under review

ஆசை: Difference between revisions

From Tamil Wiki
Line 3: Line 3:
[[File:ஆசைத்தம்பி1.png|thumb|ஆசை (ஆசைத்தம்பி)]]
[[File:ஆசைத்தம்பி1.png|thumb|ஆசை (ஆசைத்தம்பி)]]
== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
இயற்பெயர் ஆசைத்தம்பி. தந்தை பெயர் தேசிகமணி. ஆசை 1979-ல் மன்னார்குடிக்கு அருகில் உள்ள வடுவூர் புதுக்கோட்டையில் பிறந்தார். எம்.ஏ; எம்.ஃபில் பட்டம் பெற்றார்.  
இயற்பெயர் ஆசைத்தம்பி. தந்தை பெயர் தேசிகமணி. ஆசை 1979-ல் மன்னார்குடிக்கு அருகில் உள்ள வடுவூர் புதுக்கோட்டையில் பிறந்தார். எம்.ஏ; எம்.ஃபில் பட்டம் பெற்றார்.  
 
== தனிவாழ்க்கை ==
== தனிவாழ்க்கை ==
ஆசை 2011-ல் சிந்துவைத் திருமணம் செய்து கொண்டார். மகன்கள் [[மகிழ் ஆதன்]], நீரன்.
ஆசை 2011-ல் சிந்துவைத் திருமணம் செய்து கொண்டார். மகன்கள் [[மகிழ் ஆதன்]], நீரன்.
== அகராதிப்பணி ==
== அகராதிப்பணி ==
ஆசை 2008 முதல் க்ரியா அகராதி, பதிப்பக பணியில் இருந்தார். அகராதியை விரிவாக்கித் திருத்தும் பணியில் பிரதான ஆசிரியர் குழுவில் இருந்தார். அகராதியின் ‘துணை ஆசிரியர்’ பொறுப்பில் இருந்தார்.
ஆசை 2008 முதல் க்ரியா அகராதி, பதிப்பக பணியில் இருந்தார். அகராதியை விரிவாக்கித் திருத்தும் பணியில் பிரதான ஆசிரியர் குழுவில் இருந்தார். அகராதியின் ‘துணை ஆசிரியர்’ பொறுப்பில் இருந்தார்.
வெவ்வேறு அகராதிப் பணிகள், க்ரியா பதிப்பித்த புத்தகங்களின் செம்மையாக்கப் பணிகளிலும் பணியாற்றினார். க்ரியாவில் இருந்த 10 ஆண்டுகளில் ஆல்பெர் காம்யுவின் ‘அந்நியன்’, காஃப்காவின் ‘விசாரணை’, எக்சுபெரியின் ‘குட்டி இளவரசன்’, லாவோ ட்சுவின் ‘தாவோ தே ஜிங்’ உள்ளிட்ட மொழிபெயர்ப்பு நூல்களின் திருத்திய பதிப்புகளில் மொழிபெயர்ப்பாளர்களுடன் பணிபுரிந்துள்ளார்.

== இதழியல் ==
== இதழியல் ==
2013 முதல் 2022 வரை ‘இந்து தமிழ்’ நடுப்பக்க அணியில் பணியாற்றினார்.
2013 முதல் 2022 வரை ‘இந்து தமிழ்’ நடுப்பக்க அணியில் பணியாற்றினார்.
Line 35: Line 32:
* [https://writerasai.blogspot.com/ ஆசைத்தம்பி: வலைதளம்]
* [https://writerasai.blogspot.com/ ஆசைத்தம்பி: வலைதளம்]
* [https://www.hindutamil.in/author/204-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88/14 ஆசை எழுதிய கட்டுரைகள்: இந்து தமிழ் திசை]
* [https://www.hindutamil.in/author/204-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88/14 ஆசை எழுதிய கட்டுரைகள்: இந்து தமிழ் திசை]
* கவிஞர் ஆசை: எஸ். ராமகிருஷ்ணன்
* [https://www.sramakrishnan.com/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88/ கவிஞர் ஆசை: எஸ். ராமகிருஷ்ணன்]

{{Finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 08:17, 25 September 2022

ஆசை (ஆசைத்தம்பி)

ஆசை (ஆசைத்தம்பி) (பிறப்பு: 1979) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். கவிஞர், கட்டுரையாளர், பத்திரிக்கையாளர். கிரியா அகராதி, பதிப்பகப்பணியிலும், இந்து தமிழ்திசை நடுப்பக்க ஆசிரியர் குழுவிலும் பணியாற்றியுள்ளார்.

