under review

இந்திரா சௌந்தர்ராஜன்: Difference between revisions

From Tamil Wiki
(Inserted READ ENGLISH template link to English page)
Line 1: Line 1:
{{Read English|Name of target article=Indra Soundarrajan|Title of target article=Indra Soundarrajan}}
[[File:Indria image.jpg|thumb| இந்திரா சௌந்தர்ராஜன் ]]
[[File:Indria image.jpg|thumb| இந்திரா சௌந்தர்ராஜன் ]]
இந்திரா சௌந்தர்ராஜன் (நவம்பர் 13, 1958) தமிழ் எழுத்தாளர், பொதுவாசிப்புக்குரிய நாவல்களை எழுதியவர். நாவல்கள் , திரைப்படங்கள் , தொலைக்காட்சித்தொடர்கள், ஆன்மிக சொற்பொழிவு  போன்ற பல துறைகள்  மூலம் புகழ்பெற்றவர். தென்னிந்திய மரபுகள் மற்றும் புராணக்கதைகளின் அடிப்படையில் வரலாறு, சமூகம், ஆன்மிகம் , மர்மங்கள், சித்தர்கள் பற்றிய நூல்களை எழுதிக்கொண்டிருப்பவர் .
இந்திரா சௌந்தர்ராஜன் (நவம்பர் 13, 1958) தமிழ் எழுத்தாளர், பொதுவாசிப்புக்குரிய நாவல்களை எழுதியவர். நாவல்கள் , திரைப்படங்கள் , தொலைக்காட்சித்தொடர்கள், ஆன்மிக சொற்பொழிவு  போன்ற பல துறைகள்  மூலம் புகழ்பெற்றவர். தென்னிந்திய மரபுகள் மற்றும் புராணக்கதைகளின் அடிப்படையில் வரலாறு, சமூகம், ஆன்மிகம் , மர்மங்கள், சித்தர்கள் பற்றிய நூல்களை எழுதிக்கொண்டிருப்பவர் .

Revision as of 17:21, 5 July 2022

To read the article in English: Indra Soundarrajan. ‎

இந்திரா சௌந்தர்ராஜன்

இந்திரா சௌந்தர்ராஜன் (நவம்பர் 13, 1958) தமிழ் எழுத்தாளர், பொதுவாசிப்புக்குரிய நாவல்களை எழுதியவர். நாவல்கள் , திரைப்படங்கள் , தொலைக்காட்சித்தொடர்கள், ஆன்மிக சொற்பொழிவு  போன்ற பல துறைகள்  மூலம் புகழ்பெற்றவர். தென்னிந்திய மரபுகள் மற்றும் புராணக்கதைகளின் அடிப்படையில் வரலாறு, சமூகம், ஆன்மிகம் , மர்மங்கள், சித்தர்கள் பற்றிய நூல்களை எழுதிக்கொண்டிருப்பவர் .

பிறப்பு, கல்வி

இந்திரா சௌந்தர்ராஜனின் இயற்பெயர் சௌந்தர்ராஜன். 1958 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் தேதி சேலத்தில் பார்த்தசாரதி -இந்திரா தம்பதியினருக்குப் பிறந்தார். நாற்பது ஆண்டுகாலமாக மதுரையில் வசிக்கிறார். சேலம் பாரதி வித்யாலயா பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த இவர் நெட்டூர் தொழிற்கல்வி கல்லூரியில் தொழிற்கல்வி பயின்றார்..தொலைவழிக் கல்வியில் இளங்கலை தமிழ் இலக்கியம் பயின்றார்.

தனிவாழ்க்கை

இந்தியா சௌந்தரராஜனின் மனைவி பெயர் ராதா. மகள்கள் ஐஸ்வர்யா, ஸ்ரீநிதி. டி.வி.எஸ் நிறுவனத்தில் துணைப்பொறியாளராக பணியாற்றினார். பின்னர் தொலைக்காட்சியிலும் திரைப்படத்துறையிலும் பணியாற்றத் தொடங்கினார்..

இலக்கியவாழ்க்கை

இந்திரா சௌந்தரராஜனின் பெரியப்பா ஏ.எஸ்.ராகவன் எழுத்தாளர். சேலத்தில் இருந்த எழுத்தாளர் மகரிஷியுடன் நெருக்கம் இருந்தது. பா.செயப்பிரகாசம் எழுதி சிகரம் இதழில் வெளியான இருளுக்குள் இழுப்பவர்கள் சிறுகதை அவரை எழுதத்தூண்டியது என்றுசொல்லும் இந்திரா சௌந்தரராஜன். தனது முன்னோடியாக பா.செயப்பிரகாசம் மற்றும் லா.ச. ராமாமிர்தம் ஆகியோரை குறிப்பிடுகிறார். இவர் தன் அன்னை பெயரை இணைத்துக்கொண்டு எழுத தூண்டியவர் மகரிஷி.

