எம். ஏ. சுசீலா

From Tamil Wiki
Revision as of 10:32, 22 January 2022 by Logamadevi (talk | contribs) (முதல் வரைவு)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

எம். ஏ. சுசீலா

சிறுகதை எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், பெண்ணியவாதி, வலைப்பதிவர். முதன்மையாக பேராசிரியராகவும், பேச்சாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் அறியப்பட்டவர். தற்போது கோவையில் வசித்து வருகிறார்.

பிறப்பு, கல்வி

சிவகங்கை மாவட்டம், ,காரைக்குடியில் 27/02/1949 அன்று எஸ் அனந்தராம், சோபனாதேவிக்கு மகளாக பிறந்தார். காரைக்குடி மீனாட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளியில், தமிழ் வழிக்கல்வி உயர்நிலை வகுப்பும், புகுமுக வகுப்பு மற்றும் வேதியியல் இளம் அறிவியல் பட்டப்படிப்புகளை பள்ளத்தூர், சீதாலட்சுமி ஆச்சி மகளிர் கல்லூரியிலும் முடித்தார்.

காரைக்குடி அழகப்பா கலைக்கல்லூரியில்,முதுகலை தமிழ் பட்டமும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழில் முனைவர் பட்டமும் பெற்றார். மதுரைய பாத்திமா கல்லூரியில் தமிழ்த்துறை விரிவுரையாளராக 1970ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார் கல்லூரிப்பேராசிரியராகப்பணியாற்றியபடியே பகுதி நேர ஆய்வாளராக.மொழியியல், மலையாளம்,சமஸ்கிருதம் ஆகிய சான்றிதழ்ப் படிப்புகள் மற்றும் பட்டயக்கல்வியை மதுரை காமராசர் பல்கலைக்கழக மாலைக்கல்லூரியில் முடித்தார். மதுரையிலுள்ள பாத்திமாக் கல்லூரியில் 1970 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை 36 ஆண்டுக்காலம் தமிழ்த் துறைப் பேராசிரியப்பணி. இடையே இரண்டாண்டுக்காலம்[ 2002-04 ] துணை முதல்வராகக் கூடுதல் பொறுப்பு வகித்தார்

தனிவாழ்க்கை

ஒரே மகள்- மீனு பிரமோத்

இலக்கியவாழ்க்கை

முதல் சிறுகதை ’ஓர் உயிர் விலை போகிறது’ 1979.ல் பிரசுரமானது.அதே ஆண்டு கல்கி வார இதழ் நடத்திய அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப்போட்டி’யில் முதற்பரிசு பெற்றுஅறிமுக எழுத்தாளராக அங்கீகாரம். அறுபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் பல வார மாத இதழ்களில் வெளி வந்துள்ளன; இவரடைய பல கதைகள், மலையாளம்,கன்னடம் இந்தி,வங்காளம்,ஆங்கிலம்,ஃப்ரெஞ்ச் முதலிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக,கல்லூரிப்பாடத் திட்டங்களிலும் இவரது நூல்கள் இடம் பெற்றிருக்கின்றன. கோவை ஞானியின் பெண் எழுத்தாளர் சிறுகதைத் தொகுப்புக்களிலும் பல சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. "கண் திறந்திட வேண்டும்" என்னும் இவரது சிறுகதை, பாலுமகேந்திராவின் கதை நேரம் தொலைக்காட்சித்தொடர் வழியாக "நான் படிக்கணும்" என்ற தலைப்பில் ஒளி வடிவம் பெற்றுள்ளது. முனைவர் இரா பிரேமாஅவர்களால் தொகுக்கப்பெற்ற பெண்ணெழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பில் ‘’விட்டு விடுதலையாகி’’ என்னும் சிறுகதை இடம் பெற்றிருக்கிறது. கல்லூரிப்பேராசிரியப்பணியின்போது நிறை நிலை மற்றும் முனைவர் பட்ட மாணவியருக்கு ஆய்வு வழிகாட்டியாக. இருந்திருக்கிறார்.

