உருவாக்கக் கால எழுத்துகள்

From Tamil Wiki
Revision as of 18:41, 10 February 2022 by Jeyamohan (talk | contribs)

தமிழில் நவீன உரைநடைப்புனைவுகள் உருவாகி வந்த காலகட்டத்தைச் சேர்ந்த படைப்புக்கள் உருவாக்க கால எழுத்துக்கள் எனப்படுகின்றன. இவை மரபான இலக்கியக் கதைகள், செவிவழிக் கதைகள், நாட்டார் கதைகள் ஆகியவற்றை உரைநடையில் சொல்லும் பாணியில் அமைந்தவை. பின்னர் ஆங்கிலம் வழியாக ஐரோப்பிய இலக்கியங்களை தழுவி எழுதப்பட்ட எழுத்துக்கள் உருவாயினர். உரைநடை இலக்கியம் தமிழில் உருக்கொள்வதற்கான எல்லா வழிகளும் இந்த வகை எழுத்துக்களில் பரிசீலிக்கப்பட்டுள்ளன. பொதுவாக 1850 முதல் 1900 வரையிலான எழுத்துக்களை இவ்வகையில் சேர்ப்பதுண்டு. இவ்வகை எழுத்துக்கள் மேலும் இருபதாண்டுகள் வந்துகொண்டிருந்தன.