இந்திரா சௌந்தர்ராஜனின் முதல் படைப்பு 1978-ல் கலைமகள் குறுநாவல் போட்டியில் முதல் பரிசு வென்ற 'ஒன்றின் நிறம் இரண்டு' என்ற குறுநாவல். இந்திரா சௌந்தர்ராஜன் எழுத வந்த காலங்களில் மர்மக்கதைகளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்ததால் அவரும் மர்மக்கதைகள் பல எழுதி அதில் நிறைவில்லாமல் வாழ்க்கைப்பற்றிய தேடல்கள் , கேள்விகள் மூலமாக மூலம் அமானுஷ்ய நாவல்களை எழுத ஆரம்பித்தாக ஒரு பேட்டியில் விளக்குகிறார் . ஆனந்த விகடன் வார இதழில் வெளிவந்த ' கோட்டைபுரத்து வீடு ' என்ற தொடரின் மூலம் பொதுவாசகர்களைக் கவர்ந்த இவர் பின்னர் 'ஐந்து வழி மூன்று வாசல்', 'ரகசியமாய் ஒரு ரகசியம்' போன்ற தொடர்களை எழுதினார். அமானுஷ்யம், சித்தர்கள் பற்றிய குறிப்புகள், ஆன்மிக மர்மங்கள் போன்றவற்றை களமாகக்கொண்டு கதைகளை எழுதினார்.

பேச்சாளர்

இந்திரா சௌந்தர்ராஜன் ஆன்மிக மேடைச்சொற்பொழிவுகளை ஆற்றி வருகிறார்.காஞ்சி சந்திரசேகர சுவாமிகள் பற்றிய உரைகள் புகழ்பெற்றவை.

தொலைக்காட்சி

விகடனில் 'ரகசியமாய் ஒருத்தி ரகசியம்' என்ற தொடரை 'மர்மதேசம்' என்ற பெயரில் தொலைக்காட்சி தொடருக்கு திரைக்கதை வசனம் எழுதினார் . பின்னர் அந்த வரிசையில் 'விடாது கருப்பு', 'ருத்ரவீணை', 'கிருஷ்ணதாசி', 'சிவமயம்', 'அதுமட்டும் ரகசியம்' போன்ற பல தொடர்கள்  தொலைக்காட்சியில் வெளிவந்தன.

திரைத்துறை

இந்திரா சௌந்தர்ராஜனின்  முதல் திரைப்படம்  'சிருங்காரம்'. தேசிய விருது பெற்ற அப்படம் 70 ஆண்டுகளுக்கு முன் தஞ்சாவூர் பின்புலத்தில் வாழ்ந்த தேவதாசிகளைப்பற்றிய கதை. அதைத்தொடர்ந்து அனந்தபுரத்து வீடு மற்றும் இருட்டு போன்ற திரைப்படங்கள் வெளிவந்தன.

விருதுகள்

  • இந்திரா சௌந்தர்ராஜன் எழுதிய என் பெயர் ரெங்கநாயகி என்னும் படைப்பு தமிழ் வளர்ச்சித்துறையின் 1999-ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலுக்கான மூன்றாம் பரிசினை பெற்றுள்ளது .
  • சிருங்காரம் என்ற திரைப்படம் 2007- க்கான தேசிய விருது , மைலாப்பூர் அகாடமி விருது, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா விருது மற்றும் தமிழ்ச்சங்கம் விருதுகளைப்பெற்றுள்ளது .
  • ‘ருத்ரம் ‘ தொலைக்காட்சித் தொடருக்காக தமிழக அரசின் விருது பெற்றார்
  • ‘இலக்கிய சிந்தனை’  அமைப்பின் சிறந்த சிறுகதை எழுத்தாளர் விருது பெற்றார்
  • ‘அள்ளி அள்ளி தருவேன் ’ நாவல்   ஏர்வாடி கவிஞர் ராதாகிருஷ்ணன் அறக்கட்டளை விருதைப் பெற்றுள்ளது.

இலக்கிய முக்கியத்துவம்

இந்திரா சௌந்தர்ராஜனின் படைப்புக்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகள், மறுபிறப்பு, பேய்கள், கடவுள்கள் போன்ற நிகழ்வுகளை அடிப்படையாக்ககொண்டு உருவாக்கப்பட்ட புனைவுகள். அவை பெரும்பாலும் தமிழ்நாட்டை சுற்றியுள்ள கிராமங்களில் நடந்த உண்மைச்சம்பவங்களை மாதிரியாகக்கொண்டு உருவாக்கப்பட்டவை. நாட்டார் தெய்வங்களையும் நம்பிக்கைகளையும் சித்தர்கள் போன்ற மரபான நம்பிக்கைகளையும் புனைவுகளுக்கு அடிப்படையாகக் கொள்வதனால் அவை பொதுமக்களின் ரசனைக்குரியவையாக உள்ளன.

