under review

எம். ஏ. நுஃமான்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
 
(30 intermediate revisions by 7 users not shown)
Line 1: Line 1:
{{Read English|Name of target article=M.A. Nuhman|Title of target article=M.A. Nuhman}}
[[File:எம். ஏ. நுஃமான்.png|thumb|எம். ஏ. நுஃமான்]]
[[File:Nuk.png|thumb|271x271px|எம்.ஏ. நுஃமான்]]
[[File:Nuk.png|thumb|271x271px|எம்.ஏ. நுஃமான்]]
எம்.ஏ. நுஃமான் (பிறப்பு: ஆகஸ்ட் 10, 1944) ஈழத்து தமிழ் அறிஞர். பேராசிரியர், கவிஞர், எழுத்தாளர், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர், ஆய்வாளர், இதழாளர் என பன்முகம் கொண்டவர்.
எம்.ஏ. நுஃமான் (பிறப்பு: ஆகஸ்ட் 10, 1944) ஈழத்து தமிழ் அறிஞர். பேராசிரியர், கவிஞர், எழுத்தாளர், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர், ஆய்வாளர், இதழாளர் என பல துறைகளில் செயல்பட்டவர். நவீனத் தமிழ் உரைநடைக்கான இலக்கணத்தை உருவாக்க பணியாற்றியவர்
 
== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனைக்குடியில் ஆகஸ்ட் 10, 1944-ல் மக்புல் ஆலிமுக்கும் சுலைஹா உம்மாவிற்கும் மகனாகப் பிறந்தார். தந்தை ஒரு மௌலவி, அரபு ஆசிரியர்.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனைக்குடியில் ஆகஸ்ட் 10, 1944-ல் மக்புல் ஆலிமுக்கும் சுலைஹா உம்மாவிற்கும் மகனாகப் பிறந்தார். தந்தை ஒரு மதப்பணியாளர், அரபு மொழி ஆசிரியர்.
 
நுஃமான் தொடக்கக் கல்வியைக் கல்முனைக்குடி அரசினர் ஆண்கள் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியைக் கல்முனை உவெசுலி உயர்தரப் பாடசாலையிலும் படித்தார். பின்னர் 15 ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். அட்டாளைச் சேனை அரசினர் ஆசிரியர் கல்லூரியில் ஆசிரியப் பயிற்சி பெற்றார். இளங்கலை மொழியியல் பாடத்தை இலங்கைப் பல்கலைக்கழகத்தின் கொழும்பு வளாகத்தில்பயின்றார் (1973). அதுபோல் முதுகலைத் தமிழ் இலக்கியப் பாடத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பயின்றார் (1982). அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் முனைவர் பட்ட ஆய்வைப் பேராசிரியர் குமாரசாமி இராசா அவர்களின் மேற்பார்வையில் மூன்றாண்டுகள் செய்தார்.

நுஃமான் தொடக்கக் கல்வியைக் கல்முனைக்குடி அரசினர் ஆண்கள் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியைக் கல்முனை உவெசுலி உயர்தரப் பாடசாலையிலும் படித்தார். பின்னர் 15 ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். அட்டாளைச் சேனை அரசினர் ஆசிரியர் கல்லூரியில் ஆசிரியப் பயிற்சி பெற்றார். இளங்கலை மொழியியல் பாடத்தை இலங்கைப் பல்கலைக்கழகத்தின் கொழும்பு வளாகத்தில் பயின்றார் (1973). அதுபோல் முதுகலைத் தமிழ் இலக்கியப் பாடத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பயின்றார் (1982). அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் முனைவர் பட்ட ஆய்வைப் பேராசிரியர் குமாரசாமி இராசா அவர்களின் மேற்பார்வையில் மூன்றாண்டுகள் செய்தார்.
== ஆசிரியப் பணி ==
== ஆசிரியப் பணி ==
1976 - 1982-ல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ்விரிவுரையாளராகப் பணியாற்றினார். பின்னர் மொழியியல் விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1991-ல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலைவிரிவுரையாளராகப் பணியேற்று பேராசிரியர்நிலைக்கு உயர்ந்தார்(2001). இதன் இடையே இவர் தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராக ஓராண்டுப் பணிபுரிந்து (1988) இலக்கணநூல் ஒன்றை உருவாக்கினார். இலங்கையின் திறந்தநிலைப் பல்கைலக்கழகத்திலும், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திலும்(1999-2000), மலேயா பல்கலைக்கழகத்திலும் (2007-2008) வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார்.
1976 - 1982-ல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ்விரிவுரையாளராகப் பணியாற்றினார். பின்னர் மொழியியல் விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1991-ல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலைவிரிவுரையாளராகப் பணியேற்று பேராசிரியர்நிலைக்கு உயர்ந்தார் (2001). இதன் இடையே இவர் தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராக ஓராண்டுப் பணிபுரிந்து (1988) இலக்கணநூல் ஒன்றை உருவாக்கினார். இலங்கையின் திறந்தநிலைப் பல்கைலக்கழகத்திலும், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் (1999-2000), மலேயா பல்கலைக்கழகத்திலும் (2007-2008) வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார்.

தம் பணிக்காலத்தில் இலங்கை அரசின் பல்கலைக்கழகம் சார்ந்த பல்வேறுகல்விக்குழுக்கள், நிறுவனங்களில் கல்வி குறித்த அறிவுரைஞர் குழுவில் இடம்பெற்று பணிபுரிந்தார். அயல்நாட்டு ஆய்வேடுகளை மதிப்பீடுசெய்யும் அயல்நாட்டுத் தேர்வாளராகவும் பணிபுரிந்தார். இலங்கையிலும் இந்தியா உள்ளிட்ட பிறநாடுகளிலும் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்குகளில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரை வழங்கினார்.
தம் பணிக்காலத்தில் இலங்கை அரசின் பல்கலைக்கழகம் சார்ந்த பல்வேறுகல்விக்குழுக்கள், நிறுவனங்களில் கல்வி குறித்த அறிவுரைஞர் குழுவில் இடம்பெற்று பணிபுரிந்தார். அயல்நாட்டு ஆய்வேடுகளை மதிப்பீடு செய்யும் அயல்நாட்டுத் தேர்வாளராகவும் பணிபுரிந்தார். இலங்கையிலும் இந்தியா உள்ளிட்ட பிறநாடுகளிலும் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்குகளில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரை வழங்கினார்.
[[File:Nuk000000.png|thumb|232x232px|பாரதியின் மொழிச் சிந்தனைகள்]]
[[File:Nuk000000.png|thumb|232x232px|பாரதியின் மொழிச் சிந்தனைகள்]]
 
