being created

எழுதழல் (வெண்முரசு நாவலின் பகுதி - 15)

From Tamil Wiki
Revision as of 21:13, 22 February 2022 by Dr.P.Saravanan (talk | contribs)


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

எழுதழல் (‘வெண்முரசு’ நாவலின் பகுதி - 15)

எழுதழல் (‘வெண்முரசு’ நாவலின் பகுதி - 15) உப பாண்டவர்கள், உப கௌரவர்கள் ஆகியோரைப் பற்றிச் சித்தரித்துள்ளது. பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்குமான பகை மிகவும் முற்றிவிடுகிறது. அந்தப் பகை அவர்களைப் போரை நோக்கி, இட்டுச் செல்கிறது.

பதிப்பு

இணையப் பதிப்பு

‘வெண்முரசு’ நாவலின் 15ஆம் பகுதியான எழுதழலை எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தில் செம்டம்பர் 2017முதல் ஒவ்வொரு நாளும் ஓர் அத்யாயம் என வெளியிடப்பட்டு டிசம்பர் 2017இல் நிறைவுற்றது. இது அவரது இணைய தளத்தில் முற்றிலும் இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது. இணையத்தில் மின் பதிப்பாகவும் இது விலைக்குக் கிடைக்கிறது.

அச்சுப் பதிப்பு

கிழக்கு பதிப்பகம் எழுதழலை அச்சுப் பதிப்பாக வெளியிட்டது.

ஆசிரியர்

‘வெண்முரசு’ நாவலை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன். இந்திய தமிழ் மரபை நவீனக் காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறு வரையறை செய்தவர்.

கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம்

உப பாண்டவர்கள் ஒன்பதுபேர், உப கௌரவர்கள் ஏறத்தாழ 1000 பேர், உப யாதவர்கள் 80 பேர், கர்ணனின் மகன்கள் 10 பேர் என இளைய தலைமுறையினரின் எழுச்சியை ‘எழுதழல்’ வெளிப்படுத்தியுள்ளது.

இளைய யாதவர் எல்லோராலும் தனித்துவிடப்படுகிறார். துரியோதனன் தான் அளித்த வாக்கைத் தவறிவிட்டார். பாண்டவர்களின் குரலுக்குச் செவிசாய்க்க யாருமே இல்லை. ஷத்ரியர்கள் அனைவரும் இளைய யாதவரின் புதிய வேதத்தை எதிர்ப்பதற்கும் பாண்டவர்கள் தமக்குரிய நிலத்தைப் பெறுவதற்கும் ‘போர்’ ஒன்றே தீர்வு என்ற நிலை ஏற்படுகிறது. பாரதவர்ஷமே இரண்டு அணியாகத் திரளவேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது.  நடக்க உள்ள பெரும்போரில், ‘யாருக்கு யார் துணை?’ என்ற வினாவே எழுதழலுக்கு அடிப்படையாகிறது.

பாண்டவர்களின் 13 ஆண்டுகாலக் கடும்வாழ்வுக்குப் பின்னரும் அவர்களுக்கு நல்லது என ஏதும் நிகழவே இல்லை. அவர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் அவர்களின் எழுச்சியைத் தடுக்கும் தடையாகவே அமைந்துவிடுகின்றன. ஒவ்வொருவரும் ‘போர் வேண்டாம்’ என்று மனத்தளவில் நினைத்தாலும் அவர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலும் அவர்களைப் போரை நோக்கியே இழுத்துச் செல்கின்றது.

உப பாண்டவர்கள் ஒன்பதுபேரும் ‘இளமைசூடிய பாண்டவர்களே!’ என்று எண்ண வைத்துவிடுகிறார் எழுத்தாளர் ஜெயமோகன். தர்மரின் மகன்கள் பிரதிவிந்தியனும் யௌதேயனும் பீமனின் மகன்கள் சுதசோமனும் சர்வதரும் அர்சுணனின் மகன்கள் சுருதகீர்த்தியும் அபிமன்யூவும் நகுலனின் மகன்கள் நிர்மித்ரனும் சதானீகனும் சகதேவனின் மகன் சுருதவர்மனும் அவரவர் தந்தையின் இளம்வடிவாகவே அகத்திலும் புறத்திலும் திகழ்கின்றனர்.

