being created

ஆத்மாநாம்

From Tamil Wiki
jeyamohan.in

ஆத்மாநாம் [ஜனவரி 18, 1951 - ஜூலை 06, 1984] கவிஞர், மொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர், விமர்சகர். ழ என்ற கவிதை ஏட்டின் ஆசிரியர்.


பிறப்பு மற்றும் கல்வி

சென்னையில் ஜனவரி 18, 1951-ல் பிறந்தவர். இயற்பெயர் எஸ்.கே.மதுசூதன். 34 வயதுகூட முடியாமல் இளம் வயதிலேயே ஜூலை 06, 1984-ல் பெங்களூரில் இறந்துபோனார். அம்பத்தூர் சர் ராமசாமி முதலியார் உயர்நிலைப் பள்ளியிலும் அரும்பாக்கம் து.கோ.வைணவக் கல்லூரியிலும் (பிகாம்) பயின்றார்.

தனி வாழ்க்கை

நவீனத் தமிழ்க் கவிதைக்குப் பெரும் பங்களிப்பு செய்த ஆத்மாநாமின் தாய்மொழி கன்னடம். சதர்ன் சுவிட்ச் கியர்ஸ், கோரமண்டல் கார்மென்ட்ஸ், ரெங்கா அப்பாரெல்ஸ் ஆகிய கம்பெனிகளில் வேலைசெய்தார். டாப் டென் (1978) என்ற ரெடிமேட் ஆடை உற்பத்தி நிறுவனத்தைப் பெருங்கனவுகளுடன் தொடங்கினார்.


இலக்கிய வாழ்க்கை

நவீனக் கவிதைக்காக, ‘ழ’ என்ற ஒரு முன்னோடி இதழைத் தொடங்கி, 24 இதழ்களைக் கொண்டு வந்தார்.

விருதுகள்

கவிஞர் ஆத்மாநாம் விருது

கவிஞர் ஆத்மாநாம் அவர்களின் இலக்கியப் பங்களிப்புகளை நினைவூட்டும் வகையிலும் கொண்டாடும் வகையிலும் மெய்ப்பொருள் பதிப்பகம் ‘கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளை’யைக் கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் கவிஞர் ஆத்மாநாம் பெயரில் ரூ.25,000 பரிசுத்தொகையும் விருதும் வழங்கி வருகிறது.

இலக்கிய இடம்

தமிழ் நவீனக் கவிதையின் செழுமையான காலகட்டமான 1970களில் தனது ஈடுபாடுமிக்க கவி ஆர்வத்தைக் கவிதைகள், கவிதையியல் பற்றிய உரையாடல், கவிதைக்கென ஒரு பத்திரிகை, கவிதை மொழிபெயர்ப்பு எனப் பன்முகமான பங்களிப்பின் மூலமாக வழங்கியவர் ஆத்மாநாம்.

படைப்புகள்

கவிதைத் தொகுப்புகள்

உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.