under review

இரட்டைமலை சீனிவாசன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
 
(One intermediate revision by the same user not shown)
Line 41: Line 41:
ஆதி திராவிடர்களின் முதல் மாகாண மாநாடு ஜனவரி 29, 1928-ல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்றது. இரட்டைமலை சீனிவாசனைத் தலைமை ஏற்கும்படி வி.ஜி. வசுதேவப் பிள்ளை முன்மொழிந்து, வி. ஐ. முனிசாமிப் பிள்ளை வழிமொழிந்தவுடன் பலத்த கரவொலிகளுக்கிடையே இரட்டைமலை சீனிவாசன் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். எம்.சி. மதுரை பிள்ளை வரவேற்புரையாற்றினார். வரவேற்புக் குழுவின் தலைவர் என். சிவராஜ் சிறப்புரையாற்றினார்.
ஆதி திராவிடர்களின் முதல் மாகாண மாநாடு ஜனவரி 29, 1928-ல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்றது. இரட்டைமலை சீனிவாசனைத் தலைமை ஏற்கும்படி வி.ஜி. வசுதேவப் பிள்ளை முன்மொழிந்து, வி. ஐ. முனிசாமிப் பிள்ளை வழிமொழிந்தவுடன் பலத்த கரவொலிகளுக்கிடையே இரட்டைமலை சீனிவாசன் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். எம்.சி. மதுரை பிள்ளை வரவேற்புரையாற்றினார். வரவேற்புக் குழுவின் தலைவர் என். சிவராஜ் சிறப்புரையாற்றினார்.


இம்மாநாட்டின் முக்கிய நோக்கம் அப்போது இந்தியாவிற்கு வரவிருந்த சைமன் குழுவிற்கு அறிக்கை தயாரித்துக் கொடுப்பதற்கான குழு அமைப்பதும், ஆங்கில அரசிற்கு ஆதி திராவிடர்களின் தேவைகளை வலியுறுத்துவதும். இம்மாநாட்டில் ஆதி திராவிடர்களுக்குத் தனித் தொகுதி வேண்டும் என்றும், 21 வயது அடைந்த அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும், கல்வி வேலைவாய்ப்புகளில் ஆதி திராவிடர்களுக்கு உரிய பிரதிநித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும், உயர் கல்வி உள்பட அனைத்துக் கல்வியும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. (1927 வரை பச்சையப்பன் கல்லூரியில் ஆதி திராவிட மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளவில்லை. 1928-ல் தான் முதன்முறையாக ஆதிதிராவிட மாணவர்கள் சேர்ந்தனர்.)
இம்மாநாட்டின் முக்கிய நோக்கம் அப்போது இந்தியாவிற்கு வரவிருந்த சைமன் குழுவிற்கு அறிக்கை தயாரித்துக் கொடுப்பதற்கான குழு அமைப்பதும், ஆங்கில அரசிற்கு ஆதி திராவிடர்களின் தேவைகளை வலியுறுத்துவதும். இம்மாநாட்டில் ஆதி திராவிடர்களுக்குத் தனித் தொகுதி வேண்டும் என்றும், 21 வயது அடைந்த அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும், கல்வி வேலைவாய்ப்புகளில் ஆதி திராவிடர்களுக்கு உரிய பிரதிநித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும், உயர் கல்வி உள்பட அனைத்துக் கல்வியும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. (1927 வரை பச்சையப்பன் கல்லூரியில் ஆதி திராவிட மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. 1928-ல் தான் முதன்முறையாக ஆதிதிராவிட மாணவர்கள் சேர்ந்தனர்.)
[[File:இரட்டைமலை சீனிவாசன்3.png|thumb|இரட்டைமலை சீனிவாசன் வட்டமேசை மாநாட்டில்]]
[[File:இரட்டைமலை சீனிவாசன்3.png|thumb|இரட்டைமலை சீனிவாசன் வட்டமேசை மாநாட்டில்]]


Line 87: Line 87:
* [https://www.vikatan.com/government-and-politics/policy/remembering-rettamalai-srinivasan-on-his-162nd-birthday-special-article விளிம்புநிலை மக்களின் விடிவெள்ளி: இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள் சிறப்புப் பகிர்வு: vikatan]
* [https://www.vikatan.com/government-and-politics/policy/remembering-rettamalai-srinivasan-on-his-162nd-birthday-special-article விளிம்புநிலை மக்களின் விடிவெள்ளி: இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள் சிறப்புப் பகிர்வு: vikatan]