எழுதழலுக்கு முந்தைய வெண்முரசின் பகுதிகளில், ‘அபிமன்யூ’ வெறும் சொல்லாகவே மட்டுமே வாசகருக்கு அறிமுகமாகிவந்தான். இந்த எழுதழல் பகுதியில்தான் அவனின் அகத்தையும் புறத்தையும் அழகுறக் காட்டியுள்ளார் எழுத்தாளர் ஜெயமோகன். இளமைக்கே உரிய துள்ளலும் துடிப்பும் மூத்தோர் சொல்மீறலும் தொலைநோக்கற்ற எளிய திட்டமிடல்களும் தனக்கான பாதையைத் தானே வகுத்தலும் தேர்ந்தெடுத்தலும் ஆகிய அனைத்தும் அவனிடம் உள்ளன. இவற்றோடு, புகழுக்காக உயிரைக் காணிக்கையிடத் தயங்கா மனநிலையும் அவனிடம் உள்ளது. தன்னுடைய இலக்கற்ற பெருவிழைவுகளால் தனக்கென வெற்றிகளையும் (குறிப்பாக, சிருங்கபிந்து எனும் ஊரைக் கைப்பற்றுதல்) தோல்விகளையும் (குறிப்பாக, பாணாசுரனிடம் நேருக்கு நேர் போர்புரிந்து தோற்றல்) சேர்த்துக் கொள்கிறான். அபிமன்யூவால் உப கௌரவர்களிடமும் உப யாதவர்களிடமும் எளிதாகத் தன்னை இணைத்துக்கொள்ள முடிகிறது. அதைவிட, அனைத்து மூத்தோரிடமும் எந்த நிலையிலும் தன்னைத் தாழ்த்திக்கொண்டு, அவர்களின் மனத்தில் குடியேறிவிட முடிகிறது. இளைய யாதவரின் அகத்தையும் அர்சுணனின் புறத்தையும் கொண்டவனாக அபிமன்யூவைப் படைத்திருக்கிறார் எழுத்தாளர்.

பாணாசுரன் - அபிமன்யூ போர் குறிப்பிடத்தக்க ஒன்று. பல ஆண்டுகளுக்குப் பின்னர் இளைய யாதவர் தன்னுடைய இருளுக்குள் இருந்து வெளியே வருகிறார். பாணாசுரனைக் களத்தில் வென்றாலும் தன்னுடைய புதிய வேதத்தை ஏற்கச் செய்ய, அவர் அவனிடம் தனிமையில் உரையாட வேண்டியிருக்கிறது. அவனைக் குகைக்கு அழைத்துச் சென்று, பேருண்மையை விளக்குகிறார்.

இதேபோலத்தான் மகத மன்னன் ஜராசந்தனை வீழ்த்துவதற்காகப் பீமன், அர்சுணன் ஆகியோரை அழைத்துச் சென்ற இளைய யாதவர் இறுதியில், தோட்டத்தில் ஜராசந்தனைத் தனிமையில் சந்தித்து உரையாடுகிறார். அதன் பின்பே ஜராசந்தன் உயிர்விடுகிறான்.

இளைய யாதவர் தன்னுடைய எதிரிகளை அவர்களின் இறுதிக்கணத்துக்குச் சற்று முந்திய மீச்சிறுகாலத்துளியில் தனித்துச் சந்திப்பதை வழக்கமாகக் கொள்கிறார் என்றே கருதமுடிகிறது. அவர் அவர்களின் ஆன்மாவுடன் உரையாடி, மெய்மையை உரைக்கிறார் போலும். ஆனால், அவர் சிசுபாலனிடம் அவ்வாறு செய்யவில்லை. சிசுபாலனுக்குத்தான் அவர் நூறுமுறை மன்னிப்புக் கொடுத்துவிட்டாரே! அதற்கு மேலுமா ஒரு தனிச் சந்திப்புத் தேவை? என்றும் எண்ணத் தோன்றுகிறது.   

பலராமரின் மனநிலையை ‘எழுதழில்’தான் நம்மால் மிகச் சரியாக உய்த்துணர முடிகிறது. அவரிடம் எப்போதும் ‘செயல்படுதல்’ என்பது மட்டுமே முனைப்புடன் இருக்கிறது. ‘திட்டமிடுதல்’ என்பது, அவரிடம் இல்லை. ‘சினத்தோடு எழுபவர் இழப்போடு அமர்கிறார்’ என்பர். அது முற்றிலும் பலராமருக்கே பொருந்தும். அதனாலேயே அவர் அஸ்தினபுரியுடன் இணைகிறார், பின்னர் தன்னிலத்தையும் விட்டுக் காடேகுகிறார்.