நூல்கள்

இவரது நாவல்கள் கிரைம் ஸ்டோரி மற்றும் டுடே கிரைம் நியூஸ் போன்ற வெளியீடுகளில் ஒவ்வொரு மாதமும் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இதுவரை இவர் 700 சிறுகதைகள், 340 நாவல்கள் மற்றும் 105 தொடர்களை எழுதியுள்ளார். இவரது பல படைப்புக்கள் மின் நூலாக கிடைக்கின்றன.

நாவல்கள்
  • எங்கே என் கண்ணன்
  • கல்லுக்குள் புகுந்த உயிர்
  • அவள் ஒரு சாவித்திரி
  • ஸ்ரீ புரம்
  • அபயமல்லி
  • நீலக்கல் மோதிரம்
  • சொர்ணஜாலம்
  • உன்னை கைவிடமாட்டேன்
  • நந்தி ரகசியம்
  • சதியை சந்திப்போம்
  • தேவர் கோயில் ராஜா
  • மாய விழிகள்
  • மாயமாகப் போகிறார்கள்
  • துள்ளி வருகுது
  • நாக பஞ்சமி
  • கண் சிமிட்டும் இரத்தினக்கல்
  • தங்கக்காடு காற்று காற்று உயிர்
  • தோண்டத் தோண்டத்தங்கம்
  • அஞ்சு வழிமூணு வாசல்
  • உஷ்
  • மகாதேவ ரகசியம்
  • சுற்றி சுற்றி வருவேன்
  • காற்றாய் வருவேன்
  • கோட்டைபுரத்து வீடு
  • ரகசியமாய் ஒரு ரகசியம்
  • சிவா ஜெயம்
  • திட்டி வாசல் மர்மம்
  • வைர பொம்மை
  • காதல் குத்தவாளி
  • அசுரர் ஜாதகம்
  • வைரம் வைரம் வைரம்
  • கிருஷ்ண தந்திரம்
  • பெண்மனம்
  • பேனா உளவாளி
  • ஜீவா என் ஜீவா
  • சொர்ண ரேகை
  • விடாது கருப்பு
  • இயந்திர பார்வை
  • வானத்து மனிதர்கள்
  • ருத்ர வீணை பகுதி 1,2,3 & 4
  • விக்ரமா விக்ரமா பகுதி 1 & 2
  • கன்னிகள் ஏழு பேர்
  • ஆயிரம் அரிவாள் கோட்டை
  • தேடாதே தேடாதே தொலைந்து போவாய் பகுதி 1 & 2
  • சிவமயம் பகுதி 1 & 2
  • விரல் மந்திரா
  • நான் ராமசேஷன் வந்திருக்கேன்
  • ஒளிவதற்கு இடமில்லை
  • அது மட்டும் ரகசியம்
  • பல்லவன் பாண்டியன் பாஸ்கரன
  • மேலே உயரே உச்சியிலே பகுதி 1 & 2
  • நாகப்படை
  • மாயமாய் சிலர்
  • மாய வானம்
  • ரங்கா நீதி
  • அப்பாவின் ஆத்மா
  • சீதா ரகசியம்
  • காற்றோடு ஒரு யுத்தம்
  • நாக வனம்
  • முதல் சக்தி
  • இரண்டாம் சக்தி
  • மூன்றாம் சக்தி
  • நான்காம் சக்தி
  • ஐந்தாம் சக்தி
  • ஆறாம் சக்தி
  • ஏழாம் சக்தி
  • எட்டாம் சக்தி
  • ஆகாயம் காணாத நட்சத்திரம்
  • ஆசை நெசவு
  • ஆத்மா
  • ஆசை ஊஞ்சல்
  • அபாய தென்றல்
  • அங்கே நான் நலமா
  • திக் திக் திக்
  • திவ்ய ரோஜாத்தோட்டம்
  • என் பெயர் ரெங்கநாயகி
  • என்னோடு வா
  • அதை மட்டும் சொல்லாதே
தொலைக்காட்சித்தொடர்கள்
  • என் பெயர் ரெங்கநாயகி
  • விடாது கருப்பு
  • மர்ம தேசம்
  • ருத்ர வீணை
  • சிவமயம்
  • சொர்ண ரேகை
  • எதுவும் நடக்கும்
  • மாய வேட்டை
  • யாமிருக்க பயமேன்
  • அத்தி பூக்கள்
  • ருத்ரம்
  • கோட்டைபுரத்து வீடு
  • மந்திர வாசல்
  • நாகம்மா
  • கங்கா
  • சுப்பிரமணியபுரம்
  • புகுந்த வீடு
  • கிருஷ்ண தாசி
  • அது மட்டும் ரகசியம்
திரைப்படங்கள்
  • சிருங்காரம் (2007)
  • ஆனந்தபுரத்து வீடு (2010)
  • இருட்டு (2019)
மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்

கிருஷ்ண தாசி , கால பைரவ ரகசியம் போன்ற படைப்புக்கள் இந்தி மொழியில் தொலைக்காட்சித்தொடர்களாக வெளிவந்துள்ளன .

உசாத்துணை


✅Finalised Page