என் பெயர் ராமசேஷன்

From Tamil Wiki
Revision as of 11:50, 25 September 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "என் பெயர் ராமசேஷன் ( ) ஆதவன் எழுதிய நாவல். தமிழின் வயதடைவு நாவல்களில் ஒன்றாக குறிப்பிடப்படுகிறது. ராமசேஷன் என்னும் இளைஞன் பல்வேறு அனுபவங்கள், பாவனைகள் வழியாக தன் முதிரா இளமையை...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

என் பெயர் ராமசேஷன் ( ) ஆதவன் எழுதிய நாவல். தமிழின் வயதடைவு நாவல்களில் ஒன்றாக குறிப்பிடப்படுகிறது. ராமசேஷன் என்னும் இளைஞன் பல்வேறு அனுபவங்கள், பாவனைகள் வழியாக தன் முதிரா இளமையை கடப்பதன் சித்திரத்தை அளிக்கிறது

எழுத்து, வெளியீடு

என் பெயர் ராமசேஷன் ல் கணையாழி இதழில் தொடராக வெளியிடப்பட்டு ல் நர்மதா பதிப்பகத்தால் நூல்வடிவில் கொண்டுவரப்பட்டது.

கதைச்சுருக்கம்

ராமசேஷன் என்னும் பிராமண இளைஞன் தன் கதையை தானே சொல்வதாக அமைந்த நாவல் இது. ராமசேஷன் நடுத்தரக்குடும்பத்தில் பிறந்தவன். தன் தந்தை உருவாக்கிய கட்டுப்பெட்டித்தனமான வாழ்க்கையை வெறுத்து பலவகையான மீறல்கள் வழியாக தன் ஆளுமையை கண்டைய முயல்கிறான். பிரேமா, மாலா போன்ற பெண்களுடனான அவன் உறவும் அத்தகைய மீறல் முயற்சியே. இறுதியில் மீறல்களின் எல்லைகளை உணர்ந்து தன் தந்தையைப்போலவே ஒரு நடுத்தரவர்க்க வாழ்க்கையில் தானும் அமைகிறான்.

இலக்கிய இடம்

உசாத்துணை