ஆறுமுகத் தம்பிரான்

From Tamil Wiki
Revision as of 21:54, 4 October 2022 by Ramya (talk | contribs)

ஆறுமுகத் தம்பிரான் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ் அறிஞர்.

வாழ்க்கைக் குறிப்பு

சோழநாட்டைச் சார்ந்த கருவூரிலே தோன்றியவர் இவர். இவர், ஆறுமுக நாவலரவர்களிடத்திலே இலக் கிய நூல்களைக் கற்றுக் கொண்டார் எனக் கூறுவர். நாவலரவர்களால் வண்ணுர்பண்ணையில் நிறுவப்பட்ட பாடசாலையிலே சிறிது காலம் ஆசிரியராகவும் பணி யாற்றினர்.

ஆன்மிக வாழ்க்கை

யாதோ ஒரு காரணத்தால் அப்பாட சாலையை விட்டு நீங்கி, இந்தியாவிலுள்ள திருவண்ணாமலைக்குச் சென்று, அங்குள்ள ஆதீனத்தில் சைவசித் தாந்த நூல்களை முறையே பயின்றார். இவர் தருமபுர ஆதீனத் தம்பிரான்களுள் ஒருவராகக் கருதப்படுகின்றர். இவருக்குத் ”தருமபுர மகாவித்துவான்" என்னும் சிறப்புப் பெயரும் உண்டு.

இவர் தமது மாணவர் சிலருடன் தென்னுட்டிலும், ஈழநாட்டிலும், வடநாட்டிலுமுள்ள திருக்கோயில்களைத் தரிசிப்பதற்காகத் தலயாத்திரை செய்தார். யாத்திரை முடிந்து திரும்பியதும் இவர் சென்னையிலே தங்கியிருந்த போது, ஞானமுழுக்குப் பெற்றுக் கிறித்தவ சமயத்தைத் தழுவிக் கொண்டார். 1836ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதியன்று ஞான முழுக்குப் பெற்றுக்கொண்டதின் பின் இவர் பெயர் "வெஸ்லி ஆபிரகாம்' என மாற்றிக் கொண்டார்.

இலக்கிய வாழ்க்கை

ஆறுமுகத் தம்பிரான் கிறித்து சமயம் புகுந்த பின் அம் மதத்தொடர்புபட்ட சில நூல்களை இயற்றியுள்ளார்.

நூல் பட்டியல்

உசாத்துணை

  • ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை
  • ஆறுமுகத் தம்பிரான்: என் சரித்திரம்: tamilvu