ஆனந்த குமாரசுவாமி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 16: Line 16:
தன் தாய் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் தன் தந்தையின் நாடான சிலோன் மற்றும் அதை உள்ளடக்கிய இந்திய மற்றும் கீழை நாடுகளின் கலை பண்பாட்டின் மீது பற்றும் ஆர்வமும் கொண்டிருந்தார். அதனால் ஐரோப்பிய காலனியாதிக்கம் தென்னாசிய கலை பாரம்பரியத்தின் மீது உண்டாக்கும் எதிர்மறை விளைவுகளை பற்றி மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்.  சிலோனின் கலை மற்றும் பண்பாட்டின் தனித்தன்மையை பேண 1905-ல் சிலோன் சீர்திருத்த சங்கத்தை நிறுவி அதற்காக ஒரு இதழையும் நடத்தினார்.  

சிவ-நடனம் கட்டுரை தொகுப்பு: 1918-ல் வெளியிடப்பட்ட சிவ-நடனம் கட்டுரை தொகுப்பில் இந்திய அழகியல், இசை, தத்துவம் போன்றவற்றை மிக விரிவாக ஆராயும் கட்டுரைகள் உள்ளன.  
===== சிவ-நடனம் கட்டுரை தொகுப்பு: =====
1918-ல் வெளியிடப்பட்ட சிவ-நடனம் கட்டுரை தொகுப்பில் இந்திய அழகியல், இசை, தத்துவம் போன்றவற்றை மிக விரிவாக ஆராயும் கட்டுரைகள் உள்ளன.

இந்து மற்றும் பௌத்த புராண கதைகள்: சகோதரி நிவேதிதைக்கு அணுக்கமானவராக விளங்கினார் குமாரசுவாமி. நிவேதிதையின் இறப்பால் முடிக்காமல் போன இந்து மற்றும் பௌத்த புராண கதைகள் என்ற நூலை குமாரசுவாமி 1913-ல் எழுதி முடிக்க இருவர் பேரிலும் பிரசுரிக்கப்பட்டது.  
===== இந்து மற்றும் பௌத்த புராண கதைகள்: =====
சகோதரி நிவேதிதைக்கு அணுக்கமானவராக விளங்கினார் குமாரசுவாமி. நிவேதிதையின் இறப்பால் முடிக்காமல் போன இந்து மற்றும் பௌத்த புராண கதைகள் என்ற நூலை குமாரசுவாமி 1913-ல் எழுதி முடிக்க இருவர் பேரிலும் பிரசுரிக்கப்பட்டது.

===== அருங்காட்சியகப் பணி =====
===== அருங்காட்சியகப் பணி =====
Line 29: Line 31:
9 செப்டம்பர் 1947-ல் அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் மாநிலத்தின் நீதம் நகரில் தன் எழுபதாவது வயதில் மறைந்தார்.  
9 செப்டம்பர் 1947-ல் அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் மாநிலத்தின் நீதம் நகரில் தன் எழுபதாவது வயதில் மறைந்தார்.  

கலைத்துறையில் இடம்:
== கலைத்துறையில் இடம்: ==
குமாரசுவாமி இந்தியக்கலை பண்பாடு தத்துவம் இசை அதன் குறியீட்டு அர்த்தம் ஆகியவற்றை மேற்கத்தியர்களுக்கு புரியும் வண்ணம் விரிவாக ஆங்கிலத்தில் எழுதிய முன்னோடி. மேற்குலகில் இந்தியக் கலை மீது இருந்த புரிதலின்மையை பெருமளவில் மாற்ற குமாரசுவாமியின் எழுத்துக்கள் உதவின. இன்றும் இந்தியக்கலையின் தனித்தன்மையை குறியீட்டு அர்த்தத்தை தெரிந்து கொள்வதற்கு குமாரசுவாமியின் கட்டுரைகள் நூல்கள் பேருதவி புரிகிறது.