புது தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்,அன்னை தெரசா மகளிர்பல்கலைக்கழகம், காந்தி கிராமகிராமீயப்பல்கலைக்கழகம்,திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நிறைநிலை,மற்றும் முனைவர் பட்ட ஆய்வு வல்லுநர் குழுவிலும் ஆய்வேடுகளை மதிப்பீடு செய்யும் குழுவிலும் இடம் பெற்றிருந்தார்.

தேசிய,மாநில,பன்னாட்டுக்கருத்தரங்கங்களிலும் சாகித்திய அகாதமி நடத்தியுள்ள ஆய்வரங்கங்களிலும் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக்கட்டுரைகள்வழங்கிக் கருத்தரங்கங்கள் பலவற்றை நெறிப்படுத்தியிருக்கிறார்.

தனது இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகளென கம்பன், பாரதி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் ஆகியோரை குறிப்பிடுகிறார்.

நூல்பட்டியல் –(இதுவரை)

சிறுகதைத் தொகுப்புகள்

  • 'பருவங்கள்மாறும்'(1985), நர்மதா வெளியீடு,சென்னை
  • 'புதிய பிரவேசங்கள்'(1994),தழல் வெளியீடு,மதுரை
  • 'தடை ஓட்டங்கள்'(2001).மீனாட்சி புத்தகநிலையம்,மதுரை
  • தேவந்தி (2011),வடக்கு வாசல் பதிப்பகம்,புதுதில்லி]

நாவல்கள்

  • யாதுமாகி-2014, வம்சி பதிப்பகம்,திருவண்ணாமலை.
  • (யாதுமாகியின் ஆங்கில மொழியாக்கம்:” [Devi: The Boundless: A Daughter's Inward Journey’’-Emerald Publishers]
  • தடங்கள்- 2020, மதுரை மீனாட்சி புத்தக நிலையம்.

மொழிபெயர்ப்புக்கள்

  • Crime and Punishment - குற்றமும் தண்டனையும் (2007), நற்றிணை பதிப்பகம்-செம்பதிப்பு
  • The Idiot - அசடன்(2011), நற்றிணை பதிப்பகம்-செம்பதிப்பு
  • Short works of Fyodor Dostoevsky - தஸ்தயெவ்ஸ்கி கதைகள்(2015), நற்றிணை பதிப்பகம்
  • ‘NOTES FROM THE UNDERGROUND’,நிலவறைக்குறிப்புகள்(2018), நற்றிணை பதிப்பகம்
  • ‘THE DOUBLE’.-இரட்டையர் (2018), நற்றிணை பதிப்பகம்
  • கவிஞனின் மனைவி- translation of collection of short stories by Asha poorna devi,Maha Swetha devi.,2019,நற்றிணை பதிப்பகம்
  • செஹ்மத் அழைக்கிறாள்,2019, நற்றிணை பதிப்பகம், Translation of eng novel ‘Calling Sehmath’ by Harindhar sikka.
  • White Nights- வெண் இரவுகள்( 2020), நற்றிணை பதிப்பகம்

கட்டுரை நூல்கள்

  • 'விடுதலைக்குமுன்தமிழ் நாவல்களில்பெண்கள்'(1996),

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிகழ்த்திய அறக்கட்டளைச் சொற்பொழிவு அந்நிறுவனத்தாலேயே நூல் வடிவம் பெற்றுள்ளது.

  • பெண்-இலக்கியம்-வாசிப்பு'(2001),மீனா‌ட்சி புத்தக நிலையம்
  • இலக்கியஇலக்குகள்'(2004), மீனாட்சி புத்தக நிலையம்
  • தமிழ் இலக்கிய வெளியில்,பெண்மொழியும் பெண்ணும்'(2006 ),மீனாட்சி புத்தக நிலையம்
  • கம்பன் தொட்ட சிகரங்கள்,2018,விஜயா பதிப்பகம்
  • நவில்தொறும்..’- 20019,சிறுவாணி வாசகர் மையம்,கோவை
  • தமிழோடு தொடர்புகொண்டதாக வழங்கியுள்ள சில ஆங்கிலக்கட்டுரைகள்
  • Some Cryptotypes in Tamil
  • Baby Words in Brahmin Language
  • Periodisation in Tamil Social Novels [Published in The Jounal Of Asian Studies]
  • Native Women Writers as Champions of Human Rights
  • Impact of Gender Discrimination on The Life Of Karaikal Ammaiyar
  • Feminist Reading of 'Eco-Aesthetics'- Ugcsponsored National Level Symposium on Environmental Aesthetics, Dept Of Phlosophy, Arul Anandarcollege, Madurai
  • Tamil Religious Traditions and World Religions- National Seminar, School of Religions, Philosophy and Humanist Thought, Madurai Kamaraj University

