under review

அ. குமாரசுவாமிப் புலவர்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Standardised)
Line 1: Line 1:
[[File:குமாரசாமிப் பிள்ளை.jpg|thumb|அ. குமாரசுவாமிப் புலவர்]]
[[File:குமாரசாமிப் பிள்ளை.jpg|thumb|அ. குமாரசுவாமிப் புலவர்]]
அ. குமாரசுவாமிப் புலவர் (ஜனவரி 18, 1854 - மார்ச்சு 23, 1922) இலங்கை தமிழ், சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர், பதிப்பாளர், உரையாசிரியர், ஆசிரியர் என பன்முகம் கொண்டவர்.  
அ. குமாரசுவாமிப் புலவர் (ஜனவரி 18, 1854 - மார்ச் 23, 1922) இலங்கை தமிழ், சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர், பதிப்பாளர், உரையாசிரியர், ஆசிரியர் என பன்முகம் கொண்டவர்.  


== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
Line 12: Line 12:


== ஆசிரியப்பணி ==
== ஆசிரியப்பணி ==
1878 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம், ஏழாலையில் சைவப்பிரகாச வித்தியாசாலையை ஆசிரியராக பணியாற்றினார். அக்டோபர் 1, 1902 -ல்  வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையின் தலைமை ஆசிரியராகப் பொறுப்பெற்றார். இங்கு இவர் தமிழ் இலக்கண இலக்கியம், சைவ சித்தாந்தம், மற்றும் வடமொழி இலக்கண இலக்கியம் முதலியவற்றை கற்பித்தார்.
1878-ஆம் ஆண்டு யாழ்ப்பாணம், ஏழாலையில் சைவப்பிரகாச வித்தியாசாலையை ஆசிரியராக பணியாற்றினார். அக்டோபர் 1, 1902-ல்  வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையின் தலைமை ஆசிரியராகப் பொறுப்பெற்றார். இங்கு இவர் தமிழ் இலக்கண இலக்கியம், சைவ சித்தாந்தம், மற்றும் வடமொழி இலக்கண இலக்கியம் முதலியவற்றை கற்பித்தார்.
[[File:ஆத்திச்சூடி வெண்பா.png|thumb|ஆத்திசூடி வெண்பா]]
[[File:ஆத்திச்சூடி வெண்பா.png|thumb|ஆத்திசூடி வெண்பா]]


=== மாணவரர்கள் ===
===== மாணவர்கள் =====
* புன்னாலைக் கட்டுவன் சி. கணேசையர்
* புன்னாலைக் கட்டுவன் சி. கணேசையர்
* வித்துவான் சிவானந்தையர்  
* வித்துவான் சிவானந்தையர்  
Line 49: Line 49:
* மட்டக்களப்புப் புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை  
* மட்டக்களப்புப் புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை  


=== நண்பர்கள் ===
===== நண்பர்கள் =====
* ஊரெழு சு. சரவணமுத்துப்புலவர்
* ஊரெழு சு. சரவணமுத்துப்புலவர்
* மானிப்பாய் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை
* மானிப்பாய் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை
Line 64: Line 64:


== இறுதிக்காலம் ==
== இறுதிக்காலம் ==
1922 மார்ச்சு 23-ல்  வயிற்றுழைவு மற்றும் ஜுரத்தால் குமாரசாமிப்பிள்ளை காலமானார். புலவர் நோயுற்ற காலத்தில் அவரது மாணவராகிய பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை கவனித்துக் கொண்டார். சுடுகாட்டில் புலவரின் உடல் எரியூட்டப்பட்ட போது இரங்கற்பா பாடினார்.
மார்ச் 23, 1922-ல்  வயிற்றுழைவு மற்றும் ஜுரத்தால் குமாரசாமிப்பிள்ளை காலமானார். புலவர் நோயுற்ற காலத்தில் அவரது மாணவராகிய பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை கவனித்துக் கொண்டார். சுடுகாட்டில் புலவரின் உடல் எரியூட்டப்பட்ட போது இரங்கற்பா பாடினார்.


