உலு திராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி
தேசிய வகை உலு திராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஜொகூர் மாநிலத்தின் உலுதிராம் பகுதியில் அமைந்திருக்கும் தமிழ்ப்பள்ளியாகும். அரசின் பகுதி உதவி பெற்ற இப்பள்ளியின் பதிவு எண் JBD1011.
பள்ளி வரலாறு
தேசிய வகை உலு திராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி 1947 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்பள்ளியின் கட்டிடம் ஜப்பானியர் ஆட்சிக்காலத்தில் மருத்துவமனையாகச் செயற்பட்டது. இரண்டாம் உலகப்போர் முடிந்து மீண்டும் மலாயாவைக் கைபற்றிய பிரிட்டன் அரசு, தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் தொடக்கக்கல்வி பெறுவதற்காக மருத்துவமனைக் கட்டிடத்தைச் சீரமைப்பு செய்து தமிழ்ப்பள்ளியைத் தொடங்கியது.
கட்டிட வரலாறு
தொடக்கம் முதலே பலகைக் கட்டிடத்திலே பள்ளி செயற்பட்டு வந்தது. பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் முயற்சியால் 2008 ஆம் ஆண்டு பள்ளிப் புதியக் கட்டிடக் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டு அரசு நிதியுதவியுடன் 4.35 ஏக்கர் பரப்பளவில் புதிய கட்டிடத்தைப் பெற்றது.
தலைமையாசிரியர் பட்டியல்
தலைமையாசிரியர் பெயர் | பணியாற்றிய ஆண்டு |
திரு. ஜெ.சாமுவேல் | 1.7.1947- 31.12.1952 |
திரு. பி.ராமசாமி | 1.1.1953 – 31.5. 1953 |
திரு.எம்.பரமசாமி | 1.1.1953 - 31.12.1957 |
திரு.பி.கிருஷ்ணன் | 1.1.1958 - 31.12.1971 |
திரு.எஸ்.சுப்ரமணியம் | 1.1.1972 - 1.10.1990 |
திரு.பி.முனியாண்டி | 16.1.1991 - 16.5.1994 |
திரு.பி.நாகரத்னம் | 16.5.1994 - 15.8.1997 |
திரு.கே.கிருஷ்ணன் | 16.10.1994-9.10.2003 |
திருமதி எஸ் மாரியம்மா | 10.10.2003 16.8.2005 |
திரு.ஆர். ஸ்ரீதரன் | 19.8.2005 15.10.2007 |
திரு.எம்.நடராசன் | 16.10.2007 - 15.12.2010 |
திருமதி வ.செல்லத்தாயி | 16.12.2010 - 15.7.2012 |
திரு.லெ.சுப்ரமணியம் | 16.7.2012- 2.2.2018 |
திருமதி த.மல்லிகா | 5.2.2018 - 23.6.2019 |
திரு.து.விஜயன் | 24.6.2020 |
பள்ளி முகவரி
Sekolah Jenis Kebangsaan (T) Ladang Ulu Tiram
81800 Ulu Tiram, Johor Bahru
81800, Ulu Tiram
Johor, Malaysia
உசாத்துணை
- மக்கள் ஓசை நாளிதழ் 30 ஆகஸ்டு 2020
- மலேசியாவில் 200 ஆண்டுகள் தமிழ்க்கல்வியின் மேம்புகழ், 2016
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.