under review

எல். கிருஷ்ணன்

From Tamil Wiki
Revision as of 18:36, 26 October 2022 by Navin Malaysia (talk | contribs) (Created page with "thumb|எல். கிருஷ்ணன் எல். கிருஷ்ணன் (அக்டோபர் 21, 1922), மலாய் திரைப்படத்துறையில் திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு, என பல துறைகளில் ஆளுமை செலுத்தி பெரும் செல்வாக்குடன் திகழ்ந்த க...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
எல். கிருஷ்ணன்

எல். கிருஷ்ணன் (அக்டோபர் 21, 1922), மலாய் திரைப்படத்துறையில் திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு, என பல துறைகளில் ஆளுமை செலுத்தி பெரும் செல்வாக்குடன் திகழ்ந்த கலைஞர்.  மலாய் திரைப்படங்களை நாட்டுப்பற்று, சமூக-குடும்ப விழுமியங்களுடன்  உணர்வு பூர்வமான கதைக்களத்துடன் மேம்படுத்தியதோடு சிறந்த திரைக் கலைஞர்களையும் உருவாக்கினார். திரைப்படத்துறையோடு தொடர்புடைய இசைகூடம், தயாரிப்பு கூடம் போன்ற பல தொழில்துறை வசதிகளையும் உருவாக்கி உள்ளூர் திரைப்படத் துறைக்கும் விளம்பரத்துறைக்கும் ஆக்கம் சேர்த்தார். 

கல்வியும் குடும்பமும்

எல். கிருஷ்ணன் அக்டோபர் 21, 1922 ஆம் ஆண்டு மெட்ராசில் (சென்னையில்) பிறந்து மலாயாவில் குடியேறினார். தந்தையின் பெயர் லெச்சுமணன்.  1941 வரை பினாங்கு புக்கிட் மெர்தாஜாமில் தன் பெற்றோருடன் வாழ்ந்தார். 1941-ல் புக்கிட் மெர்தாஜாம் உயர் பள்ளியில் சீனியர் கெம்ரேஜ் கல்வியை முடித்த பின்னர், 1942 சிங்கப்பூரில் ரெஃபல்ஸ் விடுதியில் வேலைக்குச் சேர்ந்தார். இளம் வயதில் தமிழ்த் திரைப்படங்களை மிகுந்த ஆர்வத்துடன் அரங்குகளில் பார்த்து வளர்ந்தார்.  

இரண்டாம் உலகப்போரின் போது சுபாஸ் சந்திரபோஸின்ஐ.என்.எ ராணுவ படையில் இணைந்தார். ஜப்பானியர்களின் மொழிபெயர்ப்பாளராக சில காலம் பணியாற்றினார். ராணுவத்தில்  பயிற்சிகளுக்குப் பின் இரண்டாம் நிலை லெப்டெனன் தகுதி வரை உயர்ந்தார். போருக்குப் பின் 1946-ல் எல். கிருஷ்ணனை பிரிட்டிஷ்  ராணுவம் மெட்ராசுக்கு திருப்பி அனுப்பியது.  

கலைத்துறை வாழ்க்கை

பி. ரம்பியுடன்

1947ஆம் ஆண்டு சென்னையில்  திரைப்பட துறையில் இணைந்த எல். கிருஷ்ணன், கலைவாணி ஸ்டூடியோவில் துணை இயக்குனராக  'அம்மா' போன்ற சில படங்களில் பணியாற்றினார். 1949-ல் சிங்கப்பூர் திருப்பி அப்போது  சிங்கப்பூர் அம்பாஸ் சாலையில் இருந்த ஷாவ் பிரதஸ் ஸ்டுடியோவில்  திரைப்பட இயக்குனராக பணியில் சேர்ந்தார்.

