being created

அ. வெண்ணிலா: Difference between revisions

From Tamil Wiki
(Husband details added)
(Added husband details)
Line 10: Line 10:

== தனிவாழ்க்கை ==
== தனிவாழ்க்கை ==
அ.வெண்ணிலாவின் கணவர் முருகேஷ் தமிழின்  குழந்தை இலக்கியப் படைப்பாளி, கவிஞர், எழுத்தாளர், சிற்றிதழ் ஆசிரியர், ஐக்கூ கவிஞர், கல்வி ஆலோசகர், பதிப்பாசிரியர் எனப் பன்முகங்களுடன், சமூகம், கல்வி மற்றும் இலக்கியப் பணிகளில் இயங்கி வருகிறார்.  இவர்களுக்கு மூன்று மகள்கள். மூத்த மகள் கவின்மொழி. அடுத்து இரட்டையர்கள் நிலாபாரதி மற்றும் அன்புபாரதி.  அ.வெண்ணிலா தான் படித்த வந்தவாசி அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் கணிதப் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
அ.வெண்ணிலாவின் கணவர் மு. முருகேஷ் தமிழின்  குழந்தை இலக்கியப் படைப்பாளி, கவிஞர், எழுத்தாளர், சிற்றிதழ் ஆசிரியர், ஐக்கூ கவிஞர், கல்வி ஆலோசகர், பதிப்பாசிரியர் எனப் பன்முகங்களுடன், சமூகம், கல்வி மற்றும் இலக்கியப் பணிகளில் இயங்கி வருகிறார்.  இவர்களுக்கு மூன்று மகள்கள். மூத்த மகள் கவின்மொழி. அடுத்து இரட்டையர்கள் நிலாபாரதி மற்றும் அன்புபாரதி.  அ.வெண்ணிலா தான் படித்த வந்தவாசி அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் கணிதப் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
 
அ. வெண்ணிலாவின் தந்தை திராவிடர் கழக ஆதரவாளர் என்பதால், இவர் சிறு வயதில் இருந்தே புத்தகங்கள் வாசிக்கும் பழக்க உடையவராக வளர்ந்தார்.  ஆனால் எழுதத் துவங்கியது 27 வது வயதில் தான்
அ. வெண்ணிலாவின் தந்தை திராவிடர் கழக ஆதரவாளர் என்பதால், இவர் சிறு வயதில் இருந்தே புத்தகங்கள் வாசிக்கும் பழக்க உடையவராக வளர்ந்தார்.  ஆனால் எழுதத் துவங்கியது 27 வது வயதில் தான்
Line 19: Line 18:

’மீதம் இருக்கும் சொல்’ எனும் கதைத் தொகுப்பில் 85 ஆண்டுகால தமிழ் சிறுகதை உலகில் பெண்கள் ராமாமிர்தம் அம்மையார் முதல் கவிதா சொர்ணவல்லி வரை பல பெண் எழுத்தாளர்களின் கதைகளை அ. வெண்ணிலா தொகுத்திருக்கிறார்.
 
"மீதம் இருக்கும் சொல்’ எனும் கதைத் தொகுப்பில் 85 ஆண்டுகால தமிழ் சிறுகதை உலகில் பெண்கள் ராமாமிர்தம் அம்மையார் முதல் கவிதா சொர்ணவல்லி வரை பல பெண் எழுத்தாளர்களின் கதைகளை அ. வெண்ணிலா தொகுத்திருக்கிறார்.

  அ. வெண்ணிலாவின்  "சாலாம்புரி" நாவல் திராவிடக் கட்சியின் அடிமட்ட, தொண்டர்களின் மனநிலையையும், அவர்கள் தங்கள் குடும்பத்தினரிடமிருந்து எதிர்கொள்ளும் சிக்கல்களையும் காட்டுகிறது
  அ. வெண்ணிலாவின்  "சாலாம்புரி" நாவல் திராவிடக் கட்சியின் அடிமட்ட, தொண்டர்களின் மனநிலையையும், அவர்கள் தங்கள் குடும்பத்தினரிடமிருந்து எதிர்கொள்ளும் சிக்கல்களையும் காட்டுகிறது

Revision as of 20:00, 1 February 2022

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

This page is being created by கா சிவா

அ. வெண்ணிலா  கவிஞர், சிறுகதை மற்றும் நாவலாசிரியர், பதிப்பாளர், சிற்றிதழ் ஆசிரியர் என பன்முகம் கொண்டவர். அரிய தொகுப்பு நூல்களையும் உருவாக்கியுள்ளார். ஒரு பக்கம் சாயாத பெண்ணிய நோக்கு இவரின் படைப்புகளின் சிறப்பாகும். அ. வெண்ணிலா அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்

பிறப்பு, கல்வி

அ.வெண்ணிலா . சி.அம்பலவாணன் -வசந்தா தம்பதியருக்கு ஒரே மகளாக 1971-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி பிறந்தார். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிக்கு அருகில் அம்மையப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்

ஐந்தாம் வகுப்பு வரை அம்மையப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், 6-ம் வகுப்பு முதல் ஆசிரியர் பயிற்சிப் படிப்பு வரை வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் படித்தார். முதுகலை உளவியல், கணிதம் படித்துள்ளார். "தேவதாசிகளின் கலைத்திறனும் ஆளுமையும்" என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

