இராமசாமி ஐயர்
From Tamil Wiki
இராமசாமி ஐயர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர், எழுத்தாளர்.
வாழ்க்கைக் குறிப்பு
இராமசாமி ஐயர் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வட்டுக்கோட்டையில் சுப்பிரமணிய ஐயருக்கு மகனாகப் பிறந்தார்.
இலக்கிய வாழ்க்கை
இராமசாமி ஐயர் அர்ஜுனன் மனைவியாகிய அல்லியின் சரித்திரத்தை நாடகமாகப் பாடினார். கதிரமலைக் கந்தகவாமி பேரில் இவர் பற்பல கீர்த்தனைகளும் விருத்தங்களும் பாடினார்
நூல் பட்டியல்
- அல்லியின் சரித்திரம் (நாடகம்)
- கதிரமலைக் கந்தகவாமி கீர்த்தனைகள்
உசாத்துணை
- ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், தென் புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை, 1967, பாரி நிலையம் வெளியீடு
- ஆளுமை:இராமசாமிஐயர், சுப்பிரமணியஐயர்: noolaham
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
22-Jan-2023, 06:17:18 IST