under review

உமாமகேஸ்வரனார்: Difference between revisions

From Tamil Wiki
(Category:தமிழறிஞர்கள் சேர்க்கப்பட்டது)
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
 
(4 intermediate revisions by 3 users not shown)
Line 1: Line 1:
{{Read English|Name of target article=Umamaheswaranar|Title of target article=Umamaheswaranar}}

[[File:த.வே.உமாமகேசுவரனார்.jpg|thumb|உமாமகேஸ்வரனார்]]

உமாமகேஸ்வரனார் (தமிழவேள்) (மே 7, 1883 – மே 9, 1941) தமிழறிஞர். தமிழ்க்கல்வி, தமிழ் கலைச்சொல்லாக்கம், தமிழாய்வு ஆகியவற்றுக்காக முன்னோடியான அமைப்புக்களை உருவாக்கியவர். தஞ்சையில் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தைத் தோற்றுவித்து தலைவராக இருந்தவர். வழக்குரைஞர், தஞ்சைக்கு பல பொதுப்பணிகள் ஆற்றியவர்.
உமாமகேஸ்வரனார் (தமிழவேள், த.வே.உமாமகேசுவரனார், உமாமகேசுவரம் பிள்ளை) (மே 7, 1883 – மே 9, 1941) தமிழறிஞர். தமிழ்க்கல்வி, தமிழ் கலைச்சொல்லாக்கம், தமிழாய்வு ஆகியவற்றுக்காக முன்னோடியான அமைப்புகளை உருவாக்கியவர். தஞ்சையில் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தைத் தோற்றுவித்து தலைவராக இருந்தவர். வழக்குரைஞர், தஞ்சைக்கு பல பொதுப்பணிகள் ஆற்றியவர்.
 
== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் கிளை ஆறுகளான வடவாற்றுக்கும் வெண்ணாற்றுக்கும் இடையில் உள்ள ’கருந்திட்டைக்குடி' எனும் கிராமத்தில் மே 7, 1883-ல் வேம்பப்பிள்ளை-காமாட்சி தம்பதிக்கு பிறந்தார். தஞ்சை வல்லத்திலும், கும்பகோணத்திலும் மூன்றாம் படிவம் வரை படித்தார். உமாமகேஸ்வரனாருக்குப் பன்னிரண்டு வயதாகும் போது, அவரது அன்னை காலமானார். எனவே, கரந்தையில் உள்ள அவரது சிற்றன்னையான பெரியநாயகத்தம்மையாரின் பொறுப்பில் விடப்பட்டார். தஞ்சாவூர் தூய பேதுரு கல்லூரியில் உமாமகேஸ்வரனார் நான்காம் படிவத்தில் சேர்க்கப்பட்டார். அவரது படிப்பு முடிவதற்குள் தந்தை வேம்பப்பிள்ளையும் காலமானார். சிற்றன்னையால் அன்புடன் வளர்க்கப்பட்டார். தஞ்சைக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

== தனிவாழ்க்கை  ==
== தனிவாழ்க்கை  ==
உமாமகேஸ்வரனார், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எழுத்தர் பணியில் சேர்ந்தார். அப்பணியை உதறி சட்டப்படிப்பு படிக்க சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். பட்டம் பெற்றபின் வழக்குரைஞர் தஞ்சை கே. சீனிவாசப் பிள்ளையிடம் சில ஆண்டுகள் பயிற்சி பெற்றார். பிறகு தாமே வழக்குரைஞர் தொழிலைச் செய்யத் தொடங்கினார்.
உமாமகேஸ்வரனார், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எழுத்தர் பணியில் சேர்ந்தார். அப்பணியை உதறி சட்டப்படிப்பு படிக்க சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். பட்டம் பெற்றபின் வழக்குரைஞர் தஞ்சை கே. சீனிவாசப் பிள்ளையிடம் சில ஆண்டுகள் பயிற்சி பெற்றார். பிறகு தாமே வழக்குரைஞர் தொழிலைச் செய்யத் தொடங்கினார். உமாமகேஸ்வரனார் 25-ம் வயதில் திருச்சியைச் சேர்ந்த அண்ணாமலைப் பிள்ளையின் மகளான உலகநாயகியை மணந்தார். இவருக்கு பஞ்சாபகேசன், மாணிக்கவாசகம், சிங்காரவேலு என்ற மூன்று மகன்கள். மூன்றாம் குழந்தை நான்கு மாதங்கள் ஆனபோது மனைவி உலகநாயகி காலமானார். உமாமகேஸ்வரனார் மறுமணம் செய்துகொள்ளவில்லை. இவரது மூத்தமகன் பஞ்சாபகேசன் பள்ளி இறுதி வகுப்பு படிக்கும்போது இறந்தார். அவரது பெயரில் கரந்தைக் கல்லூரியில் ஒரு நினைவு நிதியை ஏற்படுத்தி ஆண்டுதோறும் ஏழை மாணவர்களுக்கு உதவித்தொகை அளித்தார்.
 
