இலக்கியபீடம்
From Tamil Wiki
இலக்கிய பீடம் (1997) எழுத்தாளர் விக்ரமனால் நடத்தப்பட்ட இதழ். அவர் மறைவுக்குப்பின் இலக்கியபீடம் என்னும் அமைப்பால் நடத்தப்பட்டுகிறது.
வரலாறு
எழுத்தாளர் விக்ரமன் ஏப்ரல் 1997-ல் தொடங்கிய இதழ். முதலில் காலாண்டு இதழாக வந்தது. பின்னர் மாத இதழாகப் வெளிவந்தது. இலக்கிய பீடம் இலக்கியத்தைக் குறிக்கோளாகக் கொண்டு “ஓவியம் செய்வோம், காவியம் செய்வோம், கலைகள் வளர்ப்போம்’ என்ற முழக்கத்துடன் வெளிவருகிறது.
நிகழ்ச்சிகள்
- இலக்கிய பீடம் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் அதன் ஆண்டு விழாவில் இலக்கியவாதிகளுக்கு இலக்கிய பீட விருதையும், ரூ.10,000 பரிசையும் வழங்கி வருகிறது.
- திருமதி ரங்கநாயகி அம்மாள் நாவல் போட்டி நடத்தி சிறந்த நாவலுக்கு ரூ.5,000 பரிசு வழங்கி வருகிறது. இந்நாவல்களை இலக்கிய பீடம் பதிப்பகம் வெளியிடுகிறது
- விக்ரமன் மறைவுக்குப் பின் இலக்கிய பீடம் அமைப்பு ஆண்டுதோறும் அவர் பெயரால் சிறுகதைப்போட்டி நடத்தி வருகிறது
- மாம்பலம் ஆ.சந்திரசேகர் ஆதரவுடன் இலக்கியபீடம் நடத்தும் சிறுகதைப்போட்டி நடைபெறுகிறது
உசாத்துணை
- http://s-pasupathy.blogspot.com/2016/03/1_19.html
- https://www.senkani.com/2020/11/blog-post.html
- https://www.dinamalar.com/news_detail.asp?id=2873506
- https://www.dinamalar.com/news_detail.asp?id=2158277
- https://m.facebook.com/ilakiyapeedam/
⨮ Standardised
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.