under review

எஸ்.மோகன்குமார்

From Tamil Wiki
Revision as of 21:35, 14 December 2023 by Madhusaml (talk | contribs) (Finalized)
மோகன்குமார்

எஸ்.மோகன்குமார் ( 62) மலையாள எழுத்தாளர். சிறுகதைகள் எழுதிவருகிறார். இலக்கிய மொழிபெயர்ப்பாளர். தமிழில் இருந்து மலையாளத்துக்கும் மலையாளத்தில் இருந்து தமிழுக்கும் மொழியாக்கங்கள் செய்து வருகிறார். இலக்கியச்செயல்பாட்டாளரும்கூட

பிறப்பு, கல்வி

எஸ்.மோகன்குமார் பத்மநாபபுரம் கரிங்கவீட்டில் சதாசிவன் நாயர்- சரஸ்வதி அம்மா இணையரின் மகனாக பிறந்தார், கணிதத்தில் முதுகலைப்பட்டமும், மலையாளம் முதுகலைப்பட்டமும், கணக்கியல் பட்டயப்படிப்பும், நிர்வாகவியல் முதுகலைப்பட்டமும் பெற்றவர் தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம், இந்தி, மலையாளம் மொழிகள் தெரிந்தவர்.

தனிவாழ்க்கை

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 38 ஆண்டுக்காலம் பணியாற்றி ஓய்வுபெற்றார். மனைவி ஶ்ரீலதா. ஶ்ரீஜித் ஶ்ரீநாத் என இரு மகன்கள்

அமைப்புப்பணிகள்

சாகித்ய சௌஹ்ருதவேதி என்னும் இலக்கிய அமைப்பை குழித்துறையில் நடத்தி வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

எஸ்.மோகன்குமார் மலையாளத்தில் சிறுகதைகள் எழுதுகிறார். தமிழிலிருந்து மலையாளத்திற்கும் மலையாளத்தில் இருந்து தமிழுக்கும் மொழியாக்கங்கள் செய்து வருகிறார். குமரிமாவட்டத்தைச் சேர்ந்த புலவர் கே.ரவீந்திரன் எழுதிய வெள்ளிப்பல்லக்கு நாவலை மொழியாக்கம் செய்தார். அ. வெண்ணிலாவின் நீரதிகாரம் என்னும் வரலாற்றுநூலை மொழியாக்கம் செய்துள்ளார்

விருதுகள்

  • பாரதிய சேவா சமாஜ் விருது
  • திருவனந்தபுரம் மலையாள சாகித்ய சமிதி விருது

நூல்கள்

வரலாறு
  • கேரள சாகித்ய சரித்ரம்
  • கன்யாகுமரி ஜில்லயிலே சில பிரமுக வியக்திகள்
சிறுகதை
  • சாயூஜ்யம்
  • வயலற் டலியா
  • உபாசனா
  • கணிக்கொந்ந
  • மஞ்சாடி மணிகள்
கவிதை
  • களிப்பாட்டங்கள்
  • வர்ணப்பகிட்டு
பாடல்
  • கிருஷ்ணாயனம்
மொழியாக்கம்
தமிழுக்கு
  • படியேற்றம் ஆற்றிங்கல் ரவிக்குமார்
  • யானையின் கதை- சும புள்ளிப்றம்
  • ஶ்ரீதர்மசாஸ்தா துதி கதம்பம்
மலையாளத்துக்கு

உசாத்துணை

  • கன்யாகுமரி ஜில்லயிலே சில பிரமுக வியக்திகள்- எஸ்.மோகன்குமார்


✅Finalised Page