உமாமகேஸ்வரனார் 25-ஆம் வயதில் திருச்சியைச் சேர்ந்த அண்ணாமலைப் பிள்ளையின் மகளான உலகநாயகியை மணந்தார். இவருக்கு பஞ்சாபகேசன், மாணிக்கவாசகம், சிங்காரவேலு என்ற மூன்று மகன்கள். மூன்றாம் குழந்தை நான்கு மாதங்கள் ஆனபோது மனைவி உலகநாயகி காலமானார். உமாமகேஸ்வரனார் மறுமணம் செய்துகொள்ளவில்லை. இவரது மூத்தமகன் பஞ்சாபகேசன் பள்ளி இறுதி வகுப்பு படிக்கும்போது இறந்தார். அவரது பெயரில் கரந்தைக் கல்லூரியில் ஒரு நினைவு நிதியை ஏற்படுத்தி ஆண்டுதோறும் ஏழை மாணவர்களுக்கு உதவித்தொகை அளித்தார்.
 
== பொதுப்பணிகள் ==
== பொதுப்பணிகள் ==
உமாமகேஸ்வரனார் ஆங்கிலேய அரசால் அரசுவழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். ஆங்கிலேய ஆட்சியால் உருவாக்கப்பட்ட தஞ்சை மாவட்டக் கழகத்தின் (Tanjore district council) முதல் நியமனத் தலைவராக பணியாற்றினார். அவரது பதவிக்காலத்தில் வரகூர்-மேலகரச்சாலை மற்றும் ஆலங்குடி-கண்டியூர்ச் சாலைகள் போடப்பட்டன. மேலும் நாகத்தி, தொண்டரையன்பாடி என்னும் சிற்றூர்களுக்குச் செல்ல ஆற்றின் குறுக்கே பாலங்கள் கட்ட ஏற்பாடு செய்தார். இவர் பொறுப்பேற்ற போது தஞ்சை மாவட்டத்தில் நாற்பது அல்லது ஐம்பது தொடக்கப்பள்ளிகள் தான் இருந்தன. உமாமகேஸ்வரனார் அந்த எண்ணிக்கையை நூற்றியெழுபதாக உயர்த்தினார்.

செப்டெம்பர் 10, 1926-ல் தஞ்சையில் கூட்டுறவு நிலவள வங்கி ஒன்று தொடங்க முயற்சி எடுத்தார். பிப்ரவரி 2, 1927 முதல் கூட்டுறவு அச்சகம் ஒன்றை ஏற்படுத்திச் செயல்படுத்தினார். 1938-ல் கூட்டுறவு பால் உற்பத்தி விற்பனைக் கழகத்தையும் தொடங்கினார். கரந்தைத் தமிழ்ச் சங்கம், ராதாகிருஷ்ணன் தொடக்கப் பள்ளி, உமாமகேஸ்வரர் மேல்நிலைப் பள்ளி, கரந்தை கலைக் கல்லூரி, திக்கற்ற மாணவர் இல்லம், தமிழ்ச் சங்க நூல் நிலையம், படிப்பகம், தமிழ்ப்பெருமன்றம் ஆகியவை அவர் நினைவாக அமைந்திருக்கும் நிறுவனங்கள்.