அபிமன்யூவின் மணநிகழ்வுக்காக வரும் சல்லியரை அஸ்வத்தாமனைக் கொண்டு வழிமறித்து, துரியோதனனைச் சந்திக்க வைக்கும் கணிகர் அதிசூழ்ச்சி. இதனை உய்த்துணர்ந்து, உப பாண்டவர் இருவரைத் துரியோதனனிடம் தூதனுப்பும் இளைய யாதவரின் மறுசூழ்ச்சி. சல்லியருடனான தன்னுடைய சந்திப்பினை உப பாண்டவர்களின் முன்னிலையிலேயே நிகழ்த்தும் துரியோதனனின் உளவிரிவு இவ்விரு சூழ்ச்சிகளையும் தகர்க்கிறது.

எழுதழலில், சிறு சிறு சூழ்ச்சிகளும் நெடுந்தொலைவுத் தூதுகளும் சிறு போர்களும் உப பாண்டவர்கள், உப யாதவர்கள், கர்ணனின் மகன்கள் ஆகியோரைக் கொண்டே நிகழ்த்தப் பட்டுள்ளன. அந்தவகையில், அடுத்த தலைமுறையினரும் மகாபாரதப்போருக்குள் நுழையும் அணிவாயிலாக இந்த எழுதழல் அமைந்துள்ளது எனலாம். 

குந்திதேவி மகாபாரதப்போர் நிகழ எவ்வகையில் முக்கியமோ அதே வகையில் தேவகி அந்தப் போரின் அழிவைத் தளர்த்துவதற்கு முக்கியமானவராகிறார். ‘யாதவர்கள் தங்களுக்குள் போரிடக்கூடாது’ என்றும் ‘யாதவர்களுக்கு எதிராக இளைய யாதவர் போரிடக்கூடாது’ என்றும் சத்தியம் பெற்றுக்கொள்கிறாள். குந்தியும் தேவகியும் யாதவர் குலத்தவர்களே என்பதை நாம் இங்கு மறக்க வேண்டியதில்லை.

இளைய யாதவரின் மனைவிமார்களுக்கு இடையில் நிகழும் குல, குடி, முடி சார்ந்த பூசல்களே, பின்னாளில் அவர்களின் மகன்கள் மத்தியிலும் விரிவாக்கம் கொள்கின்றன. இளைய யாதவரின் எட்டு மனைவியரும் மனத்தளவில் ஒருவருக்கொருவர் முரண்பட்டு எட்டுத் திசையில் நின்றாலும் இளைய யாதவர் நேரில் இருக்கும்போது, அவர்கள் அனைவரும் அவரின்பொருட்டே, அவருக்காகவே ஒரே மனநிலையினைக் கொள்கின்றனர். எட்டு மனைவியருக்கும் அவரே நடுநாயகமாக, திசைநடுவே நின்று, அவர்களை இணைக்கிறார். அவர் இருக்கும்போது மட்டுமே அவர்கள் எண்வரும் ஓர்மைகொள்கின்றனர். எட்டுப்பேரும் இணைந்து ஒரு ராதை என்பதுபோல.

இளைய யாதவர் 14 ஆண்டுகளுக்குப் பின்னர் அவைபுகும் காட்சி மிகச் சிறப்பானது. தன் மகன்கள் உள்ளிட்ட அனைவரும் அவைக்கு வர மறுத்துவிட்ட நிலையில், அவர் தன்னுடைய மாற்றுத்திறனாளியான மகன் முரளியை மட்டும் விரும்பி அழைத்துக்கொள்வது உருக்கமான காட்சி.

யாருமே அவைக்கு வராத சூழலில், மாடுகளை மாலைநேரத்தில் ஒன்றுதிரட்டுவதற்காக இசைக்கப்படும் குழலிசையைத் தன் மகள் மயூரியைக் (ராதை) கொண்டு இசைக்கச் செய்து, மக்களை அவைக்குத் திரட்டும் இளைய யாதவரின் மதிநுட்பம் வியக்கச் செய்கிறது.

கதை மாந்தர்

உசாத்துணை


[[Category:Tamil Content]]