under review

எம். ஜெயலட்சுமி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 40: Line 40:
* ‘வானொலி நாடகப் புகழ் பட்டர்வொர்த் எம். ஜெயலட்சுமி’ – சிதனா; ஞாயிறு ஓசை 18. 4. 2021
* ‘வானொலி நாடகப் புகழ் பட்டர்வொர்த் எம். ஜெயலட்சுமி’ – சிதனா; ஞாயிறு ஓசை 18. 4. 2021
* ‘திரைகடல் தாண்டி’ சிறுகதை நூல் விமர்சனம் – எம். கருணாகரன்; ஞாயிறு ஓசை
* ‘திரைகடல் தாண்டி’ சிறுகதை நூல் விமர்சனம் – எம். கருணாகரன்; ஞாயிறு ஓசை
{{Being created}}
 
{{Ready for review}}
[[Category:மலேசிய ஆளுமைகள்]]
[[Category:மலேசிய ஆளுமைகள்]]
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 13:55, 1 October 2023

Writer Jaya.jpg

எம். ஜெயலட்சுமி மலேசிய தமிழ் இலக்கிய எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் வானொலி கதை, வானொலி தொடர் நாடகங்கள், சிறுகதைகள், நாவல் எழுதியுள்ளார்.

பிறப்பு, கல்வி

திரு. வை. மாணிக்கம் – திருமதி. பாப்பு இணையருக்கு எம். ஜெயலட்சுமி ஆகஸ்ட் 30, 1954ல் பட்டர்வொர்த், பினாங்கு மாநிலத்தில் பிறந்தார். ஏழு உடன் பிறப்புகளுடன் பிறந்தவர். இவர் ஐந்தாவது பெண்.

எம். ஜெயலட்சுமி கம்போங் பங்காளி, சரஸ்வதி சபா பாடசாலையில் ஆரம்பக்கல்வியை முடித்தார். பட்டர்வொர்த் கான்வென்ட் பள்ளியில் இடைநிலைக் கல்வியை நிறைவு செய்தார். இவர் திருமணம் செய்துக் கொள்ளவில்லை.

இலக்கிய ஈடுபாடு

எம். ஜெயலட்சுமி மலேசிய சிங்கை வானொலிகளுக்கு நாடகங்கள், சிறுகதைகள் எழுதியுள்ளார். காட்சியும் கானமும், இசை சொல்லும் கதை எனும் நிகழ்சிகளுக்கு வானொலி தொடர் நாடகங்கள் எழுதியுள்ளார்.

இவரது முதல் சிறுகதை ‘காற்று அறுந்த பட்டம்’ 1971ல் தமிழ் மலர் நாளிதழில் வெளிவந்தது. இந்தியன் மூவி நியூஸ், வானம்பாடி (மலேசியா) , தென்றல் போன்ற போன்ற வார மாத இதழ்களிலும் எழுதியுள்ளார். ஒளி கீற்று எனும் நாவல் எழுதியுள்ளார்.

இலக்கிய அமைப்பு

செபராங் பிராய் எழுத்தாளர் சங்கத்தில் இருமுறை பொருளாளராக இருந்துள்ளார். பினாங்கு தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் இரு தவணைகளாக செயலவை உறுப்பினராக உள்ளார்.

இலக்கிய மதிப்பு

Writer Jaya 3.jpg

70களின் மலேசிய தமிழ் வானொலி நாடக பொற்காலத்தின் முக்கிய எழுத்தாளர். வானொலி நாடகத்தின் இரட்டை எழுத்தாளர்களென எம். ஜெயலட்சுமியும் கம்பார் எஸ். வேலுமதியும் நட்புடன் போட்டி போட்டு எழுதியுள்ளனர். இருப்பினும், இவரது வானொலி நாடகத்தை ஆவணப்படுத்தி வைக்கவில்லை. தலைப்புக்கேற்ற புதுக்கவிதைகளை எழுதி வருகிறார்.

படைப்புகள்

சிறுகதை

  • திரைகடல் தாண்டி, இனிய நந்தவனம் பதிப்பகம், திருச்சி, (2021)

நாவல்

  • ஒளி கீற்று (2007)

பரிசு/ விருது

  • முருகு சுப்பிரமணியம் விருது, மலேசியா எழுத்தாளர் சங்கம் (1991)
  • பேரவை கதைகள் (1993-1995), இரண்டாம் பரிசு
  • பி.ஜெ.கே விருது, பினாங்கு மாநில அரசு (1996)
  • Writer Jaya 2.jpg
    ஒளி கீற்று, ஆறுதல் பரிசு தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம் மற்றும் மலாயா பல்கலைகழகம் இணைந்து நடத்திய போட்டி (2007)

உசாத்துணை

  • ‘வானொலி நாடகப் புகழ் பட்டர்வொர்த் எம். ஜெயலட்சுமி’ – சிதனா; ஞாயிறு ஓசை 18. 4. 2021
  • ‘திரைகடல் தாண்டி’ சிறுகதை நூல் விமர்சனம் – எம். கருணாகரன்; ஞாயிறு ஓசை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.