{{Second review completed}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 19:50, 6 May 2024

இரட்டைமலை சீனிவாசன்
இரட்டைமலை சீனிவாசன்

இரட்டைமலை சீனிவாசன் (ஜூலை 7, 1859 - செப்டம்பர் 18, 1945) அரசியல், சமூக சிந்தனையாளர், அரசியல்வாதி, வழக்கறிஞர், செயற்பாட்டாளர், இதழியலாளர். பறையர் மகாஜன சபையைத் தோற்றுவித்தார். 1923 முதல் 1939-ல் சட்டசபை கலைக்கப்படும் வரை மதராஸ் மாகாண சட்டசபைஉறுப்பினராகப் பணியாற்றினார். ஆதிதிராவிடர்களுக்கான பொதுவழி நடைபாதை உரிமை, பரம்பரை மணியக்காரர்கள் உரிமை, மது ஒழிப்புத்தீர்மானம் ஆகியவற்றுக்காகப் போராடினார். அம்பேத்கருடன் இணைந்து செயல்பட்டார். இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்றார். அம்பேத்கர் பெளத்த மதத்தைத் தழுவிய போது தன்னை அவர்ணாஸ்தர் என்று அழைத்துக் கொண்டதோடு மதம்மாற மறுத்துவிட்டார். ஆதிதிராவிடர்கள் ஆலய நுழைவை முன்நின்று நடத்தினார்.

வாழ்க்கைக் குறிப்பு

இரட்டைமலை சீனிவாசன்அன்றைய செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகத்திற்கு அருகில் உள்ள கோழியாளம் என்ற சிற்றூரில் ஜூலை 7, 1859 அன்று ஆதி அம்மாள், இரட்டைமலை இணையருக்கு மகனாகப் பிறந்தார். கோழியாளத்திலிருந்து இவருடைய விவசாயக் குடும்பம் வறுமை காரணமாகவும் சாதியக் கொடுமை காரணமாகவும் தஞ்சை நோக்கி இடம் பெயர்ந்தது. அங்கு அதைவிடக் கொடிய சாதிய அடக்குமுறை காரணமாக இவரது குடும்பம் அங்கிருந்து கோயம்புத்தூர் சென்றது..

சீனிவாசன் பள்ளிக்கல்விக்குப்பின் கோயம்புத்தூர் அரசு கலைக்கல்லூரியில் இளங்கலைப்பட்டம் பெற்றார். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த முதல் பட்டதாரியாகக் கருதப்பட்டார்.

தனிவாழ்க்கை

இரட்டைமலை சீனிவாசன் 1887-ல் ரெங்கநாயகி அம்மாளைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 பெண்பிள்ளைகளும் 4 ஆண்பிள்ளைகளும் பிறந்தனர். நீலகிரியில் ஓர் ஆங்கிலேயரின் நிறுவனத்தில் எழுத்தராக வேலைக்குச் சேர்ந்தார். பத்து ஆண்டுகள் அங்கு பணியாற்றிய பின் 1890-ல் சென்னைக்கு வந்தார்.

சீனிவாசன் நீலகிரியில் பணி செய்துகொண்டிருந்தபோது அயோத்திதாசர் தன் முதல் மனைவியின் இறப்புக்குப்பின் பர்மாவிலிருந்து திரும்பி வந்திருந்தார். இரட்டைமலை சீனிவாசனின் தங்கை தனலட்சுமியை அயோத்திதாசர் இரண்டாவது மனைவியாகத் திருமணம் செய்து கொண்டார்.

தென் ஆப்பிரிக்கப் பயணம்

இரட்டைமலை சீனிவாசன் 1900-ல் வேலைத் தேடி தென்னாப்பிரிக்கா சென்றார். அங்கு நீதிமன்றத்தில் ஆவணங்களை மொழிபெயர்த்துக் கூறும் வேலை பார்த்தார். 1920-களில் இந்தியா திரும்பினார். இந்தக் காலத்தில் நீதிக் கட்சியினரின் தொடர்பு ஏற்பட்டது. இவர் தென்னாப்பிரிக்காவில் இருந்தபோதே தமிழ்நாட்டில் 1916-ல் பார்ப்பனரல்லாதார் இயக்கம் தோன்றியது. 1917-ல் ஆதி திராவிட மகாசபை எம்.சி.ராஜா போன்றவர்களால் புதுப்பிக்கப்பட்டது.