அரசியல் ஈடுபாடு

அரசியல் நடப்புக்களில். நேரடி ஈடுபாடு இல்லை. கல்லூரிப்பேராசிரியப் பணிக்காலத்தில் மதுரைப்பல்கலைக்கழகக் கல்லூரி ஆசிரியர் தொழிற்சங்க அமைப்பில் - MUTA -தீவிரமாக ஈடுபட்டு போராட்டங்களில் பங்கேற்றிருக்கிறார்..

விருதுகள்

  • 2002 ல் பெண்கள் சார்ந்த சமூகச்செயல்பாடுகளின் பங்களிப்புக்களுக்காக, ஸ்தீரீ ரத்னா
  • 2004ல் பாரதீய யுவ கேந்திரா] வழங்கிய சிறந்த பெண்மணி விருது
  • 2013 ல் தில்லி தமிழ்ச்சங்கம்வழங்கிய சிறந்த தமிழ்ச் சிறுகதை எழுத்தாளருக்கான ‘அமரர் சுஜாதா விருது,
  • 2013ஆம் ஆண்டின் கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருது உட்பட அசடன் மொழியாக்கத்துக்கு மூன்று விருதுகள்
  • நல்லி-திசை எட்டும் மொழியாக்க விருது,
  • எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயத்தின் ஜி யூ போப் விருது
  • 2018ல் ரஷ்ய இலக்கிய மொழியாக்கப்பங்களிப்புக்காக விஷ்ணுபுரம் இலக்கிய வட்டமும் சென்னை ரஷ்ய கலாசார மையமும் இணைந்து நிகழ்த்திய பாராட்டு விழாவில் ’தஸ்தயெவ்ஸ்கியின் தமிழ்க்குரல்’ என்னும் விருது
  • 2018 இல் மணல் வீடு இலக்கிய வட்டம் அளித்த அமரர் ராஜம் கிருஷ்ணன் வாழ்நாள் நினைவு விருது

இணைப்புக்கள்

  • எம்.ஏ.சுசீலா புத்தகங்கள் | M. A. Suseela Books | Panuval.com
  • எம். ஏ. சுசீலா விழா https://www.jeyamohan.in/107798/
  • தில்லி தமிழ்ச்சங்கத்தின் ‘அமரர் சுஜாதா விருது’
  • எம். ஏ. சுசிலாவின் வலைப்பூ
  • எம். ஏ. சுசிலாவின் பேச்சு - காணொலி
  • எழுத்தாளர் அறிமுகம், அமெரிக்காவிலிருந்து வெளிவரும் தென்றல் மார்ச் இதழில்: http://tamilauthors.com/writers/india/Susila.M.A.html
  • தினமணி நேர்காணல் - ஓய்வின்றி உழைப்பது பிடித்திருக்கிறது
  • வலையுலகப் படைப்பாளிகள்! - தினமணி
  • எம். ஏ. சுசீலாவின் தேவந்தியும் நானும்.. ஒரு மகளின் பார்வை
  • வலைச்சரம் இணைய இதழில் ஒரு வாரம் சிறப்பாசிரியர்
  • சொல்வனம் இணைய இதழில்-கட்டுரைகள்;
  • ஜெயமோகனின் ‘நாவல் கோட்பாட்டை’ முன் வைத்து…
  • ’’பரந்த வெளியின் கட்டற்ற விடுதலை நோக்கியதாய்….’’
  • ஒழிமுறி - உறவெனும் புதிர்
  • விகடன் வரவேற்பறையில்