== இதழியல் ==
== இலக்கிய வாழ்க்கை ==
நுஃமான் 1969 - 1970-ல் 'கவிஞன்' என்ற பெயரில் காலாண்டு இதழை நடத்தினார்.  
1969 - 1970-ல் 'கவிஞன்' என்ற பெயரில் காலாண்டு இதழை நடத்தினார். வாசகர் சங்கம் என்ற பெயரில் பதிப்பகம் நிறுவி அதன் வழியாகத் தரமான நூல்களைவெளியிட்டவர். பாலத்தீன நாட்டுக் கவிஞர்கள் எழுதிய கவிதைகளை நுஃமான் மொழிபெயர்த்துள்ளார். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தொடர்ந்து மொழியாய்வுகளிலும், தமிழாய்வுகளிலும் ஈடுபட்டு வருகிறார். நுஃமானின் ஆளுமை பன்முகப்பட்டு இருந்தாலும் மொழியியல்துறையிலும் குறிப்பாக இலங்கையில் உள்ள முசுலிம்மகளின் வழக்கில் உள்ள தமிழ்குறித்த நல்ல ஆய்வுகளை நிகழ்த்தியவர்.
== இலக்கியவாழ்க்கை ==
 
எம்.ஏ.நுஃமான் வாசகர் சங்கம் என்ற பெயரில் பதிப்பகம் நிறுவி அதன் வழியாகத் தரமான நூல்களைவெளியிட்டவர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். நுஃமானின் பணிகள் கவிதைகள், மொழியியல் ஆய்வுகள், இலக்கியத் திறனாய்வு என மூன்று களங்களைச் சேர்ந்தவை.  
நுஃமான் பதிப்பித்த "பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்" என்ற நூல் குறிப்பிடத்தக்க நூலாகும். இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தோன்றிய ஈழத்துப் புதுக்கவிதை வளர்ச்சியை அறிவதற்கு இந்த நூல் மிகுதியும் பயன்படும்.ஈழத்தின் புதுமைப் படைப்பாளியான மகாகவி தொடங்கி அவர் மகன் சேரன் வரையிலான ஐந்து தலைமுறைக் கவிஞர்களின் படைப்புகளைக் காட்டி ஈழத்துக்கவிதை மரபை நாம் புரிந்துகொள்ள உதவியுள்ளார்.
====== கவிதை ======
 
==== கவிஞர் ====
[[File:Nuk00099.png|thumb|301x301px|பாலஸ்தீனக் கவிதைகள்]]
[[File:Nuk00099.png|thumb|301x301px|பாலஸ்தீனக் கவிதைகள்]]
இயல்பிலேயே கவிதை எழுதுவதில் நாட்டம் கொண்டவர். பல கவிதை நூல்களை வெளியிட்டுள்ளதுடன் ஈழத்துக் கவிஞர்களின் படைப்புகளை நூல்களாக்கி வெளியிட்டார். இலங்கைக் கவிஞர்களின் படைப்புகளைத் தமிழகத்திற்குத் திறனாய்வுகளின் வழி அறிமுகப்படுத்தினார். 16-ஆம் அகவையில் கவிதை எழுதத் தொடங்கியவர்.கவிஞர் நீலவாணன் வழியாக இலக்கிய உலகில் அடி எடுத்துவைத்தவர். நீலவாணன்தான் நுஃமானுக்கு மகாகவி,முருகையன்,புரட்சிக் கமால் அண்ணல் போன்றோரின் கவிதைகளை அறிமுகப்படுத்தினார்.'நெஞ்சமே நஞ்சுக்கு நேர்' என்ற ஈற்றடிகொண்டு நுஃமான் எழுதிய பாடல் வீரகேசரியில் வெளிவந்தது. 1963 முதல் மகாகவி பழக்கம் ஏற்பட்டது. தொடக்கத்தில் ஆன்மீகச் சிந்தனையின் ஆதிக்கம்நுஃமானுக்கு இருந்துள்ளது. 1967 பிறகு இதிலிருந்து விடுபட்டுத் தனிமனித உணர்வுகள், சமூகப் பிரச்சனைகளை மையமிட்ட படைப்புகளைப் படைத்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பொழுது கவிதாநிகழ்வு என்னும் நிகழ்ச்சியை நடத்தினார். கவியரங்குகள் பலவற்றில்கலந்துகொண்டு கவிதை பாடியவர்.கவியரங்குகளின் போக்கு பற்றி இவர் வரைந்த ஒரு கட்டுரை கவியரங்குகள் சமூகத்தில் பெற்றிருந்த ஏற்ற இறக்கங்களைக் குறிப்பிடுவதாகும். கவிதை பற்றிய தம் எண்ணங்களை "அழியா நிழல்கள்" தொகுப்பில் பதிவுசெய்துள்ளார். அழியா நிழல் தொகுப்பு 1964-1979 காலகட்டத்தில் நுஃமான் எழுதிய கவிதைகளின் தொகுப்பாக வந்துள்ளது.  
நுஃமான் தன் பதினாறாம் வயதில் கவிதை எழுதத் தொடங்கியவர்.கவிஞர் [[நீலவாணன்]] வழியாக இலக்கியம் அறிமுகமானது. நீலவாணன்தான் நுஃமானுக்கு மகாகவி, [[முருகையன்]],புரட்சிக் கமால் அண்ணல் போன்றோரின் கவிதைகளை அறிமுகப்படுத்தினார்.'நெஞ்சமே நஞ்சுக்கு நேர்' என்ற ஈற்றடிகொண்டு நுஃமான் எழுதிய பாடல் வீரகேசரியில் வெளிவந்தது.  

