under review

ஆயிஷா சித்தீக்கா

From Tamil Wiki
Revision as of 19:21, 21 February 2024 by Logamadevi (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ஆயிஷா சித்தீக்கா (ஏ.எஸ்.பைரூஸியா) (பொ.யு. 20-ம் நூற்றாண்டின் பிற்பகுதி) ஈழத்துப் பெண் எழுத்தாளர், நாடக ஆசிரியர்.

வாழ்க்கைக் குறிப்பு

ஆயிஷா சித்தீக்கா இலங்கை கொழும்பில் முஹம்மத் நளீம், உம்மு தாஹரா இணையருக்குப் பிறந்தார். ஆங்கிலமொழியில் 8-ம் தரம்வரை கொழும்பு கைரியா முஸ்லிம் பெண்கள் பாடசாலையில் கற்றார். அரபு மொழியுடன் கூடிய க.பொ.த உயர்தரம் வரை கல்-எளிய அரபுக் கல்லூரியில் கற்றார். பட்டதாரியான இவர் ஒரு ஆசிரியர்.

நாடக வாழ்க்கை

நாடகப் பிரதிகளை எழுதும் ஆற்றல் கொண்ட இவரின் நாடகங்கள் தமிழ்த்தினப் போட்டியிலும் மீலாத்தினப் போட்டியிலும் வலயமட்ட, மாகாண மட்ட போட்டியிலும் பரிசில்களைப் பெற்றுள்ளன.

இலக்கிய வாழ்க்கை

ஆயிஷா சித்தீக்கா ஏ.எஸ்.பைரூஸியா என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதினார். மௌலவியா ஆசிரியையான ஆயிஷா சித்தீக்கா 'அரபுமொழி எழுத்தணி '(Arabic writers for Beginners) என்ற மூன்று பாகங்களைக் கொண்ட செயல் நூல்களை வெளியிட்டார். தமிழ்-சிங்களம்-ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலுமான விளக்கங்களுடன் இவை வெளிவந்து பலரின் பாராட்டைப் பெற்றன.

நூல் பட்டியல்

  • அரபுமொழி எழுத்தணி

உசாத்துணை


✅Finalised Page