் பேச்சாளராக அறியப்பட்டார். பாலதண்டாயுதம் காங்கிரஸில் இருந்து இந்திய கம்யூனிஸ்டுக் கட்சிக்குச் சென்றபோது தானும் சென்றார்.  1941-1942ல் காசியில் பயில்கையில் கம்யூனிஸ்டுக் கட்சி ஒருங்கிணைத்த மாணவர் கிளர்ச்சியை தலைமைதாங்கி நடத்தினார். கைதுசெய்யப்பட்டு காசியில் சிறையிலடைக்கப்பட்டார். பின்னர் வேலூர் சிறையிலடைக்கப்பட்டார்
1941ல் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி சேலத்தில் நடத்திய தமிழ்நாடு மாணவர் சம்மேளத்தின் தென்மண்டல மாநாட்டில் அதன் செயலாளராகத் தேர்வுசெய்யப்பட்டார். 1942ல் திருச்சி தேசியக்கல்லூரியில் சேர்ந்து மீண்டும் பட்டப்படிப்பை தொடர்ந்தார். வெள்ளையனே வெளியேறு இயக்கம் வீச்சு கொள்ளவே அதில் சேர்ந்து படிப்பை கைவிட்டார். 1943 ல் சென்னை சென்று [[ஜனசக்தி]] முதலிய இதழ்களில் தேசபக்தன், டைரி, ஈட்டிமுனை ஆகிய பெயர்களில் அரசியல் கட்டுரைகள் எழுதினார்.

Revision as of 17:26, 15 March 2022

எஸ்.ராமகிருஷ்ணன்

எஸ்.ராமகிருஷ்ணன் (ஆய்வாளர்) (எஸ்.ஆர்.கே) தமிழறிஞர், மார்க்ஸிய அறிஞர். மார்க்ஸிய அரசியலில் ஈடுபட்டார். இதழாளராக இருந்தார். இலக்கியத்திறனாய்வு நூல்களை எழுதியிருக்கிறார். ரஷ்யப்படைப்புகளை மொழியாக்கம் செய்திருக்கிறார். (பார்க்க எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்தாளர்)

பிறப்பு, கல்வி

எஸ்.ஆர்.கே. என்றும் அழைக்கப்படும் எஸ்.ராமகிருஷ்ணன் நாகப்பட்டினம் மாவட்டம் கிளிமங்கலத்தில் வி.கெ.சுந்தரம் மங்களம் இணையருக்கு 2 ஏப்ரல் 1921ல் பிறந்தார். மாயவரம் பள்ளியில் உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முடித்தபின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இண்டர்மீடியட் கற்கச் சேர்ந்தார். சுதர்ந்திரப்போரில் ஈடுபட்டமையால் அதை முடிக்கவில்லை. 1940ல் இண்டர்மீடியட் முடித்துவிட்டு காசி பல்கலையில் பட்டப்படிப்பில் சேர்ந்தார். அங்கு இடதுசாரி இயக்கங்களுடன் இணைந்து மாணவர் கிளர்ச்சியை நிகழ்த்தியமையால் படிப்பை முடிக்கவில்லை. 1942ல் திருச்சி தேசியக்கல்லூரியில் மீண்டும் பட்டப்படிப்பை தொடர்ந்தாலும் விடுதலைப்போரில் ஈடுபட்டமையால் அதை முடிக்கவில்லை.

இந்திய சுதந்திரத்திற்கு பின்னர் உத்கல் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்து நேபாள பல்கலை கழகத்தில் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் மதுரை பல்கலைக் கழகத்தில் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இவருடைய முனைவர் பட்ட ஆய்வேடு கம்பனும் மில்ட்டனும் ஒரு புதிய பார்வை ஒரு முன்னோடி நூல் என கருதப்படுகிறது.

தனிவாழ்க்கை

எஸ்.ராமகிருஷ்ணன் 1944 ல் தன்னுடன் கட்சிப்பணியாற்றிய கமலாவை மணந்தார். மூன்று குழந்தைகள். தன் பாரம்பரியச் சொத்துக்களை முழுக்க விற்று கட்சிக்கே அளித்தார். கட்சியின் முழுநேர ஊழியராக சென்னையில் கம்யூனில் தங்கி பணியாற்றினார். அப்போது அந்த கம்யூனில் ஜெயகாந்தன் சிறுவனாக இருந்தார். ஜெயகாந்தனின் ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் நூலில் எஸ்.ஆர்.கே பற்றி விரிவாக சொல்லப்பட்டுள்ளது. கட்சியில் கருத்துமோதல்கள் உருவானபோது எஸ்.ராமகிருஷ்ணன் முழுநேர ஊழியர் பணியை துறந்து 1953ல் மதுரைக்கு வந்து பேராசிரியர் சங்கரநாராயணனுடன் இணைந்து தனிப்பயிற்சிக் கல்லூரி ஒன்றை தொடங்கினார். அது அவருக்கு நிரந்தர வருமானத்தையும் புகழையும் அளித்தது. மதுரை (காமராஜ்) பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றபின் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் அழைப்பின் பேரில் அங்கேயே பேராசிரியராகப் பணியாற்றினார்.

அரசியல் வாழ்க்கை

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் பயில்கையில் விடுதிக்கு வந்து மாணவர்களைச் சந்தித்த கே.பாலதண்டாயுதம் பேசிய பேச்சால் கவரப்பட்டார்.1936 -1937 ஆம் ஆண்டுகளில் இந்திய தேசிய காங்கிரஸின் பேச்சாளராக அறியப்பட்டார். பாலதண்டாயுதம் காங்கிரஸில் இருந்து இந்திய கம்யூனிஸ்டுக் கட்சிக்குச் சென்றபோது தானும் சென்றார். 1941-1942ல் காசியில் பயில்கையில் கம்யூனிஸ்டுக் கட்சி ஒருங்கிணைத்த மாணவர் கிளர்ச்சியை தலைமைதாங்கி நடத்தினார். கைதுசெய்யப்பட்டு காசியில் சிறையிலடைக்கப்பட்டார். பின்னர் வேலூர் சிறையிலடைக்கப்பட்டார்

1941ல் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி சேலத்தில் நடத்திய தமிழ்நாடு மாணவர் சம்மேளத்தின் தென்மண்டல மாநாட்டில் அதன் செயலாளராகத் தேர்வுசெய்யப்பட்டார். 1942ல் திருச்சி தேசியக்கல்லூரியில் சேர்ந்து மீண்டும் பட்டப்படிப்பை தொடர்ந்தார். வெள்ளையனே வெளியேறு இயக்கம் வீச்சு கொள்ளவே அதில் சேர்ந்து படிப்பை கைவிட்டார். 1943 ல் சென்னை சென்று ஜனசக்தி முதலிய இதழ்களில் தேசபக்தன், டைரி, ஈட்டிமுனை ஆகிய பெயர்களில் அரசியல் கட்டுரைகள் எழுதினார்.