== கரந்தை தமிழ்ச்சங்கம் ==
== கரந்தை தமிழ்ச்சங்கம் ==
தமிழ் கற்பிக்கவும், நூல்களை வெளியிடவும், ஆராயவும் சங்கம் ஒன்று தேவை என உணர்ந்த உமாமகேஸ்வரனார் கரந்தையில் நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார் தலைமையில் மே 14, 1911-ஆம் நாள் கூடிய மாநாட்டில் 'கரந்தைத் தமிழ்ச் சங்கம்’ என்னும் அமைப்பை உருவாக்கினார். அத்தமிழ்ச் சங்கத்தின் முதல் தலைமைப் பொறுப்பை உமாமகேஸ்வரனார் ஏற்றார். இணையான உள்ளம் கொண்டவர்களைச் சேர்த்து மே 14, 1911-ல் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை தொடங்கினார். அதன் தலைவராக இருந்து அவ்வமைப்பை ஒரு தமிழியக்கமாகவே ஆக்கினார். ஆயிரக்கணக்கான நூல்களைப் பெற்று விளங்கும் கரந்தைத் தமிழ்ச் சங்க நூல் நிலையம் அவர் முயற்சியால் ஏற்படுத்தப்பட்டது.
தமிழ் கற்பிக்கவும், நூல்களை வெளியிடவும், ஆராயவும் சங்கம் ஒன்று தேவை என உணர்ந்த உமாமகேஸ்வரனார் கரந்தையில் நாவலர் பண்டித [[ந.மு. வேங்கடசாமி நாட்டார்]] தலைமையில் மே 14, 1911-ம் நாள் கூடிய மாநாட்டில் 'கரந்தைத் தமிழ்ச் சங்கம்’ என்னும் அமைப்பை உருவாக்கினார். அத்தமிழ்ச் சங்கத்தின் முதல் தலைமைப் பொறுப்பை உமாமகேஸ்வரனார் ஏற்றார். இணையான உள்ளம் கொண்டவர்களைச் சேர்த்து மே 14, 1911-ல் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை தொடங்கினார். அதன் தலைவராக இருந்து அவ்வமைப்பை ஒரு தமிழியக்கமாகவே ஆக்கினார். ஆயிரக்கணக்கான நூல்களைப் பெற்று விளங்கும் கரந்தைத் தமிழ்ச் சங்க நூல் நிலையம் அவர் முயற்சியால் ஏற்படுத்தப்பட்டது.
 
மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை, நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் ஆகியோரின் நூல்களையும், யாழ் நூல், தொல்காப்பியம் - சேனா வரையம் - தெய்வச்சிலையார் உரை, நெல்லை வருக்கக் கோவை, சிந்தரந்தாதி, சுருதி வீணை, தமிழரசி, குறவஞ்சி, பரத சரித்திரம், கவியரசு நினைவுமலர், சிவமும் செந்தமிழும், சிலப்பதிகாரம் - புகார்க் காண்டம், கச்சிக் கலம்பகம், பாரத சாரவெண்பா, யவன மஞ்சரி, இந்தியத் தல யாத்திரை, புலவராற்றுப் படை, கரந்தைக் கட்டுரைக் கோவை போன்ற பல நூல்களை கரந்தைத் தமிழ்ச் சங்கம் வெளியிட்டது.

தமிழ்ச் சங்கம் சார்பில் அக்டோபர் 10, 1916-ல் செந்தமிழ்க் கைத்தொழிற் கல்லூரியைத் தொடங்கினார். சங்கத்தின் சார்பில் 1928-29-ல் கட்டணம் இல்லா மருத்துவமனை தொடங்கப்பட்டது.
மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை, நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் ஆகியோரின் நூல்களையும், யாழ் நூல், தொல்காப்பியம் - சேனா வரையம் - தெய்வச்சிலையார் உரை, நெல்லை வருக்கக் கோவை, சிந்தரந்தாதி, சுருதி வீணை, தமிழரசி, குறவஞ்சி, பரத சரித்திரம், கவியரசு நினைவுமலர், சிவமும் செந்தமிழும், சிலப்பதிகாரம் - புகார்க் காண்டம், கச்சிக் கலம்பகம், பாரத சாரவெண்பா, யவன மஞ்சரி, இந்தியத் தல யாத்திரை, புலவராற்றுப் படை, கரந்தைக் கட்டுரைக் கோவை போன்ற பல நூல்களை கரந்தைத் தமிழ்ச் சங்கம் வெளியிட்டது. தமிழ்ச் சங்கம் சார்பில் அக்டோபர் 10, 1916-ல் செந்தமிழ்க் கைத்தொழிற் கல்லூரியைத் தொடங்கினார். சங்கத்தின் சார்பில் 1928-29-ல் கட்டணம் இல்லா மருத்துவமனை தொடங்கப்பட்டது.