==== ஆய்வு ====
1963 முதல் [[மகாகவி]]யுடன் பழக்கம் ஏற்பட்டது. தொடக்கத்தில் ஆன்மீகச் சிந்தனையின் ஆதிக்கம் நுஃமானுக்கு இருந்துள்ளது. 1967க்குப்பின் முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தொடர்பால் தனிமனித உணர்வுகள், சமூகப் பிரச்சனைகளை சார்ந்த படைப்புகளைப் படைத்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பொழுது கவிதாநிகழ்வு என்னும் நிகழ்ச்சியை நடத்தினார். கவியரங்குகள் பலவற்றில்கலந்துகொண்டு கவிதை பாடியிருக்கிறார். கவியரங்குகளின் போக்கு பற்றி இவர் வரைந்த ஒரு கட்டுரை கவியரங்குகள் சமூகத்தில் பெற்றிருந்த ஏற்ற இறக்கங்களைக் குறிப்பிடுவதாகும். கவிதை பற்றிய தம் எண்ணங்களை "அழியா நிழல்கள்" தொகுப்பில் பதிவுசெய்துள்ளார். பாலத்தீன நாட்டுக் கவிஞர்கள் எழுதிய கவிதைகளை நுஃமான் மொழிபெயர்த்துள்ளார். "பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்" என்ற நூல் குறிப்பிடத்தக்க நூலாகும். இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தோன்றிய ஈழத்துப் புதுக்கவிதை வளர்ச்சியை அறிவதற்கு இந்த நூல் மிகுதியும் பயன்படும்
மொழியியல், இலக்கணம்,திறாய்வு, நாட்டுப்புறவியல், சிறுகதை, திரைப்படம், நாடகம், புதினம், பதிப்புத்துறை எனப் பன்முக வடிவங்களையும் ஆய்வுக்கு உட்படுத்தினார். மார்க்சிய வழியில் திறனாய்வதில் வல்லவர்.பாரதியார் படைப்புகளை மொழியியல் வழி ஆராய்ந்து வெளிப்படுத்தினார்.
====== மொழியியல் ======
நுஃமான் கல்வித்துறை சார்ந்த முறைமையை பின்பற்றிய ஆய்வாளர். இலக்கணம், இலக்கியங்களின் சமூகவியல் உள்ளடக்கம், மொழியியல் பரிணாமம் ஆகியவை சார்ந்து குறிப்பிடத்தக்க ஆய்வுகளைச் செய்திருக்கிறார்,

தமிழ், சிங்கள மொழிகளின் பெயர்த்தொடர் அமைப்பு ஒரு முரண்நிலை ஆய்வு (A Contrastive Study of the Structure of the Noun Phrase in Tamil and Sinhala) என்னும் தலைப்பில் இவர் நிகழ்த்திய முனைவர் பட்ட ஆய்வு தமிழ் சிங்களமொழி குறித்த நல்ல ஆய்வாக அறிஞர் உலகால் குறிப்பிடப்படுகிறது. தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்காக இவர் செய்தகுறுகியகாலத் திட்டப் பணியாய்வில் "மட்டக்களப்பு முசுலிம் தமிழில் கடன்வாங்கப் பெற்றுள்ள அரபுச் சொற்கள்" என்னும் ஆய்வு குறிப்பிடத்தகுந்த ஒன்று. 1984). "மட்டக்களப்பு முசுலிம் தமிழ்ச் சொற்றொகை ஆய்வு" என்னும்தலைப்பில் முதுகலைப் பட்டத்திற்கு வழங்கிய ஆய்வேடு முசுலிம் மக்களின் தமிழ்ச்சொற்கள் குறித்த பயன்பாடுகளைக் காட்டும் ஆய்வாக உள்ளது.
தமிழ், சிங்கள மொழிகளின் பெயர்த்தொடர் அமைப்பு ஒரு முரண்நிலை ஆய்வு (A Contrastive Study of the Structure of the Noun Phrase in Tamil and Sinhala) என்னும் தலைப்பில் இவர் நிகழ்த்திய முனைவர் பட்ட ஆய்வு தமிழ் சிங்களமொழி குறித்த நல்ல ஆய்வாக அறிஞர் உலகால் குறிப்பிடப்படுகிறது. தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்காக இவர் செய்த குறுகியகாலத் திட்டப் பணியாய்வில் "மட்டக்களப்பு முசுலிம் தமிழில் கடன்வாங்கப் பெற்றுள்ள அரபுச் சொற்கள்" என்னும் ஆய்வு குறிப்பிடத்தகுந்த ஒன்று. 1984). "மட்டக்களப்பு முசுலிம் தமிழ்ச் சொற்றொகை ஆய்வு" என்னும் தலைப்பில் முதுகலைப் பட்டத்திற்கு வழங்கிய ஆய்வேடு முசுலிம் மக்களின் தமிழ்ச்சொற்கள் குறித்த பயன்பாடுகளைக் காட்டும் ஆய்வாக உள்ளது.
 
