first review completed

ஆர்.எம். நௌஸாத்

From Tamil Wiki
ஆர்.எம். நெளஸாத் (நன்றி: noolaham.in )

ஆர்.எம். நௌஸாத் (பிறப்பு: செப்டம்பர் 5, 1960) ஈழத்தில் எழுதி வரும் கவிஞர், எழுத்தாளர். இதழாசிரியர்.

பிறப்பு, கல்வி

இலங்கையின் கிழக்கு மாகாணம் சாய்ந்தமருதுவில் செப்டம்பர் 5, 1960-ல் ராசிக் காரியப்பர், ஹாஜரா இணையருக்கு ஆர்.எம். நௌஸாத் பிறந்தார்.

தனிவாழ்க்கை

ஆர்.எம்.நௌசாத் ஓய்வு பெற்ற அஞ்சல் அதிபர். பாத்திமா றிபாயாவை மணந்தார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள்

இலக்கிய வாழ்க்கை

தீரன் என்பது ஆர்.எம்.நௌசாதின் புனைபெயர். . சிறுகதைகள், நாவல்கள் எழுதியுள்ளார். தீராவெளி வலைதளத்தை நடத்துகிறார். 1983-1989 வரை தூது என்ற பெயரில் கவிதைச் சிற்றேடு நடத்தினார். 16 இதழ்கள் வெளிவந்தது.

விருதுகள்

  • "நல்லதொரு துரோகம்" சிறுகதை பேராதனை பல்கலைக் கழக சங்கீத நாட்டிய சங்கத்தின் முதற் பரிசாக தங்கப் பதக்கம் பெற்றது.
  • 2009இல் "நட்டுமை" நாவல் காலச்சுவடு சுந்தர ராமசாமி -75 பவழவிழா இலக்கியப்போட்டியில் முதற் பரிசு பெற்றது.
  • 2014இல் "வக்காத்துக் குளம்" நாவல் அக்கினிக் குஞ்சு இணையம் நடத்திய எஸ்.பொ. நினைவு நாவல் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றது.
  • வெள்ளிவிரல் சிறுகதைத் தொகுதிக்கு 2011-ல் இலங்கை அரசின் தேசிய அரச சாகித்திய விருதும் கிழக்கு மாகாண சாகித்திய விருதும் கிடைத்தன.
  • "சாகும் தலம்" சிறுகதை எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளை நிறுவனம் நடத்திய அறிவியல் புனைகதைப் போட்டியில் சிறப்புப் பரிசு பெற்றது.
  • "தாய் மொழி" சிறுகதை ஞானம் மாசிகை நடத்திய புலோலியூர் க. சதாசிவம் நினைவுச் சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு பெற்றது.

இலக்கிய இடம்

ஆர்.எம் நௌசாதின் "கொல்வதெழுதுதல் 90" நாவல் பற்றி எம்.எம்.எம். நூறுல்ஹக் அவர்கள் "ஒரு கிராமத்தின் தேர்தல் கள நிலவரங்கள், கொலைக் கள விபரங்கள், வர்க்க முரண் நிலைகள், காதலுணர்வுகள் ஆகியன வெகு யதார்த்தமாக இதில் சித்தரிக்கப்பட்டுள்ளன. அதேவேளை அப்பாவி கிராமத்து மனிதர்களின் மனவியல்புகள், வர்ணனைகள், பேச்சோசைகள் என்பன கதையோட்டத்தின் ஊடே அற்புதமாகக் கையாளப்பட்டுள்ளன. நாவலாசிரியர் ஒரு திறமையான கதைசொல்லி என்பதை அவரது எழுத்துக்கள் நிறுவியிருக்கின்றன" என மதிப்பிடுகிறார்.

நூல்கள் பட்டியல்

கவிதைகள்
  • அபாயா என் கறுப்பு வானம்.(பிரதிலிபி வெளியீடு: 2015)
  • முத்திரையிடப்பட்ட மது (2022)
நாவல்
  • நட்டுமை (2009)
  • கொல்வதெழுதுதல் 90 (2013)
சிறுகதைத் தொகுதி
  • வல்லமை தாராயோ(2000)
  • வெள்ளிவிரல் (2011)
  • தீரதம் (2019)
பிற
  • ஆழித்தாயே அழித்தாயே (சுனாமி மாவியம்: 2014)
  • வக்காத்துக் குளம் (குறுநாவல்: 2021 )
  • குறு நெல் (குறும்பாக்கள்.2021)

இணைப்புகள்



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.