being created

இந்தியா (இதழ்)

From Tamil Wiki
Revision as of 19:19, 6 June 2022 by Navingssv (talk | contribs) (Created page with "இந்தியா இதழ் பாரதியாரை ஆசிரியராகக் கொண்டு 1906 ஆம் ஆண்டு தொடங்கிய வார இதழ். சென்னையில் இருந்து வெளிவந்த இதழ் ஆங்கில அரசாங்கத்தின் அடக்குமுறை காரணமாக பாண...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

இந்தியா இதழ் பாரதியாரை ஆசிரியராகக் கொண்டு 1906 ஆம் ஆண்டு தொடங்கிய வார இதழ். சென்னையில் இருந்து வெளிவந்த இதழ் ஆங்கில அரசாங்கத்தின் அடக்குமுறை காரணமாக பாண்டிசேரிக்கு மாற்றப்பட்டது. இந்தியா (பாண்டிசேரி) 1908 முதல் 1910 வரை வெளிவந்தது. மண்டையம் திருமலாச்சாரியர் இந்தியா இதழின் உரிமையாளர். இந்தியா இதழின் பொறுப்பாசிரியராகப் பாரதி இருந்தபோது அச்சில் எம். சீனிவாச அய்யங்கார் பெயரே அச்சிடப்பட்டது.

வரலாறு

இந்தியா இதழ் மே, 9 1906 அன்று சென்னையில் தொடங்கப்பட்டது. இந்தியா இதழ் வார இதழாக ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் வெளிவந்தது. இந்தியா இதழின் நோக்கமாக ’சுதந்திரமும், சமத்துவமும், சகோதரத்துவம்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்து. மேலும் அவ்விதழில் இந்திய சுதந்திரம் பற்றிய சிந்தனைகளும், ஆங்கில அரசுக்கு எதிரான பிரசாரங்களும் பிரசுரமாயின. இதனால் இந்தியா இதழின் உரிமையாளராக இருந்த மண்டையம் திருமலாச்சாரியாருக்கும், ஆசிரியராக பதிவு செய்யப்பட்டிருந்த எம்.சீனிவாசன் அய்யங்காரும் அரசாங்கம் வாரண்ட் பிறப்பித்தது.

இந்தியா (பாண்டிசேரி)

இந்தியா இதழ் 1908 செப்டம்பர் இறுதி வாரத்தில் சென்னையில் இருந்து வெளிவருவது நின்றது. பாரதியாரும், இதழ் உரிமையாளர் திருமலாச்சாரியரும் பாண்டிசேரி தப்பிச் சென்றனர். அங்கிருந்து மீண்டும் இதழைத் தொடங்கினர். அக்டோபர் 20, 1908 முதல் இந்தியா (பாண்டிசேரி) வெளிவரத் தொடங்கியது.

பிரிட்டிஷ் அரசாங்கம் கொடுத்த பல நெருக்கடி காரணமாக அக்டோபர், 10 1908 அன்று இதழை சென்னையில் இருந்து பாண்டிசேரிக்கு மாற்றினர். அதன் பின் இந்தியா (பாண்டிசேரி) என்று வெளிவந்த இதழ் பலவித பொருளியல், அரசியல் நெருக்கடி காரணமாக மார்ச்,12 1910 அன்று நின்றது.

வழக்கு

சென்னையில் இருந்து வெளிவந்த இந்தியா இதழில் பிப்ரவரி, 29 1908 முதல் ஜூன், 27 1908 வரை வெளிவந்த இருபது கட்டுரைகள் அரசுக்கு எதிரான குற்றத்திற்குரியவை எனத் தொகுக்கப்பட்டன. அதிலிருந்து 'மகாபாரதக்கதைகள்', 'எத்தனையோ கொள்ளைகளில் இதுவும் ஒரு கொள்ளை', 'ஏன் காலத்தை வீணாக்க வேண்டும்' என்னும் மூன்று கட்டுரைகளை எடுத்து அவற்றை வெளியிட்டதற்காக வழக்கு தொடரப்பட்டது.

அப்போது ஆசிரியராக இருந்த பாரதியார் பாண்டிச்சேரிக்கு தப்பிச் சென்றார். வழக்கு முடிந்து தீர்ப்பான போது ஆசிரியராகப் பதிவு செய்யப்பட்டிருந்த எம். சீனிவாச அய்யங்கார் ஐந்து வருடம் சிறை சென்றார்.

உள்ளடக்கம்

கேலிச்சித்திரம்

இந்தியா இதழில் செய்திகள், கட்டுரைகள், தலையங்கம் போக வாரந்தோறும் முதல் பக்கத்தில் அரசியல் கேலிச்சித்திரம் ஒன்று வெளியிடப்பட்டது. கேலிச் சித்திரங்களை அரசியல் பிரசாரத்திற்குப் பயன்படுத்திய முதல் இதழ் இந்தியா.


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.