ஆசை (ஆசைத்தம்பி)

பிறப்பு, கல்வி

இயற்பெயர் ஆசைத்தம்பி. தந்தை பெயர் தேசிகமணி. ஆசை 1979-ல் மன்னார்குடிக்கு அருகில் உள்ள வடுவூர் புதுக்கோட்டையில் பிறந்தார். எம்.ஏ; எம்.ஃபில் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

ஆசை 2011-ல் சிந்துவைத் திருமணம் செய்து கொண்டார். மகன்கள் மகிழ் ஆதன், நீரன்.

அகராதிப்பணி

ஆசை 2008 முதல் க்ரியா அகராதி, பதிப்பக பணியில் இருந்தார். அகராதியை விரிவாக்கித் திருத்தும் பணியில் பிரதான ஆசிரியர் குழுவில் இருந்தார். அகராதியின் ‘துணை ஆசிரியர்’ பொறுப்பில் இருந்தார். வெவ்வேறு அகராதிப் பணிகள், க்ரியா பதிப்பித்த புத்தகங்களின் செம்மையாக்கப் பணிகளிலும் பணியாற்றினார். க்ரியாவில் இருந்த 10 ஆண்டுகளில் ஆல்பெர் காம்யுவின் ‘அந்நியன்’, காஃப்காவின் ‘விசாரணை’, எக்சுபெரியின் ‘குட்டி இளவரசன்’, லாவோ ட்சுவின் ‘தாவோ தே ஜிங்’ உள்ளிட்ட மொழிபெயர்ப்பு நூல்களின் திருத்திய பதிப்புகளில் மொழிபெயர்ப்பாளர்களுடன் பணிபுரிந்துள்ளார்.

இதழியல்

2013 முதல் 2022 வரை ‘இந்து தமிழ்’ நடுப்பக்க அணியில் பணியாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

ஆசைத்தம்பி பதினொரு வயதிலிருந்து கவிதை எழுதிவருகிறார். சித்து என்ற முதல் கவிதைத்தொகுப்பு 2006-ல் வெளியானது. தங்க. ஜெயராமனுடன் இணைந்து ஒமர் கய்யாமின் 'ருபாயியத்', திக் நியட் ஹானின் ‘அமைதி என்பது நாமே’, ப. ஜெகநாதனுடன் இணைந்து 'பறவைகள்' போன்ற மொழிபெயர்ப்புகளைச் செய்தார்.

விருது

  • தமிழக அரசு பபாசியின் கவிதைக்கான ‘கலைஞர் பொற்கிழி விருது-2022’ வழங்கியது.
  • 2014இல் சென்னை லிட்டரெரி ஃபெஸ்டிவல் அமைப்பு ‘Emerging Literary Icon' விருது வழங்கியது.

நூல்கள்

கவிதைத் தொகுப்பு
  • சித்து (2006)
  • கொண்டலாத்தி (2010, க்ரியா)
  • அண்டங்காளி (2021)
  • குவாண்டம் செல்ஃபி (2021, டிஸ்கவரி)
மொழிபெயர்ப்புகள்
  • ருபாயியத் (2010, க்ரியா)
  • அமைதி என்பது நாமே (2018, க்ரியா)
  • பறவைகள் (2013, க்ரியா)
பிற
  • என்றும் காந்தி (2019, இந்து தமிழ் திசை)
  • இந்த பிரபஞ்சமே பேபல் நூலகம்தான் (2022, டிஸ்கவரி)

இணைப்புகள்

✅Finalised Page