under review

எண்களின் சிறப்பு: எண் 3

From Tamil Wiki
Revision as of 12:49, 28 February 2024 by ASN (talk | contribs) (Page Created: Para Added: Link Created: Proof Checked.)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

எண்ணிக்கையைக் குறிப்பதற்குப் எண்கள் பயன்படுகின்றன. எண்கள் ஒன்று தொடங்கி கோடிக்கும் மேல் பயன்பட்டில் உள்ளன. இவற்றில் எண் 3 ஆன்மிகத்திலும் இலக்கியத்திலும் சிறப்பிக்கப்பட்ட எண்.

எண் 3-ன் சிறப்புகள்

ஒன்றிலிருந்து தொடங்கும் எண் வரிசையில் மூன்றாவதாக வருவது 3. எண்களில் எண்ணின் பொருளுக்கேற்ப மூன்றெழுத்தால் (3 = மூன்று) வரும். ’மும்மை’ என்றும் இலக்கியத்தில் பயின்று வரும்.

ஆன்மிக - இலக்கியச் சிறப்புகள்

மூன்று தமிழ்ச் சங்கங்கள் – தலைச் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம்.

முத்தமிழ் - இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ்

மூவேந்தர்கள் - சேரர், சோழர், பாண்டியர்

மூவுலகம் - பூலோகம், பரலோகம், பாதாளலோகம்

மும்மை – மூன்று மடங்கு

மும்மடி – மூன்று மடங்கு

மும்மை – காலை, பகல், மாலை

மும்மணி - புட்ப ராகம், வைடூரியம், கோமேதகம் என்ற மூவகை ரத்தினங்கள்.

மும்மணிக்காசு - ஆபரண வகை

மும்மணி மாலை - 96 பிரபந்தங்களில் ஒன்று. அந்தாதித் தொடையில் 30 பாடல்களை அமைத்துப் பாடுவது.

மும்மதம்: மதயானையின் சன்ன மதம், கை மதம், கோச மதம் எனும் மூன்று மதங்கள்.

மும்மண்டலங்கள் – சூரிய, சந்திர, அக்கினி மண்டலங்கள்

மும்மலம் - ஆணவம், கன்மம், மாயை

மும்மறை - ரிக், யஜூர், சாம வேதம்

மும்மாரி - ஒரு மாதத்தில் மூன்று முறை பெய்யும் மழை

மும்மீன் - மிருகசீரிடம்

மும்முரசு - வீரமுரசு, நியாய முரசு, மண முரசு

மும்மூடம் - மூவகை அறிவீனங்கள். உலோக மூடம், தேவதா மூடம், பாஷாண்ட மூடம்

மும்மூடர் - முழு மூடர்

மும்மைத் தமிழ் - முத்தமிழ். எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று பகுதிப்பட்ட தமிழ் இலக்கணம்.

மும்மா - பின்னத்தில் ஒரு வகை

மும்மா முக்காணி - பின்னத்தில் ஒரு வகை

மும்முந்திரி - பின்னத்தில் ஒரு வகை

மும்முக்காணி - மும்மா முக்காணி - பின்னத்தில் ஒரு வகை

மும்முட்டி - சிற்றாமுட்டி, பேராமுட்டி, நாகமுட்டி எனும் மூன்று வகைச் செடிகள்.

முக்காலம் - இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம்

முக்குணம் - சாத்வீக குணம், இரசோ குணம், தாமச குணம்

முக்குற்றம் - காமம், வெகுளி, மயக்கம்

முச்சக்தி - இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி

முச்சுடர் - சூரியன், சந்திரன், அக்கினி

முச்சடை - திரிசடை

முச்சத்தி - அன்றைய மன்னர்ககளுக்குரிய மூன்று ஆற்றல்கள் = பிரபு சக்தி, மந்திர சக்தி, உற்சாக சக்தி

முச்சந்தி - மூன்று சாலைகள் கூடுமிடம்

முச்சலீலிகை - உமிழ் நீர், சிறு நீர், நாத நீர் எனும் மூவகை நீர்

முச்சொல் அலங்காரம் - மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டு, மூன்று விதமான பொருள்களைத் தரும் சொல்லணி

முந்நீர் - கடல் நீர்

முந்தூழ் - முந்தும் பழைய ஊழ்வினை

முந்நாடி - மூன்று நாடிகள்

முப்பகை - ஆன்மாவைக் கெடுக்கும் முப்பகைகள். காமம், வெகுளி, மயக்கம்

முத்தொழில் - ஆக்கல், காத்தல், அழித்தல்

முந்நூல் - முதல் நூல், வழி நூல், சார்பு நூல்

மூவினங்கள் -   தன்மை, முன்னிலை, படர்க்கை

மூவகை மொழி - பழித்தல், புகழ்தல், பட்டாங்கு பேசுதல் (சாத்திரம் பேசுதல்)

முப்புரம் (மும்மதில்) - பொன் மதில்,    வெள்ளி மதில், இரும்பு மதில்

திரிபலா - கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்

முப்பொறிகள் - மனம், வாக்கு, காயம்

முப்பத்து முக்கோடி தேவர் - 33 கோடி தேவர்கள்

முப்பால் - அறம், பொருள், இன்பம் எனும் மூன்று பால் பிரிவுகளை உடைய திருக்குறள்

முப்பாழ் - நிலத்திற்கு உண்டாகும் மூன்று வகைக் கேடுகள் = வெயில் பாழ், வெள்ளப் பாழ், குடிப் பாழ்

முப்பாற் புள்ளி - ஆய்த எழுத்து

முப்பிணிகள் - வாதம், பித்தம், கபம்

திரிகடுகம் - சுக்கு, மிளகு, திப்பிலி

திரிவிக்கிரமன் - மூன்றடியால் உலகளந்தவன், திருமால்.