சங்கம் தொடங்கிய நான்காவது ஆண்டிலேயே 'தமிழ்ப்பொழில்' என்னும் மாத இதழ் தொடங்கப்பட்டது. தமிழாய்வில் மிக முக்கியமான இடம் வகிக்கும் ஆய்விதழ் இது. தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பல ஆய்வு நூல்களை வெளியிட்டார். 1915-ல் கட்டணமில்லாப் படிப்பகம் ஒன்றையும் தொடங்கினார். தமிழ்ச் சங்கத்திற்காக 1928-30-ல் ’கரந்தைத் தமிழ்ப் பெருமன்றம்' எனும் கட்டடம் கட்டப்பட்டது.

Line 28: Line 20:

தாகூரால் உருவாக்கப்பட்ட சாந்திநிகேதன் போல, தம்மால் உருவாக்கப்பட்ட கரந்தைத் தமிழ்ச் சங்கமும் விளங்க வேண்டும் என்று எண்ணினார். அதன் பொருட்டுத் தம் நண்பர் அ. கணபதிப் பிள்ளை என்பவருடன் வடநாட்டுப் பயணம் மேற்கொண்டார். கொல்கத்தா சென்று சாந்திநிகேதனைப் பார்வையிட்டார். காசி இந்துப் பல்கலைக்கழகத்தைப் பார்வையிட்டார். கரந்தை தமிழ்ச்சங்கம் நூறாண்டு கடந்து இன்றும் தமிழ்க்கல்வி மையமாக திகழ்கிறது.

== இலக்கியப் பணிகள் ==
== இலக்கியப் பணிகள் ==
தமிழ்ப்பொழில் இதழில் உமாமகேஸ்வரனார் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளும் தலையங்கங்களும் தமிழாய்வில் வழிகாட்டியாக அமைந்தன. தமிழ்ப்பொழில் இதழில் சாமிவேலாயுதம் பிள்ளை என்பவரைக் கொண்டு கணக்கு, அறிவியல் ஆகிய பாடங்களுக்கு நல்ல கலைச்சொற்களை உருவாக்கி அளித்தார். பழந்தமிழ் இலக்கியங்களை மாணவர்கள் கற்பதற்கான உரைகளுடன் வெளியிட ஏற்பாடு செய்தார். கரந்தை தமிழ்ச்சங்கத்தில் தமிழ் பயின்றவர்கள் தமிழாசிரியர்களாக பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றினர். ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக கரந்தை தமிழ்ச்சங்க தமிழ்ப்புலவர் தேர்வு தமிழாசிரியர்களுக்கான தகுதித்தேர்வாக இருந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் ஆராய்ச்சி நூல்கள் கரந்தை தமிழ்ச்சங்கத்தால் வெளியிடப்பட்டன.