அரசியல் வாழ்க்கை

இரட்டைமலை சீனிவாசன் நீலகிரியில் தன் ஆரம்பகால அரசியல் வாழ்க்கையில் பிரம்ம ஞானசபையுடனும், ஹென்றி ஆல்காட்டுடனும் தொடர்பில் இருந்தார். மதராஸின் பட்டியலிடப்பட்ட சாதியினர் கூட்டமைப்பு, மதராஸ் மாகாண நலிவுற்றோர் கூட்டமைப்பு ஆகியவற்றின் தலைவராக இருந்தார். சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராக 1923 முதல் 1939 வரை இருந்தார்.

பறையர் மகாஜன சபை

இரட்டைமலை சீனிவாசன் 1891-ல் பறையர் மகாஜன சபையைத் தோற்றுவித்தார். 1893-1900 வரை 'பறையன்' என்ற திங்கள் இதழை நடத்தினார். டிசம்பர் 1, 1891-ல் அயோத்திதாச பண்டிதர் நீலகிரியில் திராவிட மகா சபையின் முதல் மாநாட்டைக் கூட்டினார். அதில் பத்து தீர்மானங்கள் நிறைவேற்றி ஆங்கில அரசுக்கும், காங்கிரசுக் கட்சிக்கும் அனுப்பிவைத்தார். 1893-ல் பறையர் மகாஜன சபையை 'ஆதிதிராவிட மகாசன சபை' எனப் பெயர் மாற்றி பதிவு செய்தார் சீனிவாசன்.

பஞ்சமி நிலம்

இரட்டைமலை சீனிவாசன் 1894-ல் பஞ்சமி நிலங்களை மீட்டு ஏழைகளுக்கு வீட்டு மனைப்பட்டா, விளை நிலங்கள் மற்றும் குழந்தைகள் கல்வி ஆகியவற்றைப் பெற உதவினார்.

சட்டசபை உறுப்பினர்

மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தப்படி 1920-ல் நடைபெற்ற தேர்தலின் போது சென்னை மாகாண சட்டசபைக்கு ஆதி திராவிடர் பிரிவிலிருந்து ஐந்து உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். இரண்டாவது தேர்தலுக்குப் பின் 1923-ல் இரட்டைமலை சீனிவாசன், எல்.சி. குருசாமி உள்ளிட்ட பத்து பேர் (பட்டியல் சாதியினர்) சட்டசபையின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டனர். 1920 முதல் 1936 வரை ஆதி திராவிடர் யாரும் எந்தத் தேர்தலிலும் போட்டியிடவில்லை. எல்லா நிலையிலும் நியமனம் மூலமாகவே உறுப்பினராக்கப்பட்டனர். இரட்டைமலை சீனிவாசன் சட்டசபையில் 1923 நவம்பர் முதல் 1939-ல் சட்டசபைக் கலைக்கப்படும் வரை உறுப்பினராகப் பணியாற்றினார்.

இரட்டைமலை சீனிவாசன் ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் பட்ஜெட் மீது உரையாற்றுவது வழக்கம். அவரது முதல் பட்ஜெட் உரை பிப்ரவரி 1925 அன்று தொடங்கியது. ஆதித் திராவிட மக்களுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு, கல்வி வளர்ச்சி, சுகாதார வளர்ச்சி, பஞ்சமி நில ஒதுக்கீடு போன்றவற்றை வற்புறுத்தினார். இவர் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே பேசினார். எம்.சி. மதுரை பிள்ளை, சுவாமி சகஜானந்தர் ஆகிய இருவர் மட்டும் சட்டசபையில் தமிழில் பேசினர்.

பொதுவழி நடைபாதை உரிமை

1924-ல் சட்ட சபையில் இரட்டைமலை சீனிவாசன் முன்மொழிந்த பொதுவழி நடைபாதை உரிமை தீர்மானத்தை அரசு ஏற்றுக்கொண்டது. அத்தீர்மானம் பிப்ரவரி 1925 அரசிதழில் வெளியிட்டது.