தனிவாழ்க்கை

அ.வெண்ணிலாவின் கணவர் மு. முருகேஷ் தமிழின் குழந்தை இலக்கியப் படைப்பாளி, கவிஞர், எழுத்தாளர், சிற்றிதழ் ஆசிரியர், ஐக்கூ கவிஞர், கல்வி ஆலோசகர், பதிப்பாசிரியர் எனப் பன்முகங்களுடன், சமூகம், கல்வி மற்றும் இலக்கியப் பணிகளில் இயங்கி வருகிறார். இவர்களுக்கு மூன்று மகள்கள். மூத்த மகள் கவின்மொழி. அடுத்து இரட்டையர்கள் நிலாபாரதி மற்றும் அன்புபாரதி. அ.வெண்ணிலா தான் படித்த வந்தவாசி அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் கணிதப் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

அ. வெண்ணிலாவின் தந்தை திராவிடர் கழக ஆதரவாளர் என்பதால், இவர் சிறு வயதில் இருந்தே புத்தகங்கள் வாசிக்கும் பழக்க உடையவராக வளர்ந்தார்.  ஆனால் எழுதத் துவங்கியது 27 வது வயதில் தான்

படைப்புலகம்

அ. வெண்ணிலாவின் "கங்காபுரம்" நாவல் ராஜராஜ சோழன் மற்றும் ராசேந்திர சோழன் வாழ்வை அடைப்படையாகக் கொண்டு எழுதபட்டது. குறிப்பாக தன் தந்தையின் நிழலிலேயே இருக்கும் மகன்  தன் தனித்தன்மையை நிறுவ துடிக்கும் மனப்போராட்டத்தை அடிப்படையாக கொண்டது. பெண்களின் பார்வை வழியாக வரலாற்றைச் சொல்வது இந்நாவலின் தனிச் சிறப்பாகும்.

"மீதம் இருக்கும் சொல்’ எனும் கதைத் தொகுப்பில் 85 ஆண்டுகால தமிழ் சிறுகதை உலகில் பெண்கள் ராமாமிர்தம் அம்மையார் முதல் கவிதா சொர்ணவல்லி வரை பல பெண் எழுத்தாளர்களின் கதைகளை அ. வெண்ணிலா தொகுத்திருக்கிறார்.

  அ. வெண்ணிலாவின்  "சாலாம்புரி" நாவல் திராவிடக் கட்சியின் அடிமட்ட, தொண்டர்களின் மனநிலையையும், அவர்கள் தங்கள் குடும்பத்தினரிடமிருந்து எதிர்கொள்ளும் சிக்கல்களையும் காட்டுகிறது

படைப்புலகம்

"கங்காபுரம்" நாவலை எழுதியதன் மூலம் வரலாற்று நாவல் எழுதிய முதல் பெண் எழுத்தாளர் என கருதப்படுகிறார். பெண்ணியப் பார்வைகளை நடுநிலைத் தன்மையோடு முன்வைப்பது இவரது எழுத்துகளின் தனித்தன்மையாகும். டாக்டர் மு. ராஜேந்திரன் இ.ஆ.ப., உடன் இணைந்து இவர் தொகுத்த  வந்தவாசிப் போர் - 250 மற்றும் பதிப்பித்த நூல்கள் (இந்திய சரித்திரக் களஞ்சியம், ப. சிவனடி, (8 தொகுதிகள்) ஆனந்தரங்கப் பிள்ளை தினப்படி சேதிக் குறிப்பு,(12 தொகுதி)) போன்றவை மிக முக்கியமான அறிவியக்க செயல்பாடுகளாகும்.

இவரது படைப்புகளை இதுவரை 10 பேர் இளங்கலை முனைவர் (எம்.பில்) ஆய்வும், 4 பேர் முனைவர் (பி.ஹெச்டி) பட்ட ஆய்வும் செய்துள்ளனர். இவரது நூல்கள் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி அளவிலான பாடத்திட்டங்களில் பாடமாக இடம்பெற்றுள்ளன.

விருதுகள்

மொழிபெயர்ப்புகள்/ ஆய்வுகள்

நூல்பட்டியல்

கவிதை

1. என் மனசை உன் தூரிகை தொட்டு

2. நீரில் அலையும் முகம்

3. ஆதியில் சொற்கள் இருந்தன

4. இசைக்குறிப்புகள் நிறையும் மைதானம்

6. கனவைப் போலொரு மரணம்

7. இரவு வரைந்த ஓவியம்

8. துரோகத்தின் நிழல்

9. எரியத் துவங்கும் கடல்

(தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு)

கடிதம்

கனவிருந்த கூடு

கட்டுரை

1. பெண் எழுதும் காலம்

2. ததும்பி வழியும் மௌனம்

3. கம்பலை முதல் (டாக்டர் மு. ராஜேந்திரன் இ.ஆ.ப., உடனிணைந்து)

4. தேர்தலின் அரசியல்

5. அறுபடும் யாழின் நரம்புகள்

6. எங்கிருந்து தொடங்குவது

7. மரணம் ஒரு கலை

சிறுகதை

1. பட்டுப்பூச்சிகளை தொலைத்த ஒரு பொழுதில்

2. பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும்

3. இந்திர நீலம்

ஆய்வு

தேவரடியார்: கலையே வாழ்வாக

நாவல்

1. கங்காபுரம்

2. சாலாம்புரி

தொகுத்த நூல்கள்

1. வந்தவாசிப் போர் - 250 (டாக்டர் மு. ராஜேந்திரன் இ.ஆ.ப., உடனிணைந்து)

2. நிழல் முகம்

3. மீதமிருக்கும் சொற்கள்

4. காலத்தின் திரைச் சீலை டிராட்ஸ்கி மருது

5. கனவும் விடியும்

பதிப்பு

1. இந்திய சரித்திரக் களஞ்சியம், ப. சிவனடி, 8 தொகுதிகள்

2. ஆனந்தரங்கப் பிள்ளை தினப்படி சேதிக் குறிப்பு, 12 தொகுதி (டாக்டர் மு. ராஜேந்திரன் இ.ஆ.ப., உடனிணைந்து)

heading