under review

எம்.எஸ்.கல்யாணசுந்தரம்

From Tamil Wiki
Revision as of 12:39, 6 February 2022 by Tamaraikannan (talk | contribs)


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

இருபது வருடங்கள்

எம்.எஸ்.கல்யாணசுந்தரம் (மார்ச் 28, 1901 -1989) தமிழில் நாவல்களும் சிறுகதைகளும் எழுதிய எழுத்தாளர்.தமிழ் இலக்கியத்தில் வழக்கமாகப் பேசப்படாத களங்களை கதைகளில் எழுதியவர் என்பதனால் முக்கியமானவர் என்று கருதப்படுகிறார். இரண்டாம் உலகப்போரில் கைதிகளாகச் சிக்கிக்கொண்டு பசிபிக் தீவி ஒன்றில் சிக்கி மீண்டும் வருபவரை கதைநாயகனாகக் கொண்ட இருபது வருடங்கள் அவருடைய முதன்மையான படைப்பு.

பிறப்பு கல்வி

எம்.எஸ்.கல்யாணசுந்தரம் மார்ச் 28, 1901-ல் மதுரையில் ஒரு சௌராஷ்ட்ர குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தையின் பெயர் சீதாராமையா. இவர் ஒரு காந்தியவாதி. எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் தமையன் மதுரை அருகே ஆண்டிப்பட்டியில் வேகவதி என்னும் காந்திய ஆசிரமத்தை நடத்திவந்தார். சீதாராமையா அந்த ஆசிரமத்தில் தங்கி கரட்டூர் ராமு என்னும் நாவலை 1934ல் எழுதினார்

எம்.எஸ்.கல்யாணசுந்தரம் பஞ்சாப் பல்கலையில் பி.ஏ பட்டமும் இந்தியில் பிரவீண் பட்டமும் பெற்றார்.மாண்டிஸோரி முறை பயிற்றியலை மாண்டிஸோரி அம்மையாரிடம் இருந்து கற்றார். ஆங்கிலம் தமிழ் இந்தி,உருது தெலுங்கு வங்காளி குஜராத்தி சம்ஸ்கிருதம் மற்றும் ஜெர்மன் மொழிகள் அறிந்தவர்.

தனிவாழ்க்கை

எம்.எஸ்.கல்யாணசுந்தரம் மணம் செய்துகொள்ளவில்லை. பின்தங்கிய பகுதிகளில் மக்கள்பணியாற்றியமையால் தொழுநோய்க்கு ஆளானார் என்று சொல்லப்படுகிறது. இறுதிநாட்களை கொடைக்கானலில் ஒரு மருத்துவ விடுதியில் கழித்தார்.

அரசியல்

தபால்தந்தி துறையில் ஊழியராக இருந்தபோது1942ல் காந்தியின் அழைப்பை ஏற்று வேலையை துறந்து சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டார்.ஆங்கிலம், தமிழ், இந்தியில் அரசியல்கட்டுரைகளை எழுதினார்.தமிழ்-இந்தி, தமிழ் ஆங்கிலம் அகராதிகள் தயாரித்தார்

இலக்கியவாழ்க்கை

எம்.எஸ்.கல்யாணசுந்தரம் வாழ்ந்தபோது இருபது வருஷங்கள் என்னும் நாவலும் பொன்மணல் என்னும் சிறுகதை தொகுதியும் மட்டுமே வெளிவந்தன.பகல்கனவு என்னும் நாவல் நெடுங்காலம் கையெழுத்துப்பிரதியாக கி.ஆ.சச்சிதானந்தத்திடம் இருந்தது. எம்.எஸ்.கல்யாணசுந்தரம் மறைந்தபின்னர் வெளிவந்தது.

நூல்வெளியீடு

தன் நூல்களை பிரசுரிக்க ஆர்வம் காட்டவில்லை. அவருடைய நூல்கள் இறுதிக்காலத்தில் அவரிடம் பழகிய கி.ஆ.சச்சிதானந்தம் அவர்களிடம் தங்கிவிட்டன. இருபது வருஷங்கள் தவிர அவருடைய நூல்கள் கவனிக்கப்படவுமில்லை. அவர் மறைந்து இருபதாண்டுகளுக்குப்பின் அவருடைய கைப்பிரதியில் இருந்து 2001-ல் தான் அவருடைய இரண்டாவது நாவலான பகல்கனவு வெளியிடப்பட்டது.

மறைவு

எம்.எஸ்.கல்யாணசுந்தரம் 1989ல் மறைந்தார்

இலக்கிய இடம்

எம்.எஸ்.கல்யாணசுந்தரம் தமிழில் அன்று எழுதப்பட்ட பொதுவான கதைக்களங்களான கிராமவாழ்க்கை, குடும்பச்சூழல், ஆண்பெண் உறவு ஆகியவற்றில் இருந்து வெளியே சென்று உலகப்போர்ச் சூழல் போன்ற முற்றிலும் புதிய களங்களில் கதைகளை எழுதினார். மிகையில்லாத யதார்த்தவாத எழுத்து அவருடையது. விலங்குகள், புறவயச்சூழல் ஆகியவற்றை நுட்பமாகக் கவனித்து எழுதும் பாணி கொண்டிருந்தார். நெடுங்காலம் அச்சில் இல்லாதிருந்த அவருடைய ஆக்கங்கள் அவருடைய நூற்றாண்டை ஒட்டி தமிழினி பதிப்பகத்தால் அச்சில்கொண்டுவரப்பட்டன. அவை வாசகர்களால் காலத்தால் பழைமையாகாத ஆக்கங்கள் என கருதப்பட்டன

“தன் நோக்கத்தாலேயே தன் செயல்பரப்பைக் குறைத்துக்கொள்ள நேர்ந்த படைப்பாளி என்று எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தைச் சொல்லலாம். அந்தத்தளம் குறுகியது என்பதனால் அவர் முதன்மையான படைப்பாளி ஆகவில்லை. அது சாத்தியமே இல்லை. ஆனால் கலாச்சார இயக்கத்தில் அவர் தொடும் இடங்கள் இன்றியமையாதவை. ஆகவே அவர் படைப்புகள் என்றுமே தமிழுக்கு குறையாத முக்கியத்துவம் உடையவை’ என்று விமர்சகர் ஜெயமோகன் சொல்கிறார். ஜெயமோகன் எழுதிய இலக்கிய முன்னோடிகள் வரிசையில் தமிழிலக்கிய முன்னோடிகளில் ஒருவராக எம்.எஸ்.கல்யாணசுந்தரம் குறிப்பிடப்படுகிறார்.

தி.ஜ.ரங்கநாதன் எம்.எஸ்.கல்யாணசுந்தரத்திற்கு அளித்த முன்னுரையில் ‘கல்யாண சுந்தரத்தின் சிறுகதைகள் எல்லாம் நவரத்தினங்கள் - உருவிலும் சரி, தன்மை யிலும் சரி, வகையிலும் சரி. அப்படிப் பட்டவை’ என்கிறார்.*

படைப்புகள்

  • இருபது வருஷங்கள்(நாவல்)
  • பகல்கனவு(நாவல்}
  • பொன்மணல்(சிறுகதை தொகுதி)
  • செய்தித்தாள்