  • எந்த வகுப்பு, சமூகம் சேர்ந்த நபரும் யாதொரு பட்டணம் அல்லது கிராமத்திலுள்ள எந்த பொது வழி (அ) தெரு மார்க்கத்திலும் நடப்பதற்கு ஆட்சேபணை இல்லை
  • இந்த தேசத்திலுள்ள சாதி இந்துக்கள் எந்த அரசாங்க அலுவலகத்தின் வளாகத்திற்குள், எந்தவொரு பொதுக்கிணறு, குளம் அல்லது பொதுமக்கள் வழக்கமாய் கூடும் இடங்களைப் பயன்படுத்தவும் அல்லது பொது வேலை நடத்தப்பட்டு வருகின்ற இடங்கள், கட்டடங்கள் ஆகியவைகளுக்கு ஆதி திராவிடர் வகுப்பினைச் சேர்ந்த யாதொரு நபர் போவதற்கும் உபயோகிப்பதற்கும் ஆட்சேபணை இல்லை.
ஆதிதிராவிடர் பெயர் மாற்றம்

ஜனவரி 20, 1922-ல் எம்.சி.ராஜா சட்டசபையில் கொண்டு வந்த தீர்மானத்தின்படி பறையர், பள்ளர் என்ற பெயர் நீக்கப்பட்டு 'ஆதிதிராவிடர்' என்ற பெயர் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது அரசாணை எண் 817 மூலம் அமல்படுத்தப்பட்டது. பெயர் மாற்றம் செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் பல பத்திரப் பதிவு அலுவலகங்களில் 'பறையன்', 'பஞ்சமன்' என்றே பதிவு செய்யப்பட்டது. இதை தடுத்து நிறுத்த இரட்டைமலை சீனிவாசன் 1924-ல் சட்டசபையில் முறையிட்டார்.

ஆந்திரத்தில் தாழ்த்தப்பட்டோரான மாலா, மாதிகா சமூகத்தினரை 'ஆதி ஆந்திரர்' என அழைக்கும்போது புலையர், தீயர்களை ஏன் 'மலையாளத் திராவிடர்' என அழைக்கக்கூடாது என இரட்டைமலை சீனிவாசன் 1925-ல் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

பரம்பரை மணியக்காரர்கள் உரிமை

அக்காலத்தில் பரம்பரை மணியக்காரர்கள் உயர்சாதியினராகவே இருந்தனர். அவர்கள் ஆதிதிராவிடர் வசிக்கும் தெருவிற்கு வருவதில்லை, எனவே பரம்பரை மணியக்காரர் முறையை நீக்கி அனைத்து சாதியினரும் – ஆதிதிராவிடர் உள்பட மணியக்காரராக வர வழிவகை செய்ய வேண்டும் என சீனிவாசன் சட்டசபையில் அரசுக்குக் கோரிக்கை வைத்தார். இதே கோரிக்கையை அருந்ததிய சாதி உறுப்பினரான எல்.சி. குருசாமியும் முன் வைத்தார். இவர்களின் கோரிக்கை அறுபது ஆண்டுகளுக்குப்பின் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் நிறைவேறியது.

ஆதி திராவிடர்களின் மாகாண மாநாடு

ஆதி திராவிடர்களின் முதல் மாகாண மாநாடு ஜனவரி 29, 1928-ல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்றது. இரட்டைமலை சீனிவாசனைத் தலைமை ஏற்கும்படி வி.ஜி. வசுதேவப் பிள்ளை முன்மொழிந்து, வி. ஐ. முனிசாமிப் பிள்ளை வழிமொழிந்தவுடன் பலத்த கரவொலிகளுக்கிடையே இரட்டைமலை சீனிவாசன் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். எம்.சி. மதுரை பிள்ளை வரவேற்புரையாற்றினார். வரவேற்புக் குழுவின் தலைவர் என். சிவராஜ் சிறப்புரையாற்றினார்.

இம்மாநாட்டின் முக்கிய நோக்கம் அப்போது இந்தியாவிற்கு வரவிருந்த சைமன் குழுவிற்கு அறிக்கை தயாரித்துக் கொடுப்பதற்கான குழு அமைப்பதும், ஆங்கில அரசிற்கு ஆதி திராவிடர்களின் தேவைகளை வலியுறுத்துவதும். இம்மாநாட்டில் ஆதி திராவிடர்களுக்குத் தனித் தொகுதி வேண்டும் என்றும், 21 வயது அடைந்த அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும், கல்வி வேலைவாய்ப்புகளில் ஆதி திராவிடர்களுக்கு உரிய பிரதிநித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும், உயர் கல்வி உள்பட அனைத்துக் கல்வியும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. (1927 வரை பச்சையப்பன் கல்லூரியில் ஆதி திராவிட மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. 1928-ல் தான் முதன்முறையாக ஆதிதிராவிட மாணவர்கள் சேர்ந்தனர்.)

