இமயத் தியாகம்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "இமையத்தியாகம் ( ) மலேசிய எழுத்தாளர் அ.ரெங்கசாமி எழுதிய வரலாற்று நாவல். மலாயாவை ஜப்பானியர் ஆக்ரமித்திருந்த காலகட்டத்தையும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசிய ராணுவத்தை வழி...")
 
No edit summary
Line 1: Line 1:
இமையத்தியாகம் ( ) மலேசிய எழுத்தாளர் அ.ரெங்கசாமி எழுதிய வரலாற்று நாவல். மலாயாவை ஜப்பானியர் ஆக்ரமித்திருந்த காலகட்டத்தையும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசிய ராணுவத்தை வழிநடத்தியதையும் சித்தரிக்கிறது. நேதாஜியின் விடுதலைப்போர் என்னும் துணைத்தலைப்புடன் இந்நாவல் வெளியாகியது.
இமையத்தியாகம் (2006 ) இமயத்தியாகம் மலேசிய எழுத்தாளர் அ.ரெங்கசாமி எழுதிய வரலாற்று நாவல். மலாயாவை ஜப்பானியர் ஆக்ரமித்திருந்த காலகட்டத்தையும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசிய ராணுவத்தை வழிநடத்தியதையும் சித்தரிக்கிறது. நேதாஜியின் விடுதலைப்போர் என்னும் துணைத்தலைப்புடன் இந்நாவல் வெளியாகியது.


== எழுத்து, வெளியீடு ==
== எழுத்து, வெளியீடு ==

Revision as of 23:04, 7 June 2022

இமையத்தியாகம் (2006 ) இமயத்தியாகம் மலேசிய எழுத்தாளர் அ.ரெங்கசாமி எழுதிய வரலாற்று நாவல். மலாயாவை ஜப்பானியர் ஆக்ரமித்திருந்த காலகட்டத்தையும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசிய ராணுவத்தை வழிநடத்தியதையும் சித்தரிக்கிறது. நேதாஜியின் விடுதலைப்போர் என்னும் துணைத்தலைப்புடன் இந்நாவல் வெளியாகியது.

எழுத்து, வெளியீடு

இந்நாவல் 2000 த்தில் அ.ரெங்கசாமியால் எழுதப்பட்டது. 2006 ல் இளங்கோ நூலகம் (கள்ளக்குறிச்சி) பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

கதைச்சுருக்கம்

இரண்டாம் உலகப்போரில் ஜப்பானின் தென்கிழக்காசிரிய வெற்றியில் தொடங்குகிறது இமையத்தியாகம், இந்திய சுதந்திரச் சங்கம், இந்திய தேசிய இராணுவத்தின் தோற்றம், நேதாஜியின் தலைமைப்பண்பு ஆகியவற்றைச் சித்தரிக்கிறது., பர்மிய, வடகிழக்கு இந்தியப் போர்முனைகளில் தமிழ்வீரர்கள் பிரிட்டிஷ் அதிகாரத்தை எதிர்த்துப் போராடியதும் அவர்களின் தியாகமும் விவரிக்கப்படுகிறது.

“தென்கிழக்காசிய தமிழர்களின் வாழ்க்கை ஓட்டத்தில் சந்தித்த வீரப்ப்போராட்ட நிகழ்வான ஐ.என்.ஏ வரலாற்றை இன்றைய தலைமுறையும் எதிர்வரும் தலைமுறையும் அவசியம் அறிந்திருக்கவேண்டும், உணரவேண்டும். அவ்வரலாற்றை என்றென்றும் நினைவில் பேணிப் பாதுகாக்கவேண்டும் என்ற கருத்தில்தான் இந்நாவலைப் படைத்திருக்கிறேன்” என்று ஆசிரியர் நாவலின் முகப்பில் குறிப்பிடுகிறார்

இலக்கிய இடம்

உசாத்துணை