== நூல்கள் பட்டியல் ==
== நூல்கள் பட்டியல் ==
Line 94: Line 94:
* மிலேச்சமதவிகற்பகக் கும்மி (1888)
* மிலேச்சமதவிகற்பகக் கும்மி (1888)


====== மொழிபெயர்ப்புச் செய்யுள்கள் =====
=====மொழிபெயர்ப்புச் செய்யுள்கள் =====
* ஏகவிருத்தபாரதம் முதலியன (1896)
* ஏகவிருத்தபாரதம் முதலியன (1896)
* மேகதூதக் காரிகை (1896)
* மேகதூதக் காரிகை (1896)

Revision as of 07:54, 14 February 2022

அ. குமாரசுவாமிப் புலவர்

அ. குமாரசுவாமிப் புலவர் (ஜனவரி 18, 1854 - மார்ச் 23, 1922) இலங்கை தமிழ், சைவ அறிஞர். ஈழத்து சிற்றிலக்கியப் புலவர், பதிப்பாளர், உரையாசிரியர், ஆசிரியர் என பன்முகம் கொண்டவர்.

பிறப்பு, கல்வி

குமாரசாமி, யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் அம்பலவாணருக்கும் சிதம்பராம்மைக்கும் மகனாக ஜனவரி 18, 1854-ல் பிறந்தார். ஐந்து வயதில் வேதாரண்யம் நாமசிவாய தேசிகர் இவருக்கு ஏடு தொடங்கினார். மல்லாகம் ஆங்கிலப் பாடசாலையில் பயின்றார். சுன்னாகம் முருகேச பண்டிதரிடம் தமிழ் கல்வி பயின்றார். நாகநாத பண்டிதரை அணுகி வடமொழி கற்றார். நீதிசாரம், இராமோதந்தம், சாணக்கிய சதகம், முக்தபோதம், மாகம், இரகுவமிசம், சாகுந்தலம் முதலிய வடமொழி நூல்களைப் பயின்றார். நமசிவாய தேசிகரிடம் சைவசித்தாந்தம் மற்றும் சைவச் சான்றோர் வரலாறு முதலியவற்றை கற்றார்.

ஆசிரியர்கள்
  • அளவெட்டி கனகசபை
  • ஆறுமுக நாவலர்

தனிவாழ்க்கை

1892-ல் உடுவில் மயில்வாகனம், நாகமுத்தம்மையார் தம்பதியினரின் மகளாகிய சின்னாச்சியம்மையாரை மணந்தார். விசலாட்சியம்மையார் (1893-1925) என்னும் ஒரு மகளும், அம்பலவாணர் (1895-1974), முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை (1900-1987) என இரு மகன்களும் பிறந்தனர். மகன்கள் இருவரும் தமிழ்க் கல்வியில் பெரிதும் சிறந்து விளங்கி, யாழ்ப்பாணத்தில் பல பாடசாலைகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றினர். புலவரின் இளைய மைந்தர் சென்னை லயோலாக் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக 1930-1932-ல் பணியாற்றினார். மேலும் மைந்தர்கள் இருவரும் புலவரின் நூல்கள் மற்றும் முத்துகுமாரகவிராயர் நூல்கள் அனைத்தையும் பதிப்பித்தனர்.

ஆசிரியப்பணி

1878-ஆம் ஆண்டு யாழ்ப்பாணம், ஏழாலையில் சைவப்பிரகாச வித்தியாசாலையை ஆசிரியராக பணியாற்றினார். அக்டோபர் 1, 1902-ல் வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையின் தலைமை ஆசிரியராகப் பொறுப்பெற்றார். இங்கு இவர் தமிழ் இலக்கண இலக்கியம், சைவ சித்தாந்தம், மற்றும் வடமொழி இலக்கண இலக்கியம் முதலியவற்றை கற்பித்தார்.