Revision as of 20:43, 15 February 2022

ஆனந்த கென்டிஷ் குமாரசுவாமி(1877-1948) இந்தியக் கலை மற்றும் தத்துவ அறிஞர். மெய்யிலாளர், வரலாற்றாளர். இவரது ஆங்கிலக் கட்டுரைகள் இந்தியக்கலைகளை விரிவாக மேற்கில் அறிமுகப்படுத்தி இந்தியக் கலை மற்றும் பண்பாடு குறித்த மேற்கத்திய பார்வைகளை மாற்றியமைத்தது. இவரது 'சிவ நடனம்' என்ற கட்டுரைத் தொகுப்பு புகழ்பெற்றது. தமிழ்நாட்டின் நடராஜர் செப்புத்திருமேனியை உலகறியச் செய்ததில் இவரது 'சிவ நடனம்' கட்டுரைக்கு பெரும் பங்குண்டு.

பிறப்பு, கல்வி

ஆனந்த குமாரசுவாமி சிலோனின் கொழும்புவில் அக்டோபர் 22, 1877-ல் இலங்கைத் தமிழரான புகழ்பெற்ற பொன்னம்பலம் குமாரசுவாமி குடும்பத்தைச் சேர்ந்த முத்துக்குமாரசுவாமிக்கும் ஆங்கிலப் பெண்மணியான எலிசபத் பீபிக்கும் பிறந்தார்.

ஆனந்த குமாரசுவாமியின் தாத்தா ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி பிரிட்டிஷ் அரசாங்கத்தில் அரசியல்வாதியாகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். ஆனந்த குமாரசுவாமியின் தந்தை முத்துக்குமாரசுவாமி சைவச்சித்தாந்தத்தை முதன்முதலில் ஆசியச்சங்கத்தின் இலங்கைக் கிளையில் 1857-ல் ஆங்கிலேயருக்கு வாசித்துக் காட்டி விளக்கியவர். அரிச்சந்திரன் கதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நாடகமாக்கி மேடையேற்றினார். பாலி நூலான ததவம்ஸாவை மொழிபெயர்த்துள்ளார்.

ஆனந்த குமாரசுவாமியின் தந்தையின் மறைவிற்குப் பிறகு தன் இரு வயதில் தாயாருடன் இங்கிலாந்து சென்றார். ஆரம்பக் கல்வி வைகிளிப்வ் கல்லூரியிலும் பின்னர் புவியியலில் இளங்கலைப் பட்டப்படிப்பு லண்டன் பல்கலைக்கழகத்திலும் நடந்தது. சிலோனின் கனிம வளம் பற்றிய ஆய்விற்கு டாக்டரேட் பட்டமும் பெற்றுள்ளார். ஆனந்த குமாரசுவாமிக்கு தமிழ், சம்ஸ்கிருதம், பாலி, சிங்களம், இந்தி, பாரசீகம், ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற மொழிகளில் பெரும்புலைமை கொண்டிருந்தார்.

தனி வாழ்க்கை

ஆனந்த குமாரசுவாமி 1902-ல் இங்கிலாந்தைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரான எதல் மேரி பார்ட்ரிட்ச் -ஐ மணந்தார். இடைக்கால சிங்கள கலை பற்றிய ஆனந்த குமாரசுவாமியின் ஆய்விற்கு எதல் புகைப்படங்கள் கொடுத்து உதவினார். மன வேறுபாடு காரணமாக இவரைப் பிரிந்து ரத்னா தேவி என்ற அலைஸ் எதல் ரிச்சர்ட்சனை இரண்டாவது மணம் புரிந்தார். இவர்களுக்கு நாரதா, ரோகிணி என இரு மகள்கள் பிறந்தனர். இவர்களின் விவாகரத்துக்குப்பின் அமெரிக்க ஓவிய மற்றும் நடனக்கலைஞரான ஸ்டெல்லா பிளாக்கை மணம் புரிந்து கொண்டார். இவ்வுறவும் விவகாரத்தில் முடிந்தபிறகு அர்ஜென்டினாவை சேர்ந்த டோனா லூயிசா ரன்ஸ்டினை நான்காவதாக மணந்து கொண்டார். இவர்களின் மகன் ராமா குமாரசுவாமி.

கல்லூரி படிப்பை முடித்தவுடன் இலங்கை சென்று சிலோன் கனிமவள ஆய்வு மையத்தின் தலைவராக விளங்கினார். குமாரசுவாமி இந்தியாவில் இருந்த போது ரவீந்திரநாத் தாகூருடனும் அன்று பரவலாக இருந்த சுதேசி இயக்கத்தினுடனும் தொடர்பில் இருந்தார்.

