under review

இராணி பௌசியா

From Tamil Wiki
Revision as of 08:40, 24 February 2024 by Logamadevi (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

இராணி பௌசியா (பிறப்பு: ஜூலை 31, 1962) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர்.

வாழ்க்கைக் குறிப்பு

இராணி பௌசியா இலங்கை பொலனறுவை கல்லளையில் ஜூலை 31, 1962-ல் பிறந்தார். இவரது தந்தை மாணிக்கம். இந்துக் குடும்பத்தில் பிறந்து இஸ்லாம் மார்க்கத்தில் இணைந்தவர். ஆரம்பக் கல்வியை பொலனறுவை அல் அஸ்ஹர் மகாவித்தியாலயத்தில் கற்றார். இப் பாடசாலையின் வரலாற்றில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சயைில் முதலாவதாக வந்தார்.

இராணி பௌசியா மணமானவர். ஐந்து ஆண் பிள்ளைகள். ஆசிரியராகப் பணியாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

இராணி பௌசியா 2002-ல் நடைபெற்ற இலக்கிய விழாவின் போது மாகாண மட்டப் போட்டியில் கலந்துகொண்டு நாட்டார் பாடலில் முதலாம் இடத்தையும் கவிதைப் போட்டியில் இரண்டாமிடத்தையும் பெற்றார். 'அகயாத்திரையும் அகலாத்திரையும்' என்ற இவரது முதலாவது கவிதை நூல் 2018-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. 'அகல் திரையும் ஒளிவிளக்கும்' இவரின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு.

நூல் பட்டியல்

கவிதைத் தொகுப்பு
  • அகயாத்திரையும் அகலாத்திரையும் (2018)
  • அகல் திரையும் ஒளிவிளக்கும்

உசாத்துணை


✅Finalised Page