====== இலக்கியத் திறனாய்வு ======
==== திறனாய்வு ====
[[File:Nuk9.png|thumb|280x280px|அடிப்படைத் தமிழ் இலக்கணம்]]
[[File:Nuk9.png|thumb|280x280px|அடிப்படைத் தமிழ் இலக்கணம்]]
தமிழகத்தில் வெளிவந்த அனைத்துப் படைப்புகளையும் உற்றுநோக்கிப்படித்து திறனாய்வு செய்துள்ளார். ஈழத்துக்கவிதை இதழ்கள் என்ற தலைப்பில் இவர் எழுதிய கட்டுரை ஈழத்தில் வெளிவந்த, கவிதைப்பணியாற்றிய பல இதழ்களை அறிமுகம் செய்கிறது. 1955-ல் வெளிவந்த 'தேன்மொழி' என்ற முதல் கவிதை இதழ் பற்றியும், மகாகவியும் வரதர் ஆகிய இருவரும் இதனை நடத்தினர் எனவும் 16 பக்க மாத இதழாக இது வந்தது என்றும் குறிப்பிடும் நுஃமான் சோமசுந்தரப் புலவரின் பெருமை சொல்வதையும் விளக்கியுள்ளார். அதுபோல் சமகாலப் படைப்புகளான புதினங்கள்,சிறுகதைகள்
தமிழகத்தில் வெளிவந்த படைப்புகளை உற்றுநோக்கிப்படித்து திறனாய்வு செய்துள்ளார். ஈழத்துக்கவிதை இதழ்கள் என்ற தலைப்பில் இவர் எழுதிய கட்டுரை ஈழத்தில் வெளிவந்த, கவிதைப்பணியாற்றிய பல இதழ்களை அறிமுகம் செய்கிறது. சமகாலப் படைப்புகளான புதினங்கள்,சிறுகதைகள் பற்றிய திறனாய்வும் செய்துள்ளார்."ஈழத்துத் தமிழ்நாவல்களின் மொழி"என்னும் கட்டுரையில் ஈழத்துத்தமிழ் நாவலில் இடம்பெற்றுள்ள மொழியின் பரிணாமத்தைச் சான்றுகளுடன் விளக்கியுள்ளார். நவீனத் தமிழ்க்காவியங்கள் என்ற தலைப்பில் ஈழத்தில் தோன்றிய நவீனத் தமிழ்க்காவியங்கள் பற்றி ஆராய்ந்துள்ளார். ஈழத்தில் தோன்றிய பா நாடகங்கள் பற்றியும் ஆராய்ந்து எழுதியுள்ளார்.
பற்றிய திறனாய்வும் செய்துள்ளார்."ஈழத்துத் தமிழ்நாவல்களின் மொழி"என்னும் கட்டுரையில் ஈழத்துத்தமிழ் நாவலில் இடம்பெற்றுள்ள மொழியின் பாங்கினைச் சான்றுகளுடன் விளக்கியுள்ளார். நவீனத் தமிழ்க்காவியங்கள் என்ற தலைப்பில் ஈழத்தில் தோன்றிய நவீனத் தமிழ்க்காவியங்கள் பற்றி ஆராய்ந்துள்ளார். ஈழத்தில் தோன்றிய பா நாடகங்கள் பற்றியும் ஆராய்ந்து எழுதியுள்ளார்.
====== பதிப்பாசிரியர் ======
நுஃமான் அவர்கள் பதிப்பாளராக இருந்து பல நூல்கள் வெளிவருவதற்குக் காரணமாக இருந்துள்ளார். மகாகவியின் படைப்புகளை பதிப்பித்தார். மகாகவியின் கவிதைகள் குறித்த திறனாய்வுகளை எழுதினார். நாட்டார் பாடல்கள் என்ற நூல் பதிப்பிக்க இணைப் பதிப்பாசிரியராகப் பணிபுரிந்தவர் நுஃமான்.
== இலக்கிய இடம் ==
நுஃமான் முதன்மையாக கல்வித்துறையாளர். கல்வித்துறைக்குரிய புறவயமான ஆய்வுமுறைமையை இலக்கியம் உள்ளிட்ட தளங்களிலும் பயன்படுத்தினார். அடிப்படையில் மார்க்ஸிய சார்புள்ள இலக்கிய நோக்கு கொண்டவராயினும் [[க.கைலாசபதி]] , [[கார்த்திகேசு சிவத்தம்பி]] போன்றவர்களிடமுள்ள கட்சிச்சார்பு நிலைபாடுக்கு பதிலாக புறவயமான ஆய்வுச்சட்டகத்தையே எப்போதும் கையாண்டார். ஆகவே தனிப்பட்ட ரசனை அல்லது தனிப்பட்ட சார்புநிலைகளுக்கு அப்பாற்பட்ட சமநிலை கொண்டவையாக நுஃமானின் ஆய்வுகள் அமைந்தன. 1985 முதல் தமிழின் பின்நவீனத்துவச் சிந்தனைகள் அனைத்தையும் நிராகரிக்கும் பார்வையுடன் முன்வைக்கப்பட்டபோது அந்த மிகையான ஆர்வத்துக்கு எதிராக நிதானமான கல்வித்துறை சார்ந்த முறைமையை முன்வைத்து விவாதிப்பவராக நுஃமான் செயல்பட்டார்.  

==== பதிப்பாசிரியர் ====
நுஃமானின் மொழியியல் ஆய்வுகள் அத்துறையில் குறிப்பிடத்தக்க சாதனைகளாகக் கருதப்படுகின்றன. மொழியின் வளர்ச்சிப் பரிணாமத்துக்கு ஏற்ப அதை மறுவரையறை செய்து இலக்கணப்படுத்தும் பணியில் நுஃமான் முக்கியமான பங்களிப்பை ஆற்றியிருக்கிறார். நுஃமானின் இலக்கியப் பங்களிப்பு அவர் தொடர்ச்சியாக ஈழத்துக் கவிதைகளை தமிழகச் சூழலில் அறிமுகம் செய்துகொண்டே இருந்ததிலும், பாலஸ்தீனக் கவிதைகளை மொழியாக்கம் செய்ததிலும் உள்ளது. 1980 முதல் தமிழில் புதுக்கவிதை எழுதியவர்களில் குறிப்பிடத்தக்கவராக இருந்த நுஃமான் இலங்கையின் பிற்கால அரசியல்சூழல் காரணமாகவும், தன் ஆய்வுப்பணிகள் காரணமாகவும் அதில் தீவிரமாக ஈடுபடவில்லை. தொடக்ககாலத்தில் நுஃமான் எழுதிய சிறுகதைகள் வண்ணதாசன் போன்றவர்களால் எழுதப்பட்ட மென்மையான உணர்வுகளை நுணுக்கமாகச் சொல்லும் கதைகளின்பாற்பட்டவை. ஆனால் கதைகளிலும் அவர் தொடர்ந்து ஈடுபாடு காட்டவில்லை.  
நுஃமான் அவர்கள் பதிப்பாளராக இருந்து பல நூல்கள் வெளிவருவதற்குக் காரணமாக
இருந்துள்ளார். மகாகவியின் படைப்புகளை பதிப்பித்தார். மகாகவியின் கவிதைகள் குறித்த திறனாய்வுகளை எழுதினார். நாட்டார் பாடல்கள் என்ற நூல் பதிப்பிக்க இணைப் பதிப்பாசிரியராகப் பணிபுரிந்தவர்.