கலை வாழ்க்கை

தன் தாய் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் தன் தந்தையின் நாடான சிலோன் மற்றும் அதை உள்ளடக்கிய இந்திய மற்றும் கீழை நாடுகளின் கலை பண்பாட்டின் மீது பற்றும் ஆர்வமும் கொண்டிருந்தார். அதனால் ஐரோப்பிய காலனியாதிக்கம் தென்னாசிய கலை பாரம்பரியத்தின் மீது உண்டாக்கும் எதிர்மறை விளைவுகளை பற்றி மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். சிலோனின் கலை மற்றும் பண்பாட்டின் தனித்தன்மையை பேண 1905-ல் சிலோன் சீர்திருத்த சங்கத்தை நிறுவி அதற்காக ஒரு இதழையும் நடத்தினார்.

சிவ-நடனம் கட்டுரை தொகுப்பு:

1918-ல் வெளியிடப்பட்ட சிவ-நடனம் கட்டுரை தொகுப்பில் இந்திய அழகியல், இசை, தத்துவம் போன்றவற்றை மிக விரிவாக ஆராயும் கட்டுரைகள் உள்ளன.

இந்து மற்றும் பௌத்த புராண கதைகள்:

சகோதரி நிவேதிதைக்கு அணுக்கமானவராக விளங்கினார் குமாரசுவாமி. நிவேதிதையின் இறப்பால் முடிக்காமல் போன இந்து மற்றும் பௌத்த புராண கதைகள் என்ற நூலை குமாரசுவாமி 1913-ல் எழுதி முடிக்க இருவர் பேரிலும் பிரசுரிக்கப்பட்டது.

அருங்காட்சியகப் பணி

பாஸ்டன் நுண்கலை அருங்காட்சியகத்தின் இந்தியக்கலை பிரிவின் முதல் காப்பாளராக 1917-ல் இணைந்தார். பிறகு இந்திய, பாரசீக மற்றும் முகலாயக் கலை ஆய்வாளரானார். தொடர்ந்து அருங்காட்சியகத்திற்குத் தேவையான அட்டவணைகள் இந்திய ஆசியக் கலை பற்றிய அறிமுகக் கட்டுரைகளை நூல்களை எழுதினார்.

இராஜபுத்திர ஓவியம்

இந்தியாவின் ராஜபுத்திர மற்றும் முகலாய பாணி ஓவியங்களை பெருமளவில் சேகரித்து தன்னுடன் பாஸ்டன் நுண்கலை அருங்காட்சியகத்திற்கு எடுத்துச் சென்றார். ராஜபுத்திர ஓவியம் பற்றிய நூலையும் எழுதினார். இதன் மூலம் இந்தியாவிற்கு வெளியே ராஜபுத்திர ஓவியங்களின் பெரும் சேகரிப்பு ஒன்று உருவாகவும் அதைப்பற்றி பரவலாக தெரிய வரவும் செய்தார்.

இறப்பு

9 செப்டம்பர் 1947-ல் அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் மாநிலத்தின் நீதம் நகரில் தன் எழுபதாவது வயதில் மறைந்தார்.

கலைத்துறையில் இடம்:

குமாரசுவாமி இந்தியக்கலை பண்பாடு தத்துவம் இசை அதன் குறியீட்டு அர்த்தம் ஆகியவற்றை மேற்கத்தியர்களுக்கு புரியும் வண்ணம் விரிவாக ஆங்கிலத்தில் எழுதிய முன்னோடி. மேற்குலகில் இந்தியக் கலை மீது இருந்த புரிதலின்மையை பெருமளவில் மாற்ற குமாரசுவாமியின் எழுத்துக்கள் உதவின. இன்றும் இந்தியக்கலையின் தனித்தன்மையை குறியீட்டு அர்த்தத்தை தெரிந்து கொள்வதற்கு குமாரசுவாமியின் கட்டுரைகள் நூல்கள் பேருதவி புரிகிறது.

குமாரசுவாமியின் சிந்தனைகள் இந்தியாவின் நவீனக்கலை முன்னோடியான நந்தலால் போஸ் இங்கிலாந்தின் நவீன சிற்பிகளான எரிக் கில் மற்றும் ஜேக்கப் எப்ஸ்டன் போன்றவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சர்வேப்பள்ளி ராதாகிருஷ்ணன் குமாரசுவாமியை பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்: இந்திய மறுமலர்ச்சி மட்டுமல்ல புது உலக மறுமலர்ச்சிக்கு காரணமானவர்களில் கூட டாக்டர் ஆனந்த குமாரசுவாமி முதன்மை இடத்தை வகிக்கிறார்.

