எம்.எஸ்.கல்யாணசுந்தரம்

From Tamil Wiki

எம்.எஸ்.கல்யாணசுந்தரம் (26-மார்ச்-1901) தமிழில் நாவல்களும் சிறுகதைகளும் எழுதிய எழுத்தாளர்.தமிழ் இலக்கியத்தில் வழக்கமாகப் பேசப்படாத களங்களை கதைகளில் எழுதியவர் என்பதனால் முக்கியமானவர் என்று கருதப்படுகிறார். இரண்டாம் உலகப்போரில் கைதிகளாகச் சிக்கிக்கொண்டு பசிபிக் தீவி ஒன்றில் சிக்கி மீண்டும் வருபவரை கதைநாயகனாகக் கொண்ட இருபது வருடங்கள் அவருடைய முதன்மையான படைப்பு.

பிறப்பு கல்வி

எம்.எஸ்.கல்யாணசுந்தரம் 28-மார்ச்-1901ல் மதுரையில் ஒரு சௌராஷ்ட்ர குடும்பத்தில் பிறந்தார்.பஞ்சாப் பல்கலையில் பி.ஏ பட்டமும் இந்தியில் பிரவீண் பட்டமும் பெற்றார்.மாண்டிஸோரி முறை பயிற்றியலை மாண்டிஸோரி அம்மையாரிடம் இருந்து கற்றார். ஆங்கிலம் தமிழ் இந்தி,உருது தெலுங்கு வங்காளி குஜராத்தி சம்ஸ்கிருதம் மற்றும் ஜெர்மன் மொழிகள் அறிந்தவர்.

அரசியல்

தபால்தந்தி துறையில் ஊழியராக இருந்தபோது1942ல் காந்தியின் அழைப்பை ஏற்று வேலையை துறந்து சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டார்.ஆங்கிலம், தமிழ், இந்தியில் அரசியல்கட்டுரைகளை எழுதினார்.தமிழ்-இந்தி, தமிழ் ஆங்கிலம் அகராதிகள் தயாரித்தார்

இலக்கியவாழ்க்கை

எம்.எஸ்.கல்யாணசுந்தரம் வாழ்ந்தபோது இருபது வருஷங்கள் என்னும் நாவலும் பொன்மணல் என்னும் சிறுகதை தொகுதியும் மட்டுமே வெளிவந்தன.பகல்கனவு என்னும் நாவல் நெடுங்காலம் கையெழுத்துப்பிரதியாக கி.ஆ.சச்சிதானந்தத்திடம் இருந்தது. எம்.எஸ்.கல்யாணசுந்தரம் மறைந்தபின்னர் வெளிவந்தது.

படைப்புகள்

  • இருபது வருஷங்கள்(நாவல்)
  • பகல்கனவு(நாவல்}
  • பொன்மணல்(சிறுகதை தொகுதி)