under review

உப்பு வேலி: Difference between revisions

From Tamil Wiki
Line 2: Line 2:
இங்கிலாந்து எழுத்தாளர் ராய் மாக்சம் எழுதிய 'The great hedge of India’ எனும் பயண மற்றும் வரலற்று நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு 'உப்பு வேலி’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.  இதன் மொழிபெயர்ப்பாளர் [[சிறில் அலெக்ஸ்]].

== பதிப்பு ==
== பதிப்பு ==
உப்பு வேலி நூலை முதலில் வெளியிட்டது [[வெ. அலெக்ஸ்]] நடத்தி வந்த எழுத்து பதிப்பகம். 2015ல் இந்நூல் சென்னையில் ராய் மாக்சத்தின் தலைமையில் வெளியிடப்பட்டது. இதன் மேம்படுத்தப்பட்ட பதிப்பு 2020ஆம் ஆண்டு தன்னறம் வெளியீடாக பதிப்பிக்கப்பட்டது. 2021-ல் இதன் இரண்டாம் பதிப்பு வெளியிடப்பட்டது.
ராய் மாக்சம் ஆங்கிலத்தில் எழுதிய 'The Great Hedge of India' 2001ல் வெளிவந்தது.
 
இதன் தமிழ் மொழியாக்கமான உப்பு வேலி நூலை முதலில் வெளியிட்டது [[வெ. அலெக்ஸ்]] நடத்தி வந்த எழுத்து பதிப்பகம். 2015ல் இந்நூல் சென்னையில் ராய் மாக்சத்தின் தலைமையில் வெளியிடப்பட்டது. இதன் மேம்படுத்தப்பட்ட பதிப்பு 2020ஆம் ஆண்டு தன்னறம் வெளியீடாக பதிப்பிக்கப்பட்டது. 2021-ல் இதன் இரண்டாம் பதிப்பு வெளியிடப்பட்டது.
 
== ஆசிரியர் ==
== ஆசிரியர் ==
இந்த புத்தகத்தின் ஆசிரியர் ராய் மாக்ஸம். லண்டன், கவெண்ட் கார்டன் பகுதியில் வசிக்கும் இவர் பள்ளி படிப்பிற்குப் பின்னர் ஒரு தேயிலைத் தோட்ட மேலாளராக ஆப்ரிக்காவில் பணியாற்றினார். பின்னர் ஆப்ரிக்க கலைப்பொருட்களை விற்கும் கடை ஒன்றை லண்டனில் நடத்தி வந்தார். முறையாக பழைய புத்தகங்களை பேணும் பயிற்சி பெற்ற இவர் நூலகங்களில் இருந்த பழைய புத்தகங்க்களை கெடாமல் பாதுகாக்கும் பணியிலும் ஈடுபட்டார். நான்கு வரலாற்று புத்தகங்களையும் இரு நாவல்களையும் எழுதியுள்ளார்.

Revision as of 13:20, 28 September 2022

உப்பு வேலி புதிய பதிப்பு
உப்பு வேலி புதிய பதிப்பு

இங்கிலாந்து எழுத்தாளர் ராய் மாக்சம் எழுதிய 'The great hedge of India’ எனும் பயண மற்றும் வரலற்று நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு 'உப்பு வேலி’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.  இதன் மொழிபெயர்ப்பாளர் சிறில் அலெக்ஸ்.

பதிப்பு

ராய் மாக்சம் ஆங்கிலத்தில் எழுதிய 'The Great Hedge of India' 2001ல் வெளிவந்தது.

இதன் தமிழ் மொழியாக்கமான உப்பு வேலி நூலை முதலில் வெளியிட்டது வெ. அலெக்ஸ் நடத்தி வந்த எழுத்து பதிப்பகம். 2015ல் இந்நூல் சென்னையில் ராய் மாக்சத்தின் தலைமையில் வெளியிடப்பட்டது. இதன் மேம்படுத்தப்பட்ட பதிப்பு 2020ஆம் ஆண்டு தன்னறம் வெளியீடாக பதிப்பிக்கப்பட்டது. 2021-ல் இதன் இரண்டாம் பதிப்பு வெளியிடப்பட்டது.

ஆசிரியர்

இந்த புத்தகத்தின் ஆசிரியர் ராய் மாக்ஸம். லண்டன், கவெண்ட் கார்டன் பகுதியில் வசிக்கும் இவர் பள்ளி படிப்பிற்குப் பின்னர் ஒரு தேயிலைத் தோட்ட மேலாளராக ஆப்ரிக்காவில் பணியாற்றினார். பின்னர் ஆப்ரிக்க கலைப்பொருட்களை விற்கும் கடை ஒன்றை லண்டனில் நடத்தி வந்தார். முறையாக பழைய புத்தகங்களை பேணும் பயிற்சி பெற்ற இவர் நூலகங்களில் இருந்த பழைய புத்தகங்க்களை கெடாமல் பாதுகாக்கும் பணியிலும் ஈடுபட்டார். நான்கு வரலாற்று புத்தகங்களையும் இரு நாவல்களையும் எழுதியுள்ளார்.

உப்பு வேலி முதல் பதிப்பு
உப்பு வேலி முதல் பதிப்பு

லண்டனில் 'குயிண்டோ’ எனப்படும் பழைய புத்தகக் கடையில் கிழக்கிந்திய கம்பெனியின் அலுவலர் ஒருவரின் குறிப்பு ஒன்றில் இந்தியாவில் ஒரு பெரிய புதர் வேலி இருந்ததாக வாசித்தார். அவர் அந்த வேலியின் வரலாற்றை தேடிய பயணமும் அதன் வழியாக அவர் கண்ட உப்பின், உப்பு வேலியின் வரலாற்றையும் இந்நூல் பதிவு செய்தது.

நூலின் அமைப்பு

உப்பு வேலி நூலில் பதினொரு அத்தியாயங்கள் உள்ளன. இந்நூலின் ஒரு பாதி ராய் மாக்ஸத்தின் பயண அனுபவங்கள், சாகசங்கள் உள்ளன. மறுபாதி உப்பு, உப்பு வேலியின் வரலாற்றையும், கிழக்கிந்திய கம்பெனி காலத்து இந்திய வரலாற்றையும் பதிவு செய்வதாய் உள்ளன.

அத்தியாயங்கள்

  1. புதர்வேலி - புதர் வேலி குறித்த தகவலை ராய் அறிவதும், அதைத் தேட அவர் முடிவெடுப்பதும் அவரது முதல் சில பயணங்களும்.
  2. உப்பு வரி - உப்பு வரி இந்தியாவிலும் மற்றும் உலக அளவிலும் எப்படி விதிக்கப்பட்டிருந்தது, வசூலிக்கப்பட்டது என்பதன் வரலாறு
  3. வரைபடங்கள் - ராய் கிழக்கிந்திய கம்பெனி கால வரைபடங்களையும் தகவல்களையும் சேகரிப்பது
  4. சுங்க எல்லை - சுங்க வரி வசூலிக்க ஆங்கிலேயர் செய்த முயற்சிகள், கொல்கொத்தா மாகாணத்தின் மீது ஆங்க்கிலேய ஆளுமை, உப்பு வேலி உருவாகி வளர்ந்த வரலாறு
  5. ஆக்ரா - ஆக்ராவிலும் அதன் அருகிலும் உப்பு வேலியின் எச்சங்களைத் தேடியது
  6. சுங்கப் புதர்வேலி - புதர்வேலி பராமரிக்கப்பட்ட வரலாறு, அதை ஒட்டிய சுவையான தகவல்கள்
  7. உப்பு - உயிர்வாழ உப்பு தேவையானதா என்பதைக் குறித்த அறிவியல் தகவல்கள்
  8. நகைப்புக்குரிய வெறி - ராய் மாக்சத்தின் தேடல் ஒரு வெறியாக மாறி அவரை உந்திச் செல்லுதல்
  9. கலகம் - உப்பிற்காக நடத்தப்பட்ட போர்களின், போராட்டங்க்களின் வரலாறு
  10. புளியமரங்கள் - ராய் மாக்சம் உப்பு வேலயைக் காணாமல் நம்பிக்கை இழப்பது
  11. சம்பல் - சம்பல் பள்ளத்தாக்குப் பகுதியில் ராய் செய்த கடைசி முயற்சிகள்
த கிரேட் ஹெட்ஜ் ஆஃப் இண்டியா
த கிரேட் ஹெட்ஜ் ஆஃப் இண்டியா

மொழிபெயர்ப்பின் தாக்கம்

உப்பு வேலி நூலின் ஆங்கில பதிப்பு ஒரு சிறு அலையை இந்திய அளவில் உருவாக்கியிருந்தாலும் இதன் தமிழாக்கம் தமிழ் வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பல மதிப்புரைகளும் இப்புத்தகத்திற்கு எழுதப்பட்டுள்ளன. ஆங்கிலேய ஆட்சியின் அறியப்படாத அத்தியாயம் ஒன்றை இப்புத்தகம் தமிழகத்துக்கு எடுத்து வந்தது.

உசாத்துணை

இணைப்புகள்

✅Finalised Page