== அரசியல் ==
== அரசியல் ==
உமாமகேஸ்வரனார் நீதிக்கட்சி ஆதரவாளர். தமிழ்நாட்டுப் பள்ளிகளில் 1938-ஆம் ஆண்டு இந்தி மொழி கட்டாய பாடமாக்கப்பட்டபோது அதனை முழு மூச்சாக எதிர்த்தார். பள்ளிகளில், தமிழாசிரியர்கள் தலைமையாசிரியர்களாக நியமனம் செய்யப்பட வேண்டும் என்பதற்காகக் குரல் கொடுத்தார். காந்தி தஞ்சாவூரில் உக்கடை ஹவுசில் செப்டம்பர் 16, 1927-ல் தங்கியிருந்தபோது நீதிக்கட்சி சார்பில் உமாமகேஸ்வரனார் ஏ.டி. பன்னீர்செல்வம், உக்கடைத் தேவர், சையத் தாஜுதீன், கார்குடி சின்னையாபிள்ளை, பட்டுக்கோட்டை தண்டபாணி செட்டியார் ஆகியோருடன் சென்று சந்தித்து பிராமணர் - பிராமணரல்லாதார் பூசலில் தலைவர்கள் தலையிட்டு புரிதலை உருவாக்கவேண்டும், மத ஒற்றுமை மற்றும் சாதிவேற்றுமை களைதலில் காங்கிரஸ் மேலும் தீவிரமாக ஈடுபடவேண்டும் என கோரிக்கை வைத்தார் [https://viduthalai.in/page1/8858.html *]
உமாமகேஸ்வரனார் நீதிக்கட்சி ஆதரவாளர். தமிழ்நாட்டுப் பள்ளிகளில் 1938-ம் ஆண்டு இந்தி மொழி கட்டாய பாடமாக்கப்பட்டபோது அதனை முழு மூச்சாக எதிர்த்தார். பள்ளிகளில், தமிழாசிரியர்கள் தலைமையாசிரியர்களாக நியமனம் செய்யப்பட வேண்டும் என்பதற்காகக் குரல் கொடுத்தார். காந்தி தஞ்சாவூரில் உக்கடை ஹவுசில் செப்டம்பர் 16, 1927-ல் தங்கியிருந்தபோது நீதிக்கட்சி சார்பில் உமாமகேஸ்வரனார் ஏ.டி. பன்னீர்செல்வம், உக்கடைத் தேவர், சையத் தாஜுதீன், கார்குடி சின்னையாபிள்ளை, பட்டுக்கோட்டை தண்டபாணி செட்டியார் ஆகியோருடன் சென்று சந்தித்து பிராமணர் - பிராமணரல்லாதார் பூசலில் தலைவர்கள் தலையிட்டு புரிதலை உருவாக்கவேண்டும், மத ஒற்றுமை மற்றும் சாதிவேற்றுமை களைதலில் காங்கிரஸ் மேலும் தீவிரமாக ஈடுபடவேண்டும் என கோரிக்கை வைத்தார் [https://viduthalai.in/page1/8858.html *]
 
== விருதுகள் ==
== விருதுகள் ==
1935-ஆம் ஆண்டு அன்றைய சென்னை மாகாண அரசு ராவ் பகதூர் விருது வழங்கியது.
1935-ம் ஆண்டு அன்றைய சென்னை மாகாண அரசு ராவ் பகதூர் விருது வழங்கியது.
[[File:Umamahesvaran.jpg|thumb|உமாமகேஸ்வரனார் கரந்தை தமிழ்ச்சங்கத்திலுள்ள சிலை]]

== நினைவகங்கள், நூல்கள் ==
== நினைவகங்கள், நூல்கள் ==
* ஏப்ரல் 13, 1973-ல் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் அவரது சிலை முதல்வர் மு. கருணாநிதியால் திறந்துவைக்கப்பட்டது.

* உமாமகேஸ்வரம் என்னும் வாழ்க்கை வரலாற்று நூல் கரந்தை ஜெயக்குமார் மற்றும் கரந்தை சரவணன் ஆகியோரால் எழுதப்பட்டது.

== மறைவு ==
== மறைவு ==
வட இந்தியப் பயணத்தின் போது உடல்நிலை குன்றியதால், அயோத்தியின் அருகே உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மே 9, 1941-ல் மறைந்தார்.

== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://s-pasupathy.blogspot.com/search/label/%E0%AE%89%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D பசுபதி பதிவுகள்]

* [https://web.archive.org/web/20130210182127/http://www.viduthalai.in/page1/8858.html விடுதலை கட்டுரை]

{{Finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:தமிழறிஞர்கள்]]
[[Category:தமிழறிஞர்கள்]]
[[Category:Spc]]

Latest revision as of 07:25, 24 February 2024

To read the article in English: Umamaheswaranar. ‎

உமாமகேஸ்வரனார்

உமாமகேஸ்வரனார் (தமிழவேள், த.வே.உமாமகேசுவரனார், உமாமகேசுவரம் பிள்ளை) (மே 7, 1883 – மே 9, 1941) தமிழறிஞர். தமிழ்க்கல்வி, தமிழ் கலைச்சொல்லாக்கம், தமிழாய்வு ஆகியவற்றுக்காக முன்னோடியான அமைப்புகளை உருவாக்கியவர். தஞ்சையில் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தைத் தோற்றுவித்து தலைவராக இருந்தவர். வழக்குரைஞர், தஞ்சைக்கு பல பொதுப்பணிகள் ஆற்றியவர்.

