under review

ஊர்சுற்றி: Difference between revisions

From Tamil Wiki
(changed single quotes)
No edit summary
Line 1: Line 1:
{{Read English|Name of target article=Oorsuttri|Title of target article=Oorsuttri}}
{{Read English|Name of target article=Oorsutri|Title of target article=Oorsutri}}
[[File:ஊர்சுற்றி2.png|thumb|ஊர்சுற்றி]]
[[File:ஊர்சுற்றி2.png|thumb|ஊர்சுற்றி]]
ஊர்சுற்றி ( 2016) யுவன் சந்திரசேகர் எழுதிய நாவல். சீதாபதி என்பவர் ஊரை விட்டு கிளம்பிச் சென்று நெடுங்காலம் கழித்து திரும்பி வந்து இன்னொருவரிடம் தன் வாழ்க்கைக் கதைகளைச் சொல்கிறார். அவருடைய வெவ்வேறு அனுபவங்கள் வழியாக நாவல் விரிகிறது

Revision as of 18:38, 10 October 2022

To read the article in English: Oorsutri. ‎

ஊர்சுற்றி

ஊர்சுற்றி ( 2016) யுவன் சந்திரசேகர் எழுதிய நாவல். சீதாபதி என்பவர் ஊரை விட்டு கிளம்பிச் சென்று நெடுங்காலம் கழித்து திரும்பி வந்து இன்னொருவரிடம் தன் வாழ்க்கைக் கதைகளைச் சொல்கிறார். அவருடைய வெவ்வேறு அனுபவங்கள் வழியாக நாவல் விரிகிறது

எழுத்து, வெளியீடு

யுவன் சந்திரசேகர் 2016 ல் இந்நாவலை எழுதினார். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டது.

கதைச்சுருக்கம்

தாய் தந்தையரின் அகால மரணத்துக்குப்பின் அந்த கிராமத்தில் இருக்க இயலாமல் 1936-ல் தனது பதினாறாவது வயதில் நாடோடியாக வெளியேறும் சீதாபதி என்பவர் எண்பதுகளைக் கடந்த வயதில் தனது இறுதிக்காலத்தை தான் பிறந்த கிராமத்திலேயே கழிக்க எண்ணி ஊர் திரும்புகிறார். அந்த கிராமத்துக்கு படப்பிடிப்பு காரணமாக வந்து சேரும் கமலக்கண்ணன் சீதாபதியிடம் அவர் வாழ்க்கையை பற்றிக் கேட்க அவர் தன் வாழ்க்கையை சொல்கிறார்.

புனைவுலகில் பயன்படும் 'நம்பகமில்லா கதைசொல்லி’ என்னும் உத்தியை கொண்டு எழுதப்பட்ட இந்நாவலில் சீதாபதி தன் பாலுறவுகள், மாயநிகழ்ச்சிகள் என வெவ்வேறு தளங்களில் வாழ்க்கையைப் பற்றிச் சொல்கிறார்.

இலக்கிய இடம்

’காமம், தனிமை, வாழ்க்கை, ஆத்மீகம் என இலக்கியம் பரிசீலிக்கும் அடிப்படைக் கேள்விகளை, அப்படி மையம் கொண்ட கேள்வி என ஒன்றில்லை என்ற பாவனையுடன் அணுகி பரிசீலித்துப் பார்க்க முனைகிறது நாவல்’ என்று கடலூர் சீனு இந்நாவல் குறித்து மதிப்பிடுகிறார்.

உசாத்துணை

ஊர்சுற்றி- கடலூர் சீனு. பதாகை

✅Finalised Page