இரட்டைமலை சீனிவாசன் வட்டமேசை மாநாட்டில்
லண்டன் வட்டமேசை மாநாடு

1930–32 ஆண்டுகளில் லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாடுகளில் இரட்டைமலை சீனிவாசன் அம்பேத்கருடன் ஆதிதிராவிட மக்களின் பிரதிநிதியாகச் சென்று கலந்துகொண்டார். லண்டன் வட்டமேசை மாநாட்டில் இரட்டைமலை சீனிவாசன் ஆதிதிராவிட மக்களுக்கு இரட்டை வாக்காளர் தொகுதி வழங்கப்பட வேண்டும் என்றும், ஆதிதிராவிட மக்களின் விகிதாச்சார அளவுக்கு ஏற்ப கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் உரிய பங்கு அளிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்திப் பேசினார். இதே கோரிக்கையை வலியுறுத்தி அம்பேத்கரும் மிக விரிவாக வட்டமேசை மாநாட்டில் பேசினார். இது பிரிவினைவாதத்திற்கு வழிவகுக்கும் என்று கருதிய காந்தியுடன் தென்னாப்பிரிக்காவில் தனக்கிருந்த நட்பைக் கொண்டு நேரில் சந்தித்துப் பேசினார் சீனிவாசன். ஆனால் காந்தி அதை ஏற்காததால் இரட்டைமலை சீனிவாசன்அம்பேத்கருடன் இணைந்து காந்தியை எதிர்க்கத் தொடங்கினார்.

லண்டன் வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கரும் சீனிவாசனும் தயாரித்துக் கொடுத்த ஆவணம் ஆதிதிராவிட மக்களின் முழு உரிமையைப் பெற்றுத் தருவதாக அமைந்ததது.

எம்.சி. ராஜா பூனா ஒப்பந்தத்தின்போது இந்து மகா சபைத் தலைவர் மூஞ்சேவுடன் இணைந்து காந்திக்கு ஆதரவாக செயல்பட்டார்.

மதமாற்றம்

அம்பேத்கர் 1935-ல் மதம் மாற வேண்டும் என அறிவித்தபோது இரட்டைமலை சீனிவாசன் ”நாம் தான் இந்து மதத்தில் இல்லையே (அவர்ணஸ்தர்) வருணம் அற்றவர்கள் ஆயிற்றே, நாம் இந்துவாக இருந்தால் தானே மதம் மாற வேண்டும்” என்று அம்பேத்கருக்கு தந்தி மூலமாக தன் கருத்தைத் தெரிவித்தார். ஒடுக்கப்பட்டோரின் சமயம்குறித்து அவருடைய காலத்தின் பிற தலைவர்களிலிருந்து மாறுபட்ட அணுகுமுறையை இரட்டைமலை சீனிவாசன் கொண்டிருந்தார். அயோத்திதாசர் பெளத்தம் தழுவ உதவிய கர்னல் ஆல்காட்டை 1880-களிலேயே சந்தித்து உரையாடிவந்தபோதிலும், சீனிவாசன் பெளத்தத்தைத் தழுவவில்லை.

ஆனாலும், ஒடுக்கப்பட்டோரின் ஆன்மிக மரபுகளைத் தேடுவதில் அவர் ஆர்வம் கொண்டிருந்தார். பின்னாளில் ஆலயப் பிரவேசம் நடந்தபோது பல்வேறு கோயில்களில், தாழ்த்தப்பட்ட மக்கள் முற்காலத்தில் பெற்றிருந்த உரிமைகளை எடுத்துக்காட்டி ஆலயப் பிரவேசத்தை ஆதரித்தார். திருவாரூர் தியாகராஜ பெருமாள் கோயிலில் தியாகசாம்பான் வழிவந்தோர்க்கென்று அளிக்கப்பட்ட உரிமைகள், கும்பகோணத்தில் பாழாக்கப்பட்ட நந்தன் கோட்டை மதில் போன்றவற்றைக் குறிப்பிட்டு சீனிவாசன் பேசினார்.