ஆத்திசூடி வெண்பா
மாணவர்கள்
  • புன்னாலைக் கட்டுவன் சி. கணேசையர்
  • வித்துவான் சிவானந்தையர்
  • தெல்லிப்பழை பாலசுப்ரமணிய ஐயர்
  • தெல்லிப்பழை சுப்ரமணியபிள்ளை
  • இளவாலை க. சங்கரப்பிள்ளை
  • தெல்லிப்பழை நா. மயில்வாகனம்பிள்ளை
  • மாவிட்டபுரம் விசுவநாத முதலியார்
  • கையிட்டி பொன்னையர்
  • சுண்ணாகம் மாணிக்கதியாகராச பண்டிதர்
  • ஏழாலை வி. தம்பையாபிள்ளை
  • கொக்குவில் இளையதம்பிப்பிள்ளை
  • இளவாலை க. சங்கரப்பிள்ளை
  • கொக்குவில் சீ. முருகேசையர்
  • கந்தரோடை அ. கந்தையாப்பிள்ளை
  • வட்டுக்கோட்டை க. சிதம்பரநாதன்
  • வண்ணார்பண்ணை ஆ. சண்முகரத்தின ஐயர்
  • புன்னாலைக்கட்டுவன் சி. கணேசையர்
  • தென் கோவை ச. கந்தையாப் பண்டிதர்
  • உடுவில் வ. மு. இரத்தினேசுவர ஐயர்
  • உடுவில் மு. ஜகநாதையர்
  • காரைநகர் ச.பஞ்சாட்சர ஐயர்
  • இருபாலை சி. வேதாரணிய தேசிகர்
  • இருபாலை சி. தியாகராசபிள்ளை
  • தாவடி மு.பொன்னையாபிள்ளை
  • நாயன்மார்கட்டு செ. சிவசிதம்பரப்பிள்ளை
  • நீர்வேலி வி. மயில்வாகனப்பிள்ளை
  • தெல்லிப்பழை மேற்கு சி. கதிரிப்பிள்ளை
  • வேதாரணியம் தி அருணாசல தேசிகர்
  • சிறுப்பிட்டி த. கார்த்திகேயப்பிள்ளை
  • நல்லூர் க. குருமூர்த்தி சிவாசாரியார்
  • மட்டுவில் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை
  • மட்டக்களப்புப் புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை
நண்பர்கள்
  • ஊரெழு சு. சரவணமுத்துப்புலவர்
  • மானிப்பாய் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை
  • சுன்னாகம் மு. வைத்தியநாதபிள்ளை
  • நாகநாத பண்டிதர்
தமிழ்ப்புலவர் சரித்திரம்

இலக்கிய வாழ்க்கை

1886-ல் இதோபதேசம் நூலை மொழிபெயர்த்தார். வடமொழி நூல்கள் பலவற்றை தமிழில் மொழிபெயர்த்தார். குமாரசாமிப் புலவர் தொடக்கக் காலத்தில் இயற்றிய செய்யுள்கள், பதிகம், ஊஞ்சல், சிந்து, இரட்டைமணிமாலை, அட்டகம், கும்மி மற்றும் மொழிபெயர்ப்பு நூல்களாக விளங்கின.

சென்னை மாகாணத்தில் சாண்டிலர் தலைமையில் 1913-ல் செயல்பட்ட தமிழ் அகராதியின் மாதிரி நகலை யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்திற்கு அனுப்பினர். ஏப்ரல் 4, 1913-ல் குமாரசாமிப் பிள்ளை இதனை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்தார். அவர் சுட்டிக்காட்டப்பட்ட பிழைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. தனது வாழ்நாள் முழுவதும் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினராக விளங்கினார். அதன் சார்பாக பல கட்டுரைகள் எழுதினார். சொற்பொழிவுகள் பல ஆற்றினார்.

மதுரைத் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்த பொ. பாண்டித்துரைத் தேவர் அக்டோபர் 17, 1902-ல் குமாரசாமிப் பிள்ளையை சங்க உறுப்பினராக்கினார். சங்கத்தின் பத்திரிகையாகிய செந்தமிழுக்கு பல கட்டுரைகளை எழுதினார். 1923-ல் புலவரின் கடைசி நூலாகிய இராமோதந்தத்தை இச்சங்கம் பதிப்பித்தது.

இறுதிக்காலம்

மார்ச் 23, 1922-ல் வயிற்றுழைவு மற்றும் ஜுரத்தால் குமாரசாமிப்பிள்ளை காலமானார். புலவர் நோயுற்ற காலத்தில் அவரது மாணவராகிய பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை கவனித்துக் கொண்டார். சுடுகாட்டில் புலவரின் உடல் எரியூட்டப்பட்ட போது இரங்கற்பா பாடினார்.