== நூல் பட்டியல் ==
இன்று நுஃமான் அவருடைய இலக்கண ஆய்வுகள், மார்க்ஸிய நோக்கிலான இலக்கியத் திறனாய்வுகள், மொழியியல் ஆய்வுகளுக்காக குறிப்பிடப்படுபவராக திகழ்கிறார்.
* [[File:Nuk000.png|thumb|263x263px|திறனாய்வுக் கட்டுரைகள்]]பாரதியின் மொழிச் சிந்தனைகள்: ஒரு மொழியியல் நோக்கு
== விருது ==
* 2011-ம் ஆண்டிற்கான விளக்கு விருது எம்.ஏ. நுஃமான் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
== நூல்கள் ==
====== கவிதைகள் ======
* மழைநாட்கள் வரும், (அன்னம்,சிவகங்கை 1983)
* அழியா நிழல்கள், நர்மதா, 1982
* தாத்தாமாரும் பேரர்களும் - நெடுங்கவிதைகள், கல்முனை,1977
* பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், க்ரியா, 1984
====== மொழிபெயர்ப்புக் கவிதைகள் ======
* பாலஸ்தீனக்கவிதைகள், முப்பது கவிஞர்களின் 109 கவிதைகள், அடையாளம், 2008,
* மொகமூத் தர்விஸ் கவிதைகள், அடையாளம், 2008
* பாலஸ்தீனக்கவிதைகள், 15 கவிஞர்களின் 71 கவிதைகள், மூன்றாவது மனிதன் வெளியீடு,2000,
* காற்றில் மிதக்கும் சொற்கள் ( மலாய் மொழி கவிதைகள்)
* இரவின் குரல் ( இநதோனேசிய மொழி கவிதைகள் )
====== மொழிபெயர்ப்புக் கட்டுரை நூல்கள் ======
* கடப்பாடு அல்லது சுயாதீனம், இசுலாமியப் பெண்கள் பற்றிய சட்டப் பிரச்சினைகள், கொழும்பு, 2004
* இனமுரண்பாடு வரலாற்றியலும் கொழும்பு, 2000
* முஸ்லிம் பெண்களும் அரசியல் தலைமைத்துவமும், முஸ்லிம் பெண்கள் ஆய்வு மற்றும் செயல்பாட்டு அமைப்பு, கொழும்பு, 1999
====== இலக்கியவிமர்சனம் ======
* மொழியும் இலக்கியமும் (காலச்சுவடு,2006)
* திறனாய்வுக் கட்டுரைகள் (அன்னம்,சிவகங்கை 1986)
* சமூக யதார்த்தமும் இலக்கியப் புனைவும்
* பாரதியின் மொழிச்சிந்தனைகள்: செளத் விஷன்,சென்னை,1999
* மொழியும் இலக்கியமும்
* மொழியும் இலக்கியமும்
* மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும் (அன்னம்,சிவகங்கை,1987)
====== இலக்கணநூல்கள் ======
* இருபதாம் நூற்றாண்டு ஈழத் தமிழ் இலக்கியம், இணைப்பதிப்பாசிரியர், 1979
* ஆரம்ப இடைநிலை வகுப்புகளில் தமிழ் மொழி கற்பித்தல்
* ஆரம்ப இடைநிலை வகுப்புகளில் தமிழ் மொழி கற்பித்தல்
* பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்
====== இலக்கியவரலாறு ======
* அழியா நிழல்கள்
* இருபதாம் நூற்றாண்டு ஈழத் தமிழ் இலக்கியம், இணைப்பதிப்பாசிரியர், 1979
* பலஸ்தீனக் கவிதைகள்
====== தொகுப்பாசிரியர் ======
* மழை நாட்கள் வரும்
* மஹாகவி கவிதைகள், (தொகுப்பாசிரியர்,அன்னம், 1984 )
* தாத்தாமாரும் பேரர்களும்
* மஹாகவியின் வீடும் வெளியும், கல்முனை வாசகர் வட்டம், 1973
* திறனாய்வுக் கட்டுரைகள்
* மஹாகவியின் கோடை, கல்முனை வாசகர் வட்டம், 1970.
* அடிப்படைத் தமிழ் இலக்கணம்
====== ஆங்கிலம் ======
* இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம்
* A Contrastive Grammar of Tamil and Sinhala Noun Phrase
 
