எஸ்.ரமேசன் நாயர்

From Tamil Wiki
Revision as of 07:32, 13 December 2023 by Jeyamohan (talk | contribs) (Created page with "எஸ்.ரமேசன் நாயர்:( 3 மே 1948) மலையாள கவிஞர், மொழிபெயர்ப்பாளர், திரைப்பாடலாசிரியர். வானொலியில் நிகழ்ச்சியமைப்பாளராகப் பணிபுரிந்தார். தமிழிலிருந்து செவ்வியல்நூல்களை மலையாளத்துக்க...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

எஸ்.ரமேசன் நாயர்:( 3 மே 1948) மலையாள கவிஞர், மொழிபெயர்ப்பாளர், திரைப்பாடலாசிரியர். வானொலியில் நிகழ்ச்சியமைப்பாளராகப் பணிபுரிந்தார். தமிழிலிருந்து செவ்வியல்நூல்களை மலையாளத்துக்கு மொழியாக்கம் செய்தவர்.

பிறப்பு, கல்வி

எஸ்.ரமேசன் நாயர் குமரிமாவட்டம் குமாரபுரம் என்னும் ஊருல் ஏ.ஷடானன் தம்பி- எல்.பரமேஸ்வரியம்மா இணையரின் மூத்தமகனாக 2 மே 1948ல் பிறந்தார்.

குமாரபுரத்தில் ஆரம்பக்கல்வி பயின்ற ரமேசன்நாயர் திருவனந்தபுரம் கேரள பல்கலைக்கழகக் கல்லூரியில் மலையாள மொழியில் முதுகலை பயின்றார். பல்கலைக்கழக அளவில் முதலிடத்தில் வெற்றிபெற்றார்

தனிவாழ்க்கை

எஸ்.ரமேசன் நாயர் 1973ல் கேரள இன்ஸ்டிடியூட் ஆப் லாங்வேஜஸ் (மொழியாராய்ச்சி நிறுவனத்தில்) ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தார். 1975ல் இந்திய தேசிய வானொலியில் நிகழ்ச்சி அமைப்பாளராகப் பொறுப்பேற்றார். வானொலிப்பணியில் இருக்கையிலேயே திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதினார். கேரள காங்கிரஸ் அமைச்சர் குறித்து எழுதிய கட்டுரைக்காக அந்தமானுக்கு பணிமாற்றம் அளிக்கப்பட்டபோது பணியை துறந்தார்.