நூல்கள் பட்டியல்

பதிகங்கள்
  • வதுளை கதிரேசன் பதிகம் (1884)
  • வதுளை மாணிக்கவிநாயகர் பதிகம் (1884)
  • மாவைப் பதிகம் (1892)
  • துணைவை அரசடி விநாயகர் பதிகம் (1894)
  • அமராவதி பூதூர் பாலவிநாயகர் பதிகம்(1897)
ஊஞ்சல்
  • வதுளைக் கதிரேசன் ஊஞ்சல் (1884)
  • கீரிமலை நகுலேசர் ஊஞ்சல் (1896)
  • ஏழாலை அத்தியடி விநாயகரூஞ்சல் (1897)
  • கைலாய பிள்ளையார் ஊஞ்சல் (1904)
  • கோப்பாய் வெள்ளெருவை விநாயகர் ஊஞ்சல் (1905)
  • விளிசிட்டி பொற்கலந்தம்பை பைரவர் ஊஞ்சல் (1912)
  • தெல்லிப்பழை தில்லையிட்டி அம்மன் ஊஞ்சல் (1915)
  • பன்னாலை வள்ளிமலை கந்தசுவாமி ஊஞ்சல் (1916)
  • அராலி முத்துமாரியம்மான் ஊஞ்சல் (1921)
வேறு சிற்றிலக்கிய நூல்கள்
  • வதுளைக் கதிரேசன் சிந்து (1884)
  • மாவையிரட்டை மணிமாலை (1896)
  • நகுலேசர் சதகம் (தசகம்) (1896)
  • அத்தியடி விநாயகர் அட்டகம் (1897)
கும்மி
  • மிலேச்சமதவிகற்பகக் கும்மி (1888)
மொழிபெயர்ப்புச் செய்யுள்கள்
  • ஏகவிருத்தபாரதம் முதலியன (1896)
  • மேகதூதக் காரிகை (1896)
  • சாணக்கிய நீதிவெண்பா (1914)
  • இராமோதந்தம் (1921)
வசன அல்லது உரைநடை நூல்கள்
  • திருக்கரைசைப் புராண பொழிப்புரை (1890)
  • சூடாமணி நிகண்டு முதல் தொகுதிப் பதப்பொருள் விளக்கம் (1896)
  • சூடாமணி நிகண்டு இரண்டாம் தொகுதிப் பதப்பொருள் விளக்கம் (1900)
  • சூடாமணி நிகண்டு முதலைந்து தொகுதிப் பதப்பொருள் விளக்கம் (1900)
  • இலக்கணசந்திரிகை (1897)
  • கண்ணகி கதை (1900)
  • யாப்பருங்கலப் பொழிப்புரை (1900)
  • இரகுவம்சக் கருப்பொருள் (1900)
  • வெண்பா பாட்டியல் பொழிப்புரை (1900)
  • கலைசைச் சிலேடை வெண்பா அரும்பதவுரை (1901)
  • நீதிநெறி விளக்கப் புத்துரை (1901)
  • மறைசையந்தாதி அரும்பதவுரை (1901)
  • தண்டியலங்கார புத்துரை (1903)
  • திருவாதவூரர் புராணப் புத்துரை (1904)
  • யாப்பருங்கலகாரிகைப் புத்துரை (1908)
  • முத்தகபஞ்சவிஞ்சதி குறிப்புரை (1909)
  • அகப்பொருள் விளக்க புத்துரை (1912)
  • வினைப்பகுபதவிளக்கம் (1913)
  • இலக்கியச் சொல்லகராதி (1915)
  • தமிழ்ப் புலவர் சரித்திரம் (1916)
  • இராமாயணம் பாலகாண்டம் அரும்பதவுரை (1918)
  • ஏரேழுபது பொழிப்புரை (1920)
  • இதோபதேசம் (1920)
  • கல்வளையந்தாதி பதவுரை (1921)
  • சிசுபாலசரிதம் (1921)
  • இரகுவமிச சரிதாமிர்தம் (1922)
பதிப்பித்த நூல்கள்
  • இதோபதேசம் (1886)
  • நகுலமலைக் குறவஞ்சி நாடகம் (1895)
  • யாப்பருங்கலக்காரிகை பழையவுரை (1900