இராசப்ப முதலியார்

From Tamil Wiki
Revision as of 13:55, 1 March 2022 by Subhasrees (talk | contribs) (இராசப்ப முதலியார் - முதல் வரைவு)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த இராசப்ப முதலியார் தமிழ்ப்புலவர். கர்னாடக இசைப் பாடல்கள் இயற்றியவர்.

இசைப்பணி

தமிழ்ப்புலவராகிய இராசப்ப முதலியார் முருகன் மீது பல பஜனைக் கீர்த்தனங்கள் எழுதியவர். இவரது கீர்த்தனைகள் பஜனைக்குரிய எளிய சொற்களில் எதுகை மோனையோடு எழுதப்பட்டவை.

படைப்புகள்
  • ஸ்ரீமுத்தையன் பஜனைக் கீர்த்தனம் - 39 கீர்த்தனைகள், 3 பதங்கள், 18 பலவகைப் பாடல்கள்(கட்டியம், ஊசல், எச்சரிக்கை, லாலி, பள்ளியெழுச்சி) - 1903-ல் அச்சானது. வைத்தீஸ்வரன் கோவில் முத்துக்குமார சுவாமி, தெய்வானை, வள்ளி மீதான பாடல்கள் அடங்கியது இத்தொகுதி.
  • மயிலைக் கபாலீசர் பஜனைக் கீர்த்தனம் - 16 கீர்த்தனைகள் - 1903-ல் அச்சானது.
  • சுந்தரேசர் கீர்த்தனம் - 7 கீர்த்தனைகள் -1910-ல் அச்சானது.
எடுத்துக்காட்டு

மயிலை சிங்காரவேலர் மீது இவர் பாடிய கீர்த்தனை:

ராகம்: பைரவி, தாளம்: ஆதி

பல்லவி:

மயிலைச் சிங்கார வேலா - தெய்வானைவல்லி

வள்ளி நாயகி லோலா

அனுபல்லவி:

கயிலைப் பரன் கபாலி கற்பக வல்லி சூலி

கனிவா யெடுத்தணைக்குங் கனிவாய் முத்தங் கொடுக்குங்

கந்தா மதலை சுகந்தந்தாய் எனவே கொஞ்சும்

மைந்தா மயில் மீதேறி வந்தா தரித்தல் என்றோ (மயிலை)

இவர் இயற்றிய பதங்களில் ஒன்று:

ராகம்: சுருட்டி, தாளம்: ஆதி

பல்லவி:

தேடியழைத்தோடி வாடி - போடி சேடி

அனுபல்லவி:

நீடுபுகழ்வேளூர் - நாடு முத்தையனைத் (தேடி)

சரணம்:

கோடி கொடுத்தாலும் தேடி வராதவன்

வீடேறி வந்தழைத் தானடியே - யான்

மோடி செய்தேனடி போடியென் றோடினான் (தேடி)

உசாத்துணை