இரத்தினேசுவர ஐயர்

From Tamil Wiki

இரத்தினேசுவர ஐயர்

வாழ்க்கைக் குறிப்பு

யாழ்ப்பாணம், உடுவிலைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரிடத்தில் இலக்கண, இலக்கியங்களை முறையே கற்றுக் கொண்டார்.

இலக்கிய வாழ்க்கை

இவர் செட்டிநாட்டிலிருந்து சிவநேசன் என்னும் பத்திரிகையினை நீண்டகாலம் வெளியிட்டுக் கொண்டிருந்ததோடு புராணங்களுக்குப் பயன் சொல்லும் யாழ்ப்பாணப் பரம்பரையினைப் பேணி பல இடங்களிலும் புராண படலங்களைத் தொடக்கிப் பயன் சொல்லி வந்தார். சுன்னாகம் வரத பண்டிதர் இயற்றிய கிள்ளை விடு தூது என்னும் நூல் இவரால் பதிப்ப்பிக்கப்பட்டதோடு பிரசங்க இரத்தின தீபம், செந்தமிழ்ப் பூம்பொழில் போன்றன இவரால் இயற்றப்பட்ட நூல்களாகும்.

மறைவு

நூல் பட்டியல்

பிரசங்க இரத்தின தீபம் செந்தமிழ்ப் பூம்பொழில்

உசாத்துணை