பொதுவாகவே அக்காலகட்ட மலாய் திரைப்பட இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் இந்தியர்களாகவே இருந்தனர்.  1933-ல் சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்ட ‘லைலா மஞ்னு’ எனும் படம்தான் முதல் மலாய் திரைப்படமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்கியவர் கல்கத்தாவைச் சேர்ந்த  B.S. Rajhans ( Balden Singh Rajhans).  தயாரித்தவர் கல்காத்தாவில் வணிகம் செய்த K.R.S. Chisty.  மேலும் Balakrishna Narayan Rao (B.N.Rao) போன்ற புகழ் பெற்ற மலாய் திரைப்பட இயக்குனர்களும் படங்களை உருவாக்கினர். ஆகவே, அன்றைய மலாய் திரைப்படங்களில் இந்திய திரைப்பட சாயல் அதிகம் இருந்தது. பாடல் நடனம், காதல், இருமை கதாமாந்தர்கள், நகைச்சுவை, உணர்ச்சிகரமான வசனங்கள் என  அமைந்திருந்தன. மலாய் திரைப்பட ரசிகர்களை இது போன்ற ஜனரஞ்சக திரைப்படங்கள் பெரிதும் கவர்ந்தன. ஆகவே எல். கிருஷ்ணன் மலாய் திரைப்பட இயக்குனராக நுழைய ஏற்ற சூழல் அமைந்திருந்தது.

பிரபலமாக இருந்த ஷாவ் பிரதஸ் ஸ்டூடியோவில் (Shaw Bros Studios) எல். கிருஷ்ணன், கே. எம் பாஸ்கர் போன்ற திரைப்படக் கலைஞர்கள் உள்நாட்டு திரைப்படங்கள் பற்றிய சிந்தனையைப் பெற்றனர். பல தொடக்க கால மலாய் திரைப்படங்கள் இக்காலகட்டத்தில் சிங்கப்பூர் ஷாவ் பிரதஸ் ஸ்டூடியோவில் தயாராகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.

எல் 04.jpg

எல். கிருஷ்ணன்  சிக்கப்பூரில்  கெத்தே கெரிஸ் ஸ்டூடியோ (Cathay-Keris ) போன்ற வேறு சில நிறுவனங்களிலும் திரைப்பட இயக்குனராக வேலை செய்தார்.  பின்னர் 1960-ல் தன் நண்பர் ஹொ ஹா லோக்குடன் இணைந்து கோலாலம்பூரில்  மெர்டேக்கா ஸ்டூடியோ என்ற  திரைப்பட நிறுவனத்தைத் தொடங்கினார்.  1970-ல் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறி காயா ஃபிலேம்ஸ் (Gaya films) என்ற சொந்த நிறுவனத்தைத் தொடங்கினார். மேலும் காயா இசை நிறுவனம் (1980), காயா  லேப் (1984) போன்ற திரைத்துறை சார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களையும் தொடங்கி நடத்தினார். டத்தோ எல். கிருஷ்ணன் ஹொல்டிங்ஸ் என்ற திரைப்பட மேம்பாட்டு  நிறுவனத்தையும் தொடங்கினார்.

எல் 02.jpg

எல். கிருஷ்ணன் சிங்கப்பூரில் பி. ரம்லியை (P. Ramle) சந்தித்தார். 1950-ல்,  எல். கிருஷ்ணன் ‘பக்தி’ என்ற தன் முதல் மலாய் திரைப்படத்தை இயக்கினார். Wuthering Heights ,  Les Misérables போன்ற ஐரோப்பிய படங்களின் சாயலில் இப்படக் கதை அமைந்தாலும் உள்ளூர் மக்களைக் கவரும் இசையும் நடனமும் படத்தை வெற்றிபெறச்செய்தன.  அப்படத்தில் பி.ரம்லிக்கு நடிக்கும் முதல் வாய்ப்பு எல். கிருஷ்ணனால் கொடுக்கப்பட்டது.   பி. ரம்லியின் முகத்தோற்றம் சில தயாரிப்பு அதிகாரிகளுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் எல். கிருஷ்ணன் பி. ரம்லியின் குரல் வளத்திலும் பாடும் திறமையாலும்  பெரிதும் கவரப்பட்டார். எல். கிருஷ்ணன் பி. ரம்லியை தொடர்ந்து தன் நான்கு படங்களில் நாயகனாக நடிக்க வைத்தார்.  அதன் பின், பி.ரம்லி மலேசியாவின் தனித்துவமான மாபெரும் பன்முகக் கலைஞனாக உருவானார்.  இந்தியாவில் திரைப்பட நாயகனாகர்களில் முகத்தோற்றத்தை விட பாடும் திறம் உள்ளவர்களே அதிகம் வெற்றி பெருவதை முன்மாதிரியாகக் கொண்டே தான் பி. ரம்லியை நாயகனாக தேர்வு செய்ததாக பின்னர் ஒரு நேர்காணலில் அவர் சொன்னார்.

