under review

என்றேட்டா தோட்டத்தமிழ்ப்பள்ளி

From Tamil Wiki
Revision as of 09:42, 6 January 2024 by Navin Malaysia (talk | contribs)

என்றேட்டா தோட்டத் தமிழ்ப்பள்ளி கெடா மாநிலத்தில் அமைந்துள்ளது. என்றேட்டா தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பதிவு எண் KBD 5044.

பள்ளிச்சின்னம்

வரலாறு

என்றேட்டா தோட்டத் தமிழ்ப்பள்ளி 1947 இல் துவங்கப்பட்டது. இப்பள்ளி முதலில் என்றேட்டா தோட்டக் கோவில் வளாகத்தில்தான் செயல்பட்டது. அப்போது பள்ளிக்கென தனிக் கட்டடமேதுமில்லை. பழனியாண்டி என்பவர்தான் இப்பள்ளியின் முதல் தலைமையாசிரியர். இவருடன் ஆசிரியர்ப் பயிற்சி பெற்றிருந்த துரைசாமியும் பணியாற்றினார். தோட்ட நிர்வாகத்துடனான பேச்சுவார்த்தையின்வழி பள்ளிக்கான தனி நிலத்தைப் பெற்றனர். இந்நிலம் பழைய இடத்திலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. என்றேட்டா தோட்டத் தமிழ்ப் பள்ளியில் தொடக்கத்தில் முதல் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டு வரையான வகுப்புகள் மட்டுமே இருந்தன. நான்கிலிருந்து ஆறாம் ஆண்டு வரை கல்வி பயில மாணவர்கள் அருகிலிருந்த விக்டோரியா தோட்டத் தமிழ்ப் பள்ளிக்குச் சென்றனர்.

பள்ளிக்கட்டடம்

இப்பள்ளிக் கட்டடம் அரசாங்க உதவியுடன் 1.5 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டது. இரண்டு மாடிகளைக் கொண்ட இப்பள்ளியில் மூன்று வகுப்பறைகள், அலுவலகம், சிற்றுண்டிச்சாலை, கழிவறை இருந்தன. 2000 ஆம் ஆண்டில் மாணவர் எண்ணிக்கை உயர்ந்ததால் நான்கு வகுப்பறைகள் கொண்ட கட்டடம் கட்டப்பட்டது. 2007 இல் பெற்றோர் ஆசிரியர் சங்க முயற்சியில் ஏழு அறைகளுடன் மேலுமொரு கட்டடம் அமைந்தது.

பள்ளிக்கட்டடம்

புதிய வசதிகள்

என்றேட்டா தோட்டத் தமிழ்ப் பள்ளிக்கு மேலும் கூடுதல் வசதிகளுடன் கூடிய பள்ளிக் கட்டடம் பெறுவதற்கு பெற்றோர் ஆசிரியர் சங்கமும் பள்ளி மேலாளர் வாரியமும் அரசாங்கத்திடம் மனு செய்தனர். 2010 இல் இப்பள்ளிக்கு அரசாங்கத்தால் மூன்று மாடிக் கட்டடம் கட்டித் தரப்பட்டது. இதில் 13 வகுப்பறைகள், நூலகம், கணினி அறை, அறிவியல் அறை, வாழ்வியல் அறை, கலைக்காட்சி அறை ஆகியவை உள்ளன. 2017 இல் பாலர் பள்ளிக் கட்டடமும் அரசாங்க மானியத்தில் கட்டித் தரப்பட்டது.

தலைமையாசிரியர் பட்டியல்

எண் பெயர் ஆண்டு
1.    M. பழனியாண்டி 1947 - 1950
2. M. சுப்பிராயன் 1951 - 1977
3. K. வீராசாமி  1978 - 1982
4. S. ஆறுமுகம் 1 983 - 1986
5. V. சடையன் 1987 - 1989
6. M. முனியாண்டி 1990 - 1995
7. V. முருகையா 1996
8. P. கோவிந்தசாமி 1997 - 2002
9. T. இராமகிருஷ்ணன் 2003
10. S. இராக்கர்த்தா 2003 - 2014
11. J. உதயகுமாரி 2015 - 2017
12. A. மாரி 2017 - 2019
13. A. அல்லி 2019 - தற்போது வரை

உசாத்துணை

  • மலேசியாவில் 200 ஆண்டுகள் தமிழ்க்கல்வியின் மேம்புகழ் (2016).


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.