பிறப்பு, கல்வி

தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் கிளை ஆறுகளான வடவாற்றுக்கும் வெண்ணாற்றுக்கும் இடையில் உள்ள ’கருந்திட்டைக்குடி' எனும் கிராமத்தில் மே 7, 1883-ல் வேம்பப்பிள்ளை-காமாட்சி தம்பதிக்கு பிறந்தார். தஞ்சை வல்லத்திலும், கும்பகோணத்திலும் மூன்றாம் படிவம் வரை படித்தார். உமாமகேஸ்வரனாருக்குப் பன்னிரண்டு வயதாகும் போது, அவரது அன்னை காலமானார். எனவே, கரந்தையில் உள்ள அவரது சிற்றன்னையான பெரியநாயகத்தம்மையாரின் பொறுப்பில் விடப்பட்டார். தஞ்சாவூர் தூய பேதுரு கல்லூரியில் உமாமகேஸ்வரனார் நான்காம் படிவத்தில் சேர்க்கப்பட்டார். அவரது படிப்பு முடிவதற்குள் தந்தை வேம்பப்பிள்ளையும் காலமானார். சிற்றன்னையால் அன்புடன் வளர்க்கப்பட்டார். தஞ்சைக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

உமாமகேஸ்வரனார், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எழுத்தர் பணியில் சேர்ந்தார். அப்பணியை உதறி சட்டப்படிப்பு படிக்க சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். பட்டம் பெற்றபின் வழக்குரைஞர் தஞ்சை கே. சீனிவாசப் பிள்ளையிடம் சில ஆண்டுகள் பயிற்சி பெற்றார். பிறகு தாமே வழக்குரைஞர் தொழிலைச் செய்யத் தொடங்கினார். உமாமகேஸ்வரனார் 25-ம் வயதில் திருச்சியைச் சேர்ந்த அண்ணாமலைப் பிள்ளையின் மகளான உலகநாயகியை மணந்தார். இவருக்கு பஞ்சாபகேசன், மாணிக்கவாசகம், சிங்காரவேலு என்ற மூன்று மகன்கள். மூன்றாம் குழந்தை நான்கு மாதங்கள் ஆனபோது மனைவி உலகநாயகி காலமானார். உமாமகேஸ்வரனார் மறுமணம் செய்துகொள்ளவில்லை. இவரது மூத்தமகன் பஞ்சாபகேசன் பள்ளி இறுதி வகுப்பு படிக்கும்போது இறந்தார். அவரது பெயரில் கரந்தைக் கல்லூரியில் ஒரு நினைவு நிதியை ஏற்படுத்தி ஆண்டுதோறும் ஏழை மாணவர்களுக்கு உதவித்தொகை அளித்தார்.

பொதுப்பணிகள்

உமாமகேஸ்வரனார் ஆங்கிலேய அரசால் அரசுவழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். ஆங்கிலேய ஆட்சியால் உருவாக்கப்பட்ட தஞ்சை மாவட்டக் கழகத்தின் (Tanjore district council) முதல் நியமனத் தலைவராக பணியாற்றினார். அவரது பதவிக்காலத்தில் வரகூர்-மேலகரச்சாலை மற்றும் ஆலங்குடி-கண்டியூர்ச் சாலைகள் போடப்பட்டன. மேலும் நாகத்தி, தொண்டரையன்பாடி என்னும் சிற்றூர்களுக்குச் செல்ல ஆற்றின் குறுக்கே பாலங்கள் கட்ட ஏற்பாடு செய்தார். இவர் பொறுப்பேற்ற போது தஞ்சை மாவட்டத்தில் நாற்பது அல்லது ஐம்பது தொடக்கப்பள்ளிகள் தான் இருந்தன. உமாமகேஸ்வரனார் அந்த எண்ணிக்கையை நூற்றியெழுபதாக உயர்த்தினார்.

செப்டெம்பர் 10, 1926-ல் தஞ்சையில் கூட்டுறவு நிலவள வங்கி ஒன்று தொடங்க முயற்சி எடுத்தார். பிப்ரவரி 2, 1927 முதல் கூட்டுறவு அச்சகம் ஒன்றை ஏற்படுத்திச் செயல்படுத்தினார். 1938-ல் கூட்டுறவு பால் உற்பத்தி விற்பனைக் கழகத்தையும் தொடங்கினார். கரந்தைத் தமிழ்ச் சங்கம், ராதாகிருஷ்ணன் தொடக்கப் பள்ளி, உமாமகேஸ்வரர் மேல்நிலைப் பள்ளி, கரந்தை கலைக் கல்லூரி, திக்கற்ற மாணவர் இல்லம், தமிழ்ச் சங்க நூல் நிலையம், படிப்பகம், தமிழ்ப்பெருமன்றம் ஆகியவை அவர் நினைவாக அமைந்திருக்கும் நிறுவனங்கள்.

