under review

ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்

From Tamil Wiki
Revision as of 14:35, 3 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected text format issues)

To read the article in English: Aavoorkizhar Maganar Kannanar. ‎

ஆவூர்கிழார் மகனார் கண்ணனார் சங்க காலப் புலவர். அகநானூற்றில் இவர் பாடிய பாடல் ஒன்று உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

தஞ்சை மாவட்டம் ஆவூரில் ஆவூர்கிழார் நல்லிசைப்புலவருக்கு மகனாகப் பிறந்தார். வழி வழியாக தமிழ் வளர்த்த குடியில் பிறந்தார்.

இலக்கிய வாழ்க்கை

இவர் குறிஞ்சித்திணையில் அகநானூற்றுப் பாடல் ஒன்று பாடினார். "இரவுக் குறிக்கண் வந்து நீங்கும் தலைமகற்குத் தோழி சொல்லி வரைவு கடாயது" என்ற துறையில் பாடினார்.

பாடல் நடை

அகநானூறு: 202

வயங்கு வெள் அருவிய குன்றத்துக் கவாஅன்,
கயந் தலை மடப் பிடி இனன் ஏமார்ப்ப,
புலிப் பகை வென்ற புண் கூர் யானை
கல்லகச் சிலம்பில் கை எடுத்து உயிர்ப்பின்,
நல் இணர் வேங்கை நறு வீ கொல்லன்
குருகு ஊது மிதி உலைப் பிதிர்வின் பொங்கி,
சிறு பல் மின்மினி போல, பல உடன்
மணி நிற இரும் புதல் தாவும் நாட!
யாமே அன்றியும் உளர்கொல் பானாள்,
உத்தி அரவின் பைத் தலை துமிய,
உர உரும் உரறும் உட்கு வரு நனந்தலை,
தவிர்வு இல் உள்ளமொடு எஃகு துணையாக,
கனை இருள் பரந்த கல் அதர்ச் சிறு நெறி
தேராது வரூஉம் நின்வயின்
ஆர் அஞர் அரு படர் நீந்துவோரே?

உசாத்துணை


✅Finalised Page