அ. சந்திரசேகர பண்டிதர்

From Tamil Wiki
Revision as of 11:06, 7 March 2022 by Ramya (talk | contribs) (Created page with "சந்திரசேகர பண்டிதர் யாழ்ப்பாணம், உடுவிலில் அம்பலவாணர் என்பவருக்குப் பிறந்தவர். தமது பாட்டனார் சங்கர உடையாரிடம் கல்வி கற்றார். உடுவிலில் அப்போதிருந்த கிறித்தவ மதப் பிரசாரகர...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சந்திரசேகர பண்டிதர் யாழ்ப்பாணம், உடுவிலில் அம்பலவாணர் என்பவருக்குப் பிறந்தவர். தமது பாட்டனார் சங்கர உடையாரிடம் கல்வி கற்றார். உடுவிலில் அப்போதிருந்த கிறித்தவ மதப் பிரசாரகர்களிடம் பணியாற்றி நதானியேல் என்ற பெயரைப் பெற்று கிறித்தவரானார். வண. ஸ்பால்டிங் என்பவருக்கு ஆசிரியராக இருந்து, பல நூல்களை மொழிபெயர்த்தும், இயற்றியும் உள்ளார். நல்லூரில் வாழ்ந்த வண. ஜெ. நைட் என்பவர் தமிழ்-ஆங்கில அகராதி ஒன்று எழுதிய போது அவருக்கு உதவியிருந்தார். விவிலிய நூல் மொழிபெயர்ப்புக்காக ஸ்பால்டிங்கு பாதிரியார், ஆணல்ட் சதாசிவம்பிள்ளை ஆகியோருடன் 1848 ஆம் ஆண்டில் சென்னை சென்றார்.

மானிப்பாய் அச்சியந்திரசாலையில் மதப்போதகர்கள் அச்சிட்ட பல கிறித்தவ வேத மொழிபெயர்ப்புகளுக்கு இவர் பல வகைகளிலும் உதவியுள்ளார்.