* Sri Lankan Muslims - Ethnic Identity within Cultural Diversity
* Understanding Sri Lankan Muslim Identity
எம்.ஏ.நுஃமானின் நூல்கள் இணைய நூலகத்தில் வாசிக்கக் கிடைக்கின்றன ([https://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AF%81%E0%AE%83%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D,_%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%8F. இணைப்பு])
== இதர இணைப்புகள் ==
== இதர இணைப்புகள் ==
* [http://vallinam.com.my/navin/?p=869 பாவலர் சரித்திர தீபகம்]
* [http://vallinam.com.my/navin/?p=869 பாவலர் சரித்திர தீபகம்]
*[http://vallinam.com.my/navin/?p=869 இசங்களை விமர்சன ரீதியில் அணுக வேண்டும்]
*[http://vallinam.com.my/navin/?p=869 இசங்களை விமர்சன ரீதியில் அணுக வேண்டும்]
==உசாத்துணை==
== உசாத்துணை ==
*[http://muelangovan.blogspot.com/2009/02/blog-post_15.html பேராசிரியர் ம.ஆ.நுஃமான் (இலங்கை) | முனைவர் மு.இளங்கோவன் (muelangovan.blogspot.com)]  
*[https://muelangovan.blogspot.com/2009/02/blog-post_15.html பேராசிரியர் ம.ஆ.நுஃமான் (இலங்கை) | முனைவர் மு.இளங்கோவன் (muelangovan.blogspot.com)]
*[https://ta.xn----7sbiewaowdbfdjyt.pp.ua/8770/1/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%83%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.html எம். ஏ. நுஃமான் | ta.xn----7sbiewaowdbfdjyt.pp.ua]
* [https://ramasamywritings.blogspot.com/2013/05/blog-post_5.html எனக்குள் நுழைந்த எம்.எ. நுஃமான்: அ.ராமசாமி]
{{Standardised}}
*[https://azhiyasudargal.wordpress.com/category/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%83%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/ அழியாச்சுடர்கள் எம் ஏ நுஃமான்]
*[https://vanemmagazine.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/ https://vanemmagazine.com/%எம்.ஏ.நுஃமான்D/]
*[https://iravie.com/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE/ https://iravie.com/%E0%AE%ஈழத்துக் கவிதை இதழ்கள்E/]
*https://www.suyaanthan.com/2018/05/blog-post_19.html
*https://www.jaffnamuslim.com/2013/06/blog-post_7592.html
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:ஈழத்து ஆளுமைகள்]]
[[Category:எழுத்தாளர்கள்]]
[[Category:கவிஞர்கள்]]
[[Category:இதழாளர்கள்]]
[[Category:இலக்கிய விமர்சகர்கள்]]
[[Category:மொழிபெயர்ப்பாளர்கள்]]
[[Category:பேராசிரியர்கள்]]
[[Category:Spc]]

Latest revision as of 07:25, 24 February 2024

To read the article in English: M.A. Nuhman. ‎

எம். ஏ. நுஃமான்
எம்.ஏ. நுஃமான்

எம்.ஏ. நுஃமான் (பிறப்பு: ஆகஸ்ட் 10, 1944) ஈழத்து தமிழ் அறிஞர். பேராசிரியர், கவிஞர், எழுத்தாளர், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர், ஆய்வாளர், இதழாளர் என பல துறைகளில் செயல்பட்டவர். நவீனத் தமிழ் உரைநடைக்கான இலக்கணத்தை உருவாக்க பணியாற்றியவர்

பிறப்பு, கல்வி

அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனைக்குடியில் ஆகஸ்ட் 10, 1944-ல் மக்புல் ஆலிமுக்கும் சுலைஹா உம்மாவிற்கும் மகனாகப் பிறந்தார். தந்தை ஒரு மதப்பணியாளர், அரபு மொழி ஆசிரியர்.

நுஃமான் தொடக்கக் கல்வியைக் கல்முனைக்குடி அரசினர் ஆண்கள் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியைக் கல்முனை உவெசுலி உயர்தரப் பாடசாலையிலும் படித்தார். பின்னர் 15 ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். அட்டாளைச் சேனை அரசினர் ஆசிரியர் கல்லூரியில் ஆசிரியப் பயிற்சி பெற்றார். இளங்கலை மொழியியல் பாடத்தை இலங்கைப் பல்கலைக்கழகத்தின் கொழும்பு வளாகத்தில் பயின்றார் (1973). அதுபோல் முதுகலைத் தமிழ் இலக்கியப் பாடத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பயின்றார் (1982). அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் முனைவர் பட்ட ஆய்வைப் பேராசிரியர் குமாரசாமி இராசா அவர்களின் மேற்பார்வையில் மூன்றாண்டுகள் செய்தார்.

ஆசிரியப் பணி

1976 - 1982-ல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ்விரிவுரையாளராகப் பணியாற்றினார். பின்னர் மொழியியல் விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1991-ல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலைவிரிவுரையாளராகப் பணியேற்று பேராசிரியர்நிலைக்கு உயர்ந்தார் (2001). இதன் இடையே இவர் தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராக ஓராண்டுப் பணிபுரிந்து (1988) இலக்கணநூல் ஒன்றை உருவாக்கினார். இலங்கையின் திறந்தநிலைப் பல்கைலக்கழகத்திலும், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் (1999-2000), மலேயா பல்கலைக்கழகத்திலும் (2007-2008) வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார்.

தம் பணிக்காலத்தில் இலங்கை அரசின் பல்கலைக்கழகம் சார்ந்த பல்வேறுகல்விக்குழுக்கள், நிறுவனங்களில் கல்வி குறித்த அறிவுரைஞர் குழுவில் இடம்பெற்று பணிபுரிந்தார். அயல்நாட்டு ஆய்வேடுகளை மதிப்பீடு செய்யும் அயல்நாட்டுத் தேர்வாளராகவும் பணிபுரிந்தார். இலங்கையிலும் இந்தியா உள்ளிட்ட பிறநாடுகளிலும் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்குகளில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரை வழங்கினார்.

பாரதியின் மொழிச் சிந்தனைகள்

இதழியல்

நுஃமான் 1969 - 1970-ல் 'கவிஞன்' என்ற பெயரில் காலாண்டு இதழை நடத்தினார்.

இலக்கியவாழ்க்கை

எம்.ஏ.நுஃமான் வாசகர் சங்கம் என்ற பெயரில் பதிப்பகம் நிறுவி அதன் வழியாகத் தரமான நூல்களைவெளியிட்டவர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். நுஃமானின் பணிகள் கவிதைகள், மொழியியல் ஆய்வுகள், இலக்கியத் திறனாய்வு என மூன்று களங்களைச் சேர்ந்தவை.

கவிதை
பாலஸ்தீனக் கவிதைகள்

நுஃமான் தன் பதினாறாம் வயதில் கவிதை எழுதத் தொடங்கியவர்.கவிஞர் நீலவாணன் வழியாக இலக்கியம் அறிமுகமானது. நீலவாணன்தான் நுஃமானுக்கு மகாகவி, முருகையன்,புரட்சிக் கமால் அண்ணல் போன்றோரின் கவிதைகளை அறிமுகப்படுத்தினார்.'நெஞ்சமே நஞ்சுக்கு நேர்' என்ற ஈற்றடிகொண்டு நுஃமான் எழுதிய பாடல் வீரகேசரியில் வெளிவந்தது.