விவாதங்கள்

இந்திய மரபின் சிறப்புக் கூறுகளை பெருமளவில் விளக்கிக் கூறியவர் என்றாலும் மரபை விமர்சனம் இல்லாமல் அப்படியே ஏற்றுக் கொள்ளும் போக்கு குமாரசுவாமியின் இந்திய சாதிய அடக்குமுறை மற்றும் பெண்கள் மீதான பார்வைகளில் உள்ளது.

ஆஷிஷ் நந்தி குமாரசுவாமியை பற்றி கூறும் வரிகள்:

அவரது படைப்புகளில் பழைய மரபுகள் பற்றிய எந்த விமர்சனமும் இல்லை. குமாரசுவாமியின் கருத்துக்களை ஆராய்ந்து பார்த்தால் பெண்கள் தன் இறந்த கணவனுடன் உடன்கட்டை ஏறுவதை எந்த வெட்கமும் இன்றி அங்கீகரித்திருப்பதை காணலாம்.

...குமாரசாமி வர்க்கப்பிரிவினை உள்ள நவீன சமூக அமைப்பை விட நவீனத்துக்கு முந்தைய சாதி அடுக்குமுறை கருணை மிக்கதாக கருதுவதால் சாதிய அடுக்குமுறையை ஆதரிக்கிறார்.

நூல்கள்

  • Bibliography of Ananda Coomaraswamy (Compiled by James S. Crouch) (2002, Indira Gandhi National Centre for the Arts & Manohar Publishers and Distributors)
கலை மற்றும் படிமவியல் நூல்கள்:
  • Teaching of Drawing in Ceylon (1906, Colombo Apothecaries)

Medeival Sinhalese art, (1908, Essex house press)

The Aims of Indian Art, (1908, Essex House Press, London)

Voluspa; The Sibyl's Saying (1909, Essex House Press, London)

The Indian craftsman (1909, Probsthain: London)

Indian drawings, 1910, Printed for the India society at the Essex house press

Burning and melting: Being the Suz-u-Gudaz of Muhammad Riza Nau i of Khabushan, (Translation with Mirza Y. Dawud) (1912, Printed at the old Bourne press)

Viśvakarmā; examples of Indian architecture, sculpture, painting, handicraft (1914, London)

The mirror of gesture-Translation of Abhinaya darpaṇa written by Nandikeśvara (with Duggirāla Gōpālakr̥ṣṇa) (1917, Harvard University Press; 1997, South Asia Books)

Rajput Painting, (1916, Oxford University Press; 2003, B.R. Publishing Corp.,)

The Dance of Siva, (1918, Turn Inc., New York)

Art And Swadeshi (Ganesh & Company, 1919; Munshiram Manoharlal Publishers, 1994)

Introduction To Indian Art, (1923; Munshiram Manoharlal Publishers, 1999; Kessinger Publishing, 2007)

The treatise of al-Jazari on automata, (1924, Museum of Fine Arts, Boston)

A New Approach to the Vedas: An Essay in Translation and Exegesis, (1933, Luzac & Co; 1994, South Asia Books)

Elements of Buddhist Iconography, (1935, Harvard University Press)

Figures of Speech or Figures of Thought?: The Traditional View of Art, (1946; World Wisdom 2007)

History of Indian and Indonesian Art, (2003, Kessinger Publishing)

Early Indian Architecture: Cities and City-Gates, (2002, South Asia Books)

Guardians of the Sundoor: Late Iconographic Essays, (2004, Fons Vitae)

Buddhist Art, (2005, Kessinger Publishing)

The Origin of the Buddha Image, (2001, Munshiram Manoharlal Pub Pvt Ltd)

The Transformation of Nature in Art, (1996, Sterling Pub Private Ltd)

Bronzes from Ceylon, chiefly in the Colombo Museum, (1978, Dept. of Govt. Print)

Early Indian Architecture: Palaces, (1975, Munshiram Manoharlal)

The arts & crafts of India & Ceylon, (1964, Farrar, Straus)

Traditional Art and Symbolism, (Edited by Roger Lipsey) (1986, Princeton University Press)

Christian and Oriental Philosophy of Art, (1956, Dover Publications)