எல். கிருஷ்ணனின் பல படங்கள் தேசிய விருது பெற்றன. 1952 ஆண்டும் 1957 ஆம் ஆண்டும் இவர் இயக்கிய Penghidupan (வாழ்க்கை), Chinta Gadis Rimba(வனப்பெண்ணின் காதல்) ஆகிய திரைப்படங்களுக்காக  இரண்டு முறை சிறந்த படைப்பாளி விருது பெற்றார்.

1942 முதல் 1970 க்கு உட்பட்ட காலத்தில் திரைப்படத் துறையில் தீவிரமாக இயங்கிய, எல். கிருஷ்ணன், முப்பது மலாய்ப்படங்களை தயாரித்தும் இயக்கியும்,  மலாய் திரைத்துறையில் பெரும் ஆளுமையாக செயல்பட்டார்.  1960-களில் பெரும் புகழ் பெற்ற பி. ரம்லி, மரியா மெனடோ, கஸ்மா பூத்தீ, முஸ்தாஃபா மாரோஃப், எம். அமின், லத்திஃபா ஒமார், ரொஸ்னானி ஜமில் போன்ற கலைஞர்களை எல். கிருஷ்ணன் உருவாக்கினார்.   

விளம்பரத்துறை வளர்ச்சி

எல்ஓ.jpg

1970ஆம் ஆண்டில் எல். கிருஷ்ணன் காயா ஃபிலேம்ஸ் (Gaya films) நிறுவனம் உள்ளூர் விளம்பரங்களை தயாரிப்பதில் முக்கிய பங்கு வகித்தது. உள்நாட்டில் தயாராகும் விளம்பரங்களுக்கு அரசு சிறப்பு கழிவு வழங்க கோரிக்கை வைத்து வெற்றி பெற்றார். அதோடு வெளிநாட்டில் தயாராகும் விளம்பரப்படங்களையும் அரசு ஒலி/ஓளி பரப்புக்குத் தடைவிதித்தது.   மலேசிய பொருட்களுக்கு வெளிநாடுகளில் விளம்பரப்படம் தயாரிக்கும் முறையை காயா ஃபிலேம்ஸ் மாற்றி அமைத்தது. மலேசியாவில் தயாரிக்கப்பட்ட தரமான விளம்பரப்படங்கள் வெளிவரலாயின.

சமூகப் பணிகள்

எல். கிருஷ்ணன் பல சமூக சேவை அமைப்புகளில் ஈடுபட்டுவந்துள்ளார். ரோட்டறி கிலப் தலைவராக பணியாற்றியதோடு, துன் உசேன் ஓன் கண் மருத்துவமனை, முன்னால் கைதிகள் நலச்சங்கம், நேதாஜி மக்கள் நலச்சங்கள், பார்வை மாற்றுதிறனாளிகள் சங்கம் போன்ற அமைப்புகளுக்கு நிதியுதவிகளைச் செய்துள்ளார்.  முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக  (1979-2012)  தீபாவளி பண்டிகையை ஆயிரம் ஆதரவற்ற சிறுவர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இன்றைய வாழ்க்கை

எல். கிருஷ்ணனுக்கு முதல் மனைவியின் வழி பிரேம் என்கிற மகன் இருக்கிறார்.  தற்போதது நூறு வயது நிரைவடையும் எல். கிருஷ்ணன் தாய்லாந்து, பெங்காக் நகரில் தன் தாய்லாந்து துணைவியார் ருக்மணியுடன்( ஜுருனி புவாங்தோங்)  வாழ்ந்து வருகிறார்.  

தன்வரலாறு

  • The Krishnan Odyssey நிழற்பட தொகுப்பு நூல். ( தொகுப்பு பிரேம் கிருஷ்ணன்)

விருதுகள்

  • பல்வேறு அரசு மற்றும் கலைத்துறை விருதுகள்
  • 2016- பேராக் சுல்தானால் விடுதலை ஆளுமை(Tokoh Merdeka negeri Perak) விருது வழங்கப்பட்டது
  • 2013- மகாத்மா காந்தி நினைவு மையத்தின் சிறந்த பொது சேவையாளர் விருது
  • 1995- 12வது  தேசிய திரைப்பட விழாவில் பி. ரம்லி விருது
  • 1996- Galeri Sinema Melayu Award

உசாத்துணை


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.