under review

ஈப்போ அரவிந்தன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(changed template text)
Line 28: Line 28:
[[Category:மலேசிய ஆளுமைகள்]]
[[Category:மலேசிய ஆளுமைகள்]]
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
{{finalised}}
{{Finalised}}

Revision as of 13:39, 15 November 2022

ஈப்போ அரவிந்தன்
ஈப்போ அரவிந்தன், மாத்தளை சோமு, கோ. முனியாண்டி

ஈப்போ அரவிந்தன் (20 நவம்பர் 1948) (இயற்பெயர் சுப்பிரமணியம்) மலேசியாவைச் சேர்ந்த எழுத்தாளர். பொதுவாசிப்புக்குரிய கதைகளை எழுதியவர். இதழாளர்.

பிறப்பு, கல்வி

இவர் நவம்பர் 20, 1948-ல் பேராக், கமுனிங் தோட்டத்தில் பிறந்தார். அப்பாவின் அம்மாசி. அம்மாவின் நாகம்மாள். ஈப்போ அரவிந்தனின்  இயற்பெயர் சுப்பிரமணியம். இவர் தமிழகப் படைப்பாளர் நா. பார்த்தசாரதி எழுதிய கதாபாத்திரத்தால் ஈர்க்கப்பட்டு அரவிந்தன் என்ற புனைப்பெயரைச் சூட்டிக்கொண்டார். ஈப்போ என்ற ஊரைச் சேர்ந்தவராகியதால் முன்னொட்டாக புனைப்பெயருக்கு முன் ஊர்ப்பெயரை வைத்துக்கொண்டார்.

ஈப்போ அரவிந்தனின் தந்தை  தாத்தையங்கார்பேட்டை, திருச்சியிலிருந்து மலாயாவிற்கு வந்தவர். இவர் பிறந்த ஆறே மாதத்தில், இவரது தந்தை குடும்பத்தைவிட்டுப் பிரிந்து தமிழகத்தில் நிரந்தரமாகத் தங்கிவிட்டார். அத்தை மற்றும் சின்னம்மாவின் பராமரிப்பில் வளர்ந்த ஈப்போ அரவிந்தன், பிறகு தன் தாயிடம் இணைந்தார்.

ஈப்போ அரவிந்தன் 1953-ல் ஆரம்பக் கல்வியை கமுனிங் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் தொடங்கினார். பேராக் மாநிலத்திலுள்ள கேப்பிஸ் தமிழ்ப்பள்ளி (1957), கோலாகங்சார் தமிழ்ப்பள்ளி (!958) ஆகியவை இவர் தொடர்ந்து பயின்ற தமிழ்ப்பள்ளிகள். 1960-ல் சுங்கை சிப்புட் மகாத்மா காந்தி கலாசாலையில் ஆறாம், ஏழாம் ஆண்டுக் கல்வியைத் தொடர்ந்தார். மேலும் கல்வியைத் தொடர இயலாமல், பேராக் ரிவர்வெல்லி தோட்டத்தில் வேலை பார்த்தார். பிறகு தன் சுய ஆர்வத்தின் காரணமாக ஏல். சி. இ. வரை ஆங்கிலக் கல்வி பயின்றார்.

குடும்பம், தொழில்

இவர் டிசம்பர் 13,1970-ல் வீரம்மாள் என்பவரை மணந்தார். இத்தம்பதிகளுக்கு மூன்று ஆண்கள், ஒரு பெண் குழந்தைகள். குடும்பச் சூழல் காரணமாக தோட்டத்தில் ரப்பர் பால்மரம் சீவும் தொழிலாளியாக வேலை பார்த்தார். பின்னர் 1977-ல் சொந்தத் தொழில் ஈடுபட்டார்.

எழுத்து வாழ்க்கை

ஈப்போ அரவிந்தன் 1966-1969 வரை சில நாடகங்களை எழுதியும் நடித்தும் வந்தார். 1990ல் நயனத்தில் தொடராக வந்த 'கனவுகளின் சுயவரம்' என்ற தொடர்கதை இவருக்கு பரவலான அறிமுகத்தைக் கொடுத்தது.  1996-ல் 'தொடரும் ஞாயங்கள்' என்ற சிறுகதை தொகுப்பை வெளியிட்டார்.

இதழியல்

ஈப்போ அரவிந்தன் 1999-2002 வரை 'இளவேனில்' என்ற மாத இதழை வெளியிட்டார். இவை மொத்தம் 16 தொகுதிகள் வெளியாயின. 2011-ல் மாத இதழான 'தமிழ் ஓவியம்' தொடங்கினார். இவ்விதழ் 2016 வரை வெளிவந்தது.

பொது வாழ்க்கை

ஈப்போ அரவிந்தன் மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றத்தில் மிகத் தீவிரமாக செயல்பட்டார். பேரா, சுங்கை சிப்புட் கிளையின் செயலாளராக 1966-1969 வரை பொறுப்பேற்றார். இக்காலக் கட்டத்தில் 'கலை மாலை' என்ற இதழை மணிமன்றம் சார்பாக வெளியிட்டார். 1968ல் மலேசியத் திராவிடக் கழகத்தில் சிறிது காலம் ஈடுபட்டுள்ளார். தமிழகத்திலிருந்து சினிமா பாடகர்கள், பி.சுசிலா, ஜமுனாராணி, எம். ராகவன் போன்றோரை அழைத்து வந்து இசை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார்.

இலக்கிய இடம்

ஈப்போ அரவிந்தன் வணிக இலக்கியத்தை தன் பாதையாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டவர். இவர் வெளியிட்ட நாவல், இதழ்கள் அனைத்தும் பொதுவாசிப்புக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டவை.

நூல்கள்

  • கனவுகளின் சுயவரம் (நாவல்) - 1990
  • தொடரும் ஞாயங்கள் (சிறுகதை) - 1996
  • எழுதிச் செல்லும் விதியின் கை (வாழ்க்கை வரலாறு) - 2019

உசாத்துணை


✅Finalised Page