கரந்தை தமிழ்ச்சங்கம்

தமிழ் கற்பிக்கவும், நூல்களை வெளியிடவும், ஆராயவும் சங்கம் ஒன்று தேவை என உணர்ந்த உமாமகேஸ்வரனார் கரந்தையில் நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார் தலைமையில் மே 14, 1911-ம் நாள் கூடிய மாநாட்டில் 'கரந்தைத் தமிழ்ச் சங்கம்’ என்னும் அமைப்பை உருவாக்கினார். அத்தமிழ்ச் சங்கத்தின் முதல் தலைமைப் பொறுப்பை உமாமகேஸ்வரனார் ஏற்றார். இணையான உள்ளம் கொண்டவர்களைச் சேர்த்து மே 14, 1911-ல் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை தொடங்கினார். அதன் தலைவராக இருந்து அவ்வமைப்பை ஒரு தமிழியக்கமாகவே ஆக்கினார். ஆயிரக்கணக்கான நூல்களைப் பெற்று விளங்கும் கரந்தைத் தமிழ்ச் சங்க நூல் நிலையம் அவர் முயற்சியால் ஏற்படுத்தப்பட்டது.

மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை, நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் ஆகியோரின் நூல்களையும், யாழ் நூல், தொல்காப்பியம் - சேனா வரையம் - தெய்வச்சிலையார் உரை, நெல்லை வருக்கக் கோவை, சிந்தரந்தாதி, சுருதி வீணை, தமிழரசி, குறவஞ்சி, பரத சரித்திரம், கவியரசு நினைவுமலர், சிவமும் செந்தமிழும், சிலப்பதிகாரம் - புகார்க் காண்டம், கச்சிக் கலம்பகம், பாரத சாரவெண்பா, யவன மஞ்சரி, இந்தியத் தல யாத்திரை, புலவராற்றுப் படை, கரந்தைக் கட்டுரைக் கோவை போன்ற பல நூல்களை கரந்தைத் தமிழ்ச் சங்கம் வெளியிட்டது. தமிழ்ச் சங்கம் சார்பில் அக்டோபர் 10, 1916-ல் செந்தமிழ்க் கைத்தொழிற் கல்லூரியைத் தொடங்கினார். சங்கத்தின் சார்பில் 1928-29-ல் கட்டணம் இல்லா மருத்துவமனை தொடங்கப்பட்டது.

சங்கம் தொடங்கிய நான்காவது ஆண்டிலேயே 'தமிழ்ப்பொழில்' என்னும் மாத இதழ் தொடங்கப்பட்டது. தமிழாய்வில் மிக முக்கியமான இடம் வகிக்கும் ஆய்விதழ் இது. தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பல ஆய்வு நூல்களை வெளியிட்டார். 1915-ல் கட்டணமில்லாப் படிப்பகம் ஒன்றையும் தொடங்கினார். தமிழ்ச் சங்கத்திற்காக 1928-30-ல் ’கரந்தைத் தமிழ்ப் பெருமன்றம்' எனும் கட்டடம் கட்டப்பட்டது.

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளிவிழா 1938 ஏப்ரல் 15,16,17 ஆகிய நாள்களில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவின் முதல்நாளில் சைவ அறிஞர் ஞானியாரடிகள் தலைமையில், நாவலர் சோமசுந்தர பாரதியார் முன்மொழிய உமாமகேஸ்வரனாருக்குத் "தமிழவேள்' பட்டம் வழங்கப்பட்டது. அவ்விழாவின் இரண்டாம் நாளில் கரந்தைத் தமிழ்க் கல்லூரியை தொடங்க திட்ட அறிவிப்பை உமாமகேஸ்வரனார் வெளியிட்டார். உமாமகேஸ்வரனாரின் முயற்சியால் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆட்சி மன்றத்திலும், கலை மன்றத்திலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் கல்விநிலையம் என்னும் இடம் கிடைத்தது.

தாகூரால் உருவாக்கப்பட்ட சாந்திநிகேதன் போல, தம்மால் உருவாக்கப்பட்ட கரந்தைத் தமிழ்ச் சங்கமும் விளங்க வேண்டும் என்று எண்ணினார். அதன் பொருட்டுத் தம் நண்பர் அ. கணபதிப் பிள்ளை என்பவருடன் வடநாட்டுப் பயணம் மேற்கொண்டார். கொல்கத்தா சென்று சாந்திநிகேதனைப் பார்வையிட்டார். காசி இந்துப் பல்கலைக்கழகத்தைப் பார்வையிட்டார். கரந்தை தமிழ்ச்சங்கம் நூறாண்டு கடந்து இன்றும் தமிழ்க்கல்வி மையமாக திகழ்கிறது.

இலக்கியப் பணிகள்

தமிழ்ப்பொழில் இதழில் உமாமகேஸ்வரனார் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளும் தலையங்கங்களும் தமிழாய்வில் வழிகாட்டியாக அமைந்தன. தமிழ்ப்பொழில் இதழில் சாமிவேலாயுதம் பிள்ளை என்பவரைக் கொண்டு கணக்கு, அறிவியல் ஆகிய பாடங்களுக்கு நல்ல கலைச்சொற்களை உருவாக்கி அளித்தார். பழந்தமிழ் இலக்கியங்களை மாணவர்கள் கற்பதற்கான உரைகளுடன் வெளியிட ஏற்பாடு செய்தார். கரந்தை தமிழ்ச்சங்கத்தில் தமிழ் பயின்றவர்கள் தமிழாசிரியர்களாக பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றினர். ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக கரந்தை தமிழ்ச்சங்க தமிழ்ப்புலவர் தேர்வு தமிழாசிரியர்களுக்கான தகுதித்தேர்வாக இருந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் ஆராய்ச்சி நூல்கள் கரந்தை தமிழ்ச்சங்கத்தால் வெளியிடப்பட்டன.

அரசியல்

உமாமகேஸ்வரனார் நீதிக்கட்சி ஆதரவாளர். தமிழ்நாட்டுப் பள்ளிகளில் 1938-ம் ஆண்டு இந்தி மொழி கட்டாய பாடமாக்கப்பட்டபோது அதனை முழு மூச்சாக எதிர்த்தார். பள்ளிகளில், தமிழாசிரியர்கள் தலைமையாசிரியர்களாக நியமனம் செய்யப்பட வேண்டும் என்பதற்காகக் குரல் கொடுத்தார். காந்தி தஞ்சாவூரில் உக்கடை ஹவுசில் செப்டம்பர் 16, 1927-ல் தங்கியிருந்தபோது நீதிக்கட்சி சார்பில் உமாமகேஸ்வரனார் ஏ.டி. பன்னீர்செல்வம், உக்கடைத் தேவர், சையத் தாஜுதீன், கார்குடி சின்னையாபிள்ளை, பட்டுக்கோட்டை தண்டபாணி செட்டியார் ஆகியோருடன் சென்று சந்தித்து பிராமணர் - பிராமணரல்லாதார் பூசலில் தலைவர்கள் தலையிட்டு புரிதலை உருவாக்கவேண்டும், மத ஒற்றுமை மற்றும் சாதிவேற்றுமை களைதலில் காங்கிரஸ் மேலும் தீவிரமாக ஈடுபடவேண்டும் என கோரிக்கை வைத்தார் *

விருதுகள்

1935-ம் ஆண்டு அன்றைய சென்னை மாகாண அரசு ராவ் பகதூர் விருது வழங்கியது.

உமாமகேஸ்வரனார் கரந்தை தமிழ்ச்சங்கத்திலுள்ள சிலை

நினைவகங்கள், நூல்கள்

  • ஏப்ரல் 13, 1973-ல் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் அவரது சிலை முதல்வர் மு. கருணாநிதியால் திறந்துவைக்கப்பட்டது.
  • உமாமகேஸ்வரம் என்னும் வாழ்க்கை வரலாற்று நூல் கரந்தை ஜெயக்குமார் மற்றும் கரந்தை சரவணன் ஆகியோரால் எழுதப்பட்டது.

மறைவு

வட இந்தியப் பயணத்தின் போது உடல்நிலை குன்றியதால், அயோத்தியின் அருகே உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மே 9, 1941-ல் மறைந்தார்.

உசாத்துணை

✅Finalised Page