திரி கந்தம் - மூவகை வாசனைப் பண்டங்கள். கிராம்பு, சந்தனம், அகில் அல்லது நாவற்பூ, சண்பகப் பூ, செஞ்சந்தனம் போன்றவற்றுள் மூன்று.

திரி கரணம் - மனம், வாக்கு, காயம் என மூன்று கருவிகள்

திரிகால சந்தி - காலை, பகல், மாலைகளாகிய மூன்று சந்தியா காலங்கள்

திரிகால ஞானம் - இறந்தகால, நிகழ்கால எதிர்கால அறிவு = முக்கால அறிவு

திரி கூடம் - மூன்று சிகரங்கள் கொண்ட மலை

திரிகோணம் - முக்கோணம்

திரிசிரபுரம் - திருச்சிராப்பள்ளி

திரிசூலம் - முத்தலைச் சூலம்

திரி சூலி - காளி

திரியம்பகம் - சிவனின் வில்

திரித்துவம் - கடவுளின் மூன்று தன்மைகள்

திரிபுர தாபினி - 108 உபநிடதங்களில் ஒன்று

திரிமஞ்சள் - மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், மர மஞ்சள் என மூவகை மஞ்சள்கள்

முத்தொள்ளாயிரம் - சேர, பாண்டிய, சோழ மன்னர்கள் மீது, தலைக்கு 900 பாடல்கள் வீதம் பாடப்பெற்ற 2700 வெண்பாக்கள் கொண்ட சங்க இலக்கிய நூல்

முப்புரி நூலோர் - பார்ப்பனர்

முப்பூரம் - பூரம், பூராடம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள்

முப்பொருள் - பதி, பசு, பாசம் என்னும் மூன்று முதற் பொருள்கள்

முப்பொறி - திரிகரணம்

மூவுருவிலி ராமன் - பரசுராமன், தசரதராமன், பலராமன்

மூன்று உலோகம் - பொன், வெள்ளி, செம்பு

மூவாசை - மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை

மூவினம் - வல்லினம், மெல்லினம், இடையினம்

மூன்றெழுத்து - அ, உ, ம எனும் முன்று எழுத்துகளால் ஆன ‘ஓம்’

திரிதண்டி - மூன்று தண்டங்களை (கோல்களை) ஏந்திய துறவி

மும்மலம் - ஆணவம், கன்மம், மாயை

முக்கனி - மா, பலா, வாழை

முக்கண்ணன் – சிவன்

முக்கண்ணன் - விநாயகன், வீரபத்திரன்

மும்மொழி - மெய் கூறல், புகழ் கூறல், பழி கூறல்

முக்கடவுள் - பிரம்மா, விஷ்ணு, சிவன்

முக்கண்ணி - துர்க்கை

முக்கூட்டு எண்ணெய் - பசுநெய், ஆமணக்கெண்ணெய், நல்லெண்ணெய் என மூன்று வகைப் பொருள்களின் கலப்பால் ஆன எண்ணெய்

முக்கடுகம் - திரிகடுகம்

முக்கடுகு - திரிகடுகம்

முக்கண்டகம் - நெருஞ்சி

முக்கப்பு - சூலாயுதம்

முக்கரணம் - திரிகரணம்

முக்கரம் - மூன்று முனைகளுடைய சூலம்

முக்கருணை - கருணைக்கிழங்கின் மூன்று வகைகள் = காறு கருணை, காறாக் கருணை, புளிக்கருணை

முக்காலி - மூன்று கால்களை உடைய பீடம்

முக்குடை - மூன்று அடுக்குள்ள குடை (அருகக் கடவுளுக்கு உரியது)

முக்குடைச் செல்வன் - அருகக் கடவுள், முக்குடையான், முக்குடையோன்.

முக்குணம் - திரி குணம்.

முக்குலம் - மூன்று அரச குலம்.

முக்குழிச் சட்டி - மூன்று குழிகள் கொண்ட பணியாரச் சட்டி.

முக்குளம் - மூன்று நதிகள் கூடுமிடம்

முக்குற்றம் - காமம், வெகுளி, மயக்கம் எனும் மூவகைக் குற்றம்

முக்கோல் - பூணூல், கலயம், மணை என்னும் அந்தணர்க்குரிய அடையாளங்கள்

முச்சகம் – மூன்று ஜகங்கள் = மூன்று உலகம்.

உசாத்துணை

  • நவம்: நாஞ்சில் நாடன்: சிறுவாணி வாசகர் மைய வெளியீடு: பவித்ரா பதிப்பகம்: முதல் பதிப்பு: ஏப்ரல், 2017


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.