Archaic Indian Terracottas, (1928, Klinkhardt & Biermann)

Yaksas, (1928 & 1931, The Freer Gallery; 1998, Munshirm Manoharlal Pub Pvt Ltd)

A catalogue of sculptures by John Mowbray- Clarke: shown at the Kevorkian Galleries, 1919

Early Indian Architecture: Cities and City-Gates, (2002, South Asia Books) A catalog of sculptures by John Mowbray-Clarke: shown at the Kevorkian Galleries, New York, from May the seventh to June the seventh, 1919. (1919, New York: Kevorkian Galleries, co-authored with Mowbray-Clarke, John, H. Kevorkian, and Amy Murray)

Buddhist art in Asia, (1919, John Ellerton Lodge)

Catalogue of the Indian collections in the Museum of fine arts, Boston, 1923

Bibliographies of Indian art, (1925, Boston Museum of Fine Arts)

Why Exhibit Works of Art? (1943, Luzac & Company)

Alavakadamanaya/(Colombo): Lanka Sadacara Samitiya, (1907, Pi. Tudave Pandita Gunavardhana)

Essays in Early Indian Architecture, Edited by Michael W. Meister, 1992

Essays in Architectural Theory, Edited by Michael W. Meister, 1995

Essays on Jaina Art (Edited by Richard Cohen) (Museum of Fine Arts, 1923)

Essays on Music(Edited by Prem Lata Sharma) (Manohar Publishers, 2010) History of Indian and Indonesian Art, (2003, Kessinger Publishing)

மெய்யியல் நூல்கள்:

Hinduism and Buddhism (Edited by Keshavaram N. Iyengar and Rama P. Coomaraswamy) (1943, New York: Philosophical Library; 2007, Kessinger Publishing; 2011, Golden Elixir Press)

Myths of the Hindus & Buddhists (with Sister Nivedita) (1914, H. Holt; 2003, Kessinger Publishing)

Vidyāpati: Bangīya padābali; songs of the love of Rādhā and Krishna], (1915, The Old Bourne press: London)

Buddha and the Gospel of Buddhism (1916, G. P. Putnam's sons; 2006, Obscure Press,)

The Living Thoughts of Gotama the Buddha, (1948, Cassell, London; 2001, Fons Vitae)

Time and eternity, (1947, Artibus Asiae)

Perception of the Vedas, (2000, Manohar Publishers and Distributors)

Coomaraswamy: Selected Papers, Volume 2, Metaphysics, (1977, Princeton University Press, )

The Darker Side of Dawn(1935; 2018, Forgotten Books)

சமூக விமர்சன நூல்கள்:

The village community and modern progress (12 pages) (1908, Colombo Apothecaries)

The Message of the East (Ganesh & Company Publishers, 1909)

Essays in national idealism (1910, Colombo Apothecaries)

Am I My Brothers Keeper, (1947, Ayer Co)

The Bugbear of Literacy, (1979, Sophia Perennis)

What is Civilisation?: and Other Essays, (1993, Golgonooza Press, UK),

Spiritual Authority and Temporal Power in the Indian Theory of Government, (1994, Oxford University Press)

மற்ற நூல்கள்: Writings on Geology & Minerology (Edited by A. Ranganathan, K. Srinivasa Rao) (Indira Gandhi National Centre for the Arts, 2001)

Selected Letters of Ananda K. Coomaraswamy (Edited by Alvin Moore & Rama P. Coomaraswamy) (Oxford University Press, 1989)

மரணத்திற்குப் பிந்தைய சேகரிப்புகள்:

The Door in the Sky. Coomaraswamy on Myth and Meaning, (Princeton University Press, 1997)

Coomaraswamy: Selected Papers, 3 volumes: Traditional Art and Symbolism, Metaphysics, His Life and Work, (Princeton University Press, 1977)

The Essential Ananda K. Coomaraswamy, (2003, World Wisdom)

Guardians of the Sun-Door, (Fons Vitae, 2004)

உசாத்துணை:

https://www.britannica.com/biography/Ananda-Kentish-Coomaraswamy

https://www.forewordreviews.com/reviews/the-wisdom-of-ananda-coomaraswamy/

https://tamaraikannan.wordpress.com/2021/08/03/1/

https://tamizhini.in/2021/11/25/கண்ணொடு-கண்இணை-நோக்கின்/