ஆலய நுழைவுத் தீர்மானம்

சென்னை மாகாணத்தின் அன்றைய முதலமைச்சர் ப. சுப்பராயன் ஜனவரி 31, 1933-ல் சென்னை சட்டசபையில் ஆதிதிராவிடர்களை கோயிலில் நுழைய அனுமதிக்கச் சட்டமியற்ற வேண்டும் என்று ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இத்தீர்மானத்தை ஆதரித்து இரட்டைமலை சீனிவாசன் பேசினார். இத்தீர்மானம் சட்டசபை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. 56 வாக்குகள் ஆதிதிராவிடர் கோயில் நுழைவுக்கு ஆதரவாகவும், 19 வாக்குகள் நடுநிலையாகவும் இருந்தது. எதிர்ப்பின்றி இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்துக்களின் சமய நம்பிக்கைகளை பாதிப்பதாகக் கூறி, இந்தியாவின் தலைமை ஆளுனர் (கவர்னர் ஜெனரல்) ஒப்புதல் அளிக்காததால் இத்தீர்மானத்துக்கு சட்ட ஏற்பு கிட்டவில்லை.

மது ஒழிப்புத் தீர்மானம்

கலால் வரி அதிகமாகக் கிடைத்ததால் ஆங்கில அரசு இந்தியா முழுவதும் நிறைய மதுக்கடைகளை திறந்து வைத்திருந்தது. இதில் உழைக்கும் மக்களான அடித்தட்டு மக்களின் பணம் உறிஞ்சப்படுவதாக இரட்டைமலை சீனிவாசன் கருதினார். கடையை முழுவதுமாக மூடச் சொன்னால் மூட மாட்டார்கள் என்பதால் குறைந்தபட்சம் விடுமுறை நாட்களிலாவது மதுக்கடைகளை மூடவேண்டும் என்று 1929-ல் சட்டசபையில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அதை அரசு ஏற்றுக்கொண்டது.

இதழியல்

இரட்டைமலை சீனிவாசன் பறையன் என்ற இதழை அக்டோபர் 7, 1893-ல் தொடங்கி நடத்தினார். ஆரம்பத்தில் மாத இதழாக வெளிவந்த இந்த இதழ் மார்ச் 1894 முதல் வார இதழாக வெளியானது. 1896 முதல் சொந்த அச்சகத்தில் அச்சிடப்பட்டு 1900-ம் ஆண்டு வரை வெளிவந்தது. ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் வாழ்க்கையையும் அவர்கள் பிரச்சனைகளையும் இது பேசியது.

எழுத்து

இரட்டைமலை சீனிவாசன் 1939-ல் தன்னுடைய வரலாற்றை சுருக்கமாக எழுதி 'ஜீவிய சரித்திர சுருக்கம்' என்ற முப்பது பக்க நூலாக வெளியிட்டார்.

இரட்டைமலை சீனிவாசன் அஞ்சல்தலை மற்றும் நினைவு மண்டபம்

விருதுகள்

  • பிரிட்டிஷ் அரசு ‘ராவ்சாகிப்’, ‘திவான் பகதூர்’, ‘ராவ் பகதூர்’ ஆகிய பட்டங்களை அளித்தது.
  • 1940-ல் திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் ‘திராவிடமணி’ எனும் பட்டம் வழங்கினார்.

மறைவு

இரட்டைமலை சீனிவாசன் செப்டம்பர் 18, 1945-ல் பெரியமேடு பகுதியில் தன் எண்பத்தி ஏழாவது வயதில் காலமானார்.

நினைவு

  • இந்திய அரசு 2000-ல் இரட்டைமலை சீனிவாசனுக்கு அஞ்சல் தலை வெளியிட்டது.
  • 2011-ல் இரட்டைமலை சீனிவாசனின் பிறந்த நாளான ஜூலை 7-ஐ அரசு விழாவாகக் கொண்டாட அன்றைய முதல்வர் ஜெ. ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றினார்.
  • சென்னை கிண்டியிலுள்ள காந்தி மண்டபத்தில் இரட்டைமலை சீனிவாசனுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டது.
  • விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சென்னை ஓட்டேரியில் இரட்டைமலை சீனிவாசனுக்கு ஒரு நினைவிடத்தைக் கட்டியது. அதற்கு 'உரிமைக்களம்' என பெயரிட்டது.

நூல் பட்டியல்

  • ஜீவிய சரித்திர சுருக்கம்
இவரைப்பற்றிய நூல்கள்
  • இரட்டைமலை சீனிவாசன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்) (சாகித்ய அகாடமி)

உசாத்துணை


✅Finalised Page