under review

எண்ணங்கள் மாறலாம்

From Tamil Wiki
Revision as of 14:21, 3 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected text format issues)

To read the article in English: Ennangal Maaralaam (novel). ‎

எண்ணங்கள் மாறலாம்

எண்ணங்கள் மாறலாம் (1976) ர.சு. நல்லபெருமாள் எழுதிய நாவல். இது மருத்துவர்களின் வாழ்க்கையை பின்புலமாகக் கொண்டது. அறிவார்ந்து சிந்திக்கும் இருவர் ஆண்பெண் உறவை எப்படி அணுகுகிறார்கள் என்பதை விவாதிக்கும் படைப்பு. பொது வாசிப்புக்குரிய எளிமையான கதையோட்டமும் பொதுவான சிந்தனைகளும் கொண்டது.

எழுத்து, பிரசுரம்

இந்நாவல் 1976-ல் நூலாகியது.

கதைச்சுருக்கம்

புகழ்பெற்ற அறுவைசிகிச்சை நிபுணரான டாக்டர் நம்பி தர்க்கமனம் கொண்டவர், எதையும் அறிவியல்நோக்கில் அணுகுபவர். இறைநம்பிக்கை, காதல் போன்றவற்றை மெல்லுணர்ச்சிகள் என ஏளனம் செய்பவர். அவருடைய மனைவியான கல்யாணியின் பணச்செருக்கால் அவளிடமிருந்து பிரிந்தவர். அவருடைய உதவியாளர் டாக்டர் இந்திரகுமாரி இறைநம்பிக்கை கொண்டவள். அவரை காதலிக்கிறாள். அவர்களிடையே விவாதங்கள் நிகழ்கின்றன. ஓர் அறுவைசிகிச்சையில் எல்லாம் சிறப்பாக இருந்தும் நோயாளி உயிரிழக்க இன்னொன்றில் அனைத்தும் தவறாகப்போன நோயாளி உயிர்பிழைக்கிறார். அறிவின் எல்லையை நம்பி உணர்கிறார். நம்பியும் இந்திராவும் இணைகிறார்கள்.

இலக்கிய இடம்

இது நேரடியான கருத்துப்பிரச்சார நோக்கமும் அதற்கான கட்டமைப்பும் கொண்ட நாவல். அறிவியல்நோக்கு அல்லது பகுத்தறிவுநோக்கு பற்றிய விவாதங்களை பொதுவாசகரிடையே உருவாக்கிய படைப்பு இது.

உசாத்துணை

Tamilonline - Thendral Tamil Magazine - எழுத்தாளர் - ர.சு.நல்லபெருமாள்


✅Finalised Page