1963 முதல் மகாகவியுடன் பழக்கம் ஏற்பட்டது. தொடக்கத்தில் ஆன்மீகச் சிந்தனையின் ஆதிக்கம் நுஃமானுக்கு இருந்துள்ளது. 1967க்குப்பின் முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தொடர்பால் தனிமனித உணர்வுகள், சமூகப் பிரச்சனைகளை சார்ந்த படைப்புகளைப் படைத்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பொழுது கவிதாநிகழ்வு என்னும் நிகழ்ச்சியை நடத்தினார். கவியரங்குகள் பலவற்றில்கலந்துகொண்டு கவிதை பாடியிருக்கிறார். கவியரங்குகளின் போக்கு பற்றி இவர் வரைந்த ஒரு கட்டுரை கவியரங்குகள் சமூகத்தில் பெற்றிருந்த ஏற்ற இறக்கங்களைக் குறிப்பிடுவதாகும். கவிதை பற்றிய தம் எண்ணங்களை "அழியா நிழல்கள்" தொகுப்பில் பதிவுசெய்துள்ளார். பாலத்தீன நாட்டுக் கவிஞர்கள் எழுதிய கவிதைகளை நுஃமான் மொழிபெயர்த்துள்ளார். "பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்" என்ற நூல் குறிப்பிடத்தக்க நூலாகும். இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தோன்றிய ஈழத்துப் புதுக்கவிதை வளர்ச்சியை அறிவதற்கு இந்த நூல் மிகுதியும் பயன்படும்

மொழியியல்

நுஃமான் கல்வித்துறை சார்ந்த முறைமையை பின்பற்றிய ஆய்வாளர். இலக்கணம், இலக்கியங்களின் சமூகவியல் உள்ளடக்கம், மொழியியல் பரிணாமம் ஆகியவை சார்ந்து குறிப்பிடத்தக்க ஆய்வுகளைச் செய்திருக்கிறார்,

தமிழ், சிங்கள மொழிகளின் பெயர்த்தொடர் அமைப்பு ஒரு முரண்நிலை ஆய்வு (A Contrastive Study of the Structure of the Noun Phrase in Tamil and Sinhala) என்னும் தலைப்பில் இவர் நிகழ்த்திய முனைவர் பட்ட ஆய்வு தமிழ் சிங்களமொழி குறித்த நல்ல ஆய்வாக அறிஞர் உலகால் குறிப்பிடப்படுகிறது. தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்காக இவர் செய்த குறுகியகாலத் திட்டப் பணியாய்வில் "மட்டக்களப்பு முசுலிம் தமிழில் கடன்வாங்கப் பெற்றுள்ள அரபுச் சொற்கள்" என்னும் ஆய்வு குறிப்பிடத்தகுந்த ஒன்று. 1984). "மட்டக்களப்பு முசுலிம் தமிழ்ச் சொற்றொகை ஆய்வு" என்னும் தலைப்பில் முதுகலைப் பட்டத்திற்கு வழங்கிய ஆய்வேடு முசுலிம் மக்களின் தமிழ்ச்சொற்கள் குறித்த பயன்பாடுகளைக் காட்டும் ஆய்வாக உள்ளது.

இலக்கியத் திறனாய்வு
அடிப்படைத் தமிழ் இலக்கணம்

தமிழகத்தில் வெளிவந்த படைப்புகளை உற்றுநோக்கிப்படித்து திறனாய்வு செய்துள்ளார். ஈழத்துக்கவிதை இதழ்கள் என்ற தலைப்பில் இவர் எழுதிய கட்டுரை ஈழத்தில் வெளிவந்த, கவிதைப்பணியாற்றிய பல இதழ்களை அறிமுகம் செய்கிறது. சமகாலப் படைப்புகளான புதினங்கள்,சிறுகதைகள் பற்றிய திறனாய்வும் செய்துள்ளார்."ஈழத்துத் தமிழ்நாவல்களின் மொழி"என்னும் கட்டுரையில் ஈழத்துத்தமிழ் நாவலில் இடம்பெற்றுள்ள மொழியின் பரிணாமத்தைச் சான்றுகளுடன் விளக்கியுள்ளார். நவீனத் தமிழ்க்காவியங்கள் என்ற தலைப்பில் ஈழத்தில் தோன்றிய நவீனத் தமிழ்க்காவியங்கள் பற்றி ஆராய்ந்துள்ளார். ஈழத்தில் தோன்றிய பா நாடகங்கள் பற்றியும் ஆராய்ந்து எழுதியுள்ளார்.

பதிப்பாசிரியர்

நுஃமான் அவர்கள் பதிப்பாளராக இருந்து பல நூல்கள் வெளிவருவதற்குக் காரணமாக இருந்துள்ளார். மகாகவியின் படைப்புகளை பதிப்பித்தார். மகாகவியின் கவிதைகள் குறித்த திறனாய்வுகளை எழுதினார். நாட்டார் பாடல்கள் என்ற நூல் பதிப்பிக்க இணைப் பதிப்பாசிரியராகப் பணிபுரிந்தவர் நுஃமான்.

இலக்கிய இடம்

நுஃமான் முதன்மையாக கல்வித்துறையாளர். கல்வித்துறைக்குரிய புறவயமான ஆய்வுமுறைமையை இலக்கியம் உள்ளிட்ட தளங்களிலும் பயன்படுத்தினார். அடிப்படையில் மார்க்ஸிய சார்புள்ள இலக்கிய நோக்கு கொண்டவராயினும் க.கைலாசபதி , கார்த்திகேசு சிவத்தம்பி போன்றவர்களிடமுள்ள கட்சிச்சார்பு நிலைபாடுக்கு பதிலாக புறவயமான ஆய்வுச்சட்டகத்தையே எப்போதும் கையாண்டார். ஆகவே தனிப்பட்ட ரசனை அல்லது தனிப்பட்ட சார்புநிலைகளுக்கு அப்பாற்பட்ட சமநிலை கொண்டவையாக நுஃமானின் ஆய்வுகள் அமைந்தன. 1985 முதல் தமிழின் பின்நவீனத்துவச் சிந்தனைகள் அனைத்தையும் நிராகரிக்கும் பார்வையுடன் முன்வைக்கப்பட்டபோது அந்த மிகையான ஆர்வத்துக்கு எதிராக நிதானமான கல்வித்துறை சார்ந்த முறைமையை முன்வைத்து விவாதிப்பவராக நுஃமான் செயல்பட்டார்.

நுஃமானின் மொழியியல் ஆய்வுகள் அத்துறையில் குறிப்பிடத்தக்க சாதனைகளாகக் கருதப்படுகின்றன. மொழியின் வளர்ச்சிப் பரிணாமத்துக்கு ஏற்ப அதை மறுவரையறை செய்து இலக்கணப்படுத்தும் பணியில் நுஃமான் முக்கியமான பங்களிப்பை ஆற்றியிருக்கிறார். நுஃமானின் இலக்கியப் பங்களிப்பு அவர் தொடர்ச்சியாக ஈழத்துக் கவிதைகளை தமிழகச் சூழலில் அறிமுகம் செய்துகொண்டே இருந்ததிலும், பாலஸ்தீனக் கவிதைகளை மொழியாக்கம் செய்ததிலும் உள்ளது. 1980 முதல் தமிழில் புதுக்கவிதை எழுதியவர்களில் குறிப்பிடத்தக்கவராக இருந்த நுஃமான் இலங்கையின் பிற்கால அரசியல்சூழல் காரணமாகவும், தன் ஆய்வுப்பணிகள் காரணமாகவும் அதில் தீவிரமாக ஈடுபடவில்லை. தொடக்ககாலத்தில் நுஃமான் எழுதிய சிறுகதைகள் வண்ணதாசன் போன்றவர்களால் எழுதப்பட்ட மென்மையான உணர்வுகளை நுணுக்கமாகச் சொல்லும் கதைகளின்பாற்பட்டவை. ஆனால் கதைகளிலும் அவர் தொடர்ந்து ஈடுபாடு காட்டவில்லை.

இன்று நுஃமான் அவருடைய இலக்கண ஆய்வுகள், மார்க்ஸிய நோக்கிலான இலக்கியத் திறனாய்வுகள், மொழியியல் ஆய்வுகளுக்காக குறிப்பிடப்படுபவராக திகழ்கிறார்.

விருது

  • 2011-ம் ஆண்டிற்கான விளக்கு விருது எம்.ஏ. நுஃமான் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

நூல்கள்

கவிதைகள்
  • மழைநாட்கள் வரும், (அன்னம்,சிவகங்கை 1983)
  • அழியா நிழல்கள், நர்மதா, 1982
  • தாத்தாமாரும் பேரர்களும் - நெடுங்கவிதைகள், கல்முனை,1977
  • பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், க்ரியா, 1984
மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • பாலஸ்தீனக்கவிதைகள், முப்பது கவிஞர்களின் 109 கவிதைகள், அடையாளம், 2008,
  • மொகமூத் தர்விஸ் கவிதைகள், அடையாளம், 2008
  • பாலஸ்தீனக்கவிதைகள், 15 கவிஞர்களின் 71 கவிதைகள், மூன்றாவது மனிதன் வெளியீடு,2000,
  • காற்றில் மிதக்கும் சொற்கள் ( மலாய் மொழி கவிதைகள்)
  • இரவின் குரல் ( இநதோனேசிய மொழி கவிதைகள் )
மொழிபெயர்ப்புக் கட்டுரை நூல்கள்
  • கடப்பாடு அல்லது சுயாதீனம், இசுலாமியப் பெண்கள் பற்றிய சட்டப் பிரச்சினைகள், கொழும்பு, 2004
  • இனமுரண்பாடு வரலாற்றியலும் கொழும்பு, 2000
  • முஸ்லிம் பெண்களும் அரசியல் தலைமைத்துவமும், முஸ்லிம் பெண்கள் ஆய்வு மற்றும் செயல்பாட்டு அமைப்பு, கொழும்பு, 1999
இலக்கியவிமர்சனம்
  • மொழியும் இலக்கியமும் (காலச்சுவடு,2006)
  • திறனாய்வுக் கட்டுரைகள் (அன்னம்,சிவகங்கை 1986)
  • சமூக யதார்த்தமும் இலக்கியப் புனைவும்
  • பாரதியின் மொழிச்சிந்தனைகள்: செளத் விஷன்,சென்னை,1999
  • மொழியும் இலக்கியமும்
  • மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும் (அன்னம்,சிவகங்கை,1987)
இலக்கணநூல்கள்
  • இருபதாம் நூற்றாண்டு ஈழத் தமிழ் இலக்கியம், இணைப்பதிப்பாசிரியர், 1979
  • ஆரம்ப இடைநிலை வகுப்புகளில் தமிழ் மொழி கற்பித்தல்
இலக்கியவரலாறு
  • இருபதாம் நூற்றாண்டு ஈழத் தமிழ் இலக்கியம், இணைப்பதிப்பாசிரியர், 1979
தொகுப்பாசிரியர்
  • மஹாகவி கவிதைகள், (தொகுப்பாசிரியர்,அன்னம், 1984 )
  • மஹாகவியின் வீடும் வெளியும், கல்முனை வாசகர் வட்டம், 1973
  • மஹாகவியின் கோடை, கல்முனை வாசகர் வட்டம், 1970.
ஆங்கிலம்
  • A Contrastive Grammar of Tamil and Sinhala Noun Phrase
  • Sri Lankan Muslims - Ethnic Identity within Cultural Diversity
  • Understanding Sri Lankan Muslim Identity

எம்.ஏ.நுஃமானின் நூல்கள் இணைய நூலகத்தில் வாசிக்கக் கிடைக்கின்றன (இணைப்பு)

இதர இணைப்புகள்

உசாத்துணை

✅Finalised Page