ஈழகேசரி

From Tamil Wiki
Revision as of 13:24, 24 February 2022 by Jeyamohan (talk | contribs)
ஈழகேசரி

ஈழகேசரி ( 1930 -1958) இலங்கையில் இருந்து வெளிவந்த தொடக்ககால தமிழ் இதழ். இது அரசியல், சமூகவியல் செய்திகளையும் இலக்கியப்படைப்புகளையும் வெளியிட்டது. இலங்கைத் தமிழர்களின் உரிமைக்குரலாகவும் ஒலித்தது

வெளியீடு

நா.பொன்னையா 22.ஜூன்1930 அன்று ஈழகேசரி வார இதழின் முதல் இதழ் வெளியானது. ஈழகேசரியைத் தொடக்கியவர் நா. பொன்னையா என்பவர். இதழ் தமிழ் மக்களிடையே அரசியல் விழிப்புணர்வையும் சமூக மாற்றத்தையும் உருவாக்கும் நோக்கம் கொண்டிருந்ததை அதன் முதல் இதழ் அறிவித்தது

அறியாமை வயப்பட்டு உறங்கிக் கிடக்கும் மக்களைத் தட்டியெழுப்பி அறிவுச்சுடர் கொளுத்துவதற்கும் ஏற்ற நல்விளக்குப் பத்திரிகையே... நமது நாடு அடிமைக் குழியிலாழ்ந்து, அன்னியர் வயப்பட்டு, அறிவிழந்து, மொழிவளம் குன்றி, சாதிப்பேய்க்காட்பட்டு, சன்மார்க்க நெறியழிந்து, உன்மத்தராய், மாக்களாய் உண்டுறங்கி வாழ்தலே கண்ட காட்சியெனக் கொண்டாடுமிக் காலத்தில் எத்தனை பத்திரிகைகள் தோன்றினும் மிகையாகாது.

...மக்களாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் தன்னலமற்ற தியாக சிந்தையுடனும் யாதானுமொரு பணியிற் கடனாற்றுதல் வேண்டுமென்னும் பேரறிஞர் கொள்கை சிரமேற் கொண்டும் எமது சிற்றறிவிற் போந்தவாறு "பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவவானினும் நனிசிறந்தனவே" என்னும் ஆன்றோர் வாக்கின்படியும் தேசத்தொண்டு செய்தலே சிறப்புடையதெனக் கருதி இப்பணியை மேற்கொண்டோம்.

ஈழகேசரி இதழ் இலங்கையில் தோன்றிய முதல் மதச்சார்பற்ற இதழ் என்றும், ஈழ அரசியலுரிமை கோரிக்கைகள் எழுந்ததை ஒட்டி இந்த இதழ் வெளியாயிற்று என்றும் கா.சிவத்தம்பி கருதுகிறார் (சிவத்தம்பி, கார்த்திகேசு; யாழ்ப்பாணம் சமூகம், பண்பாடு, கருத்துநிலை; குமரன் அச்சகம், கொழும்பு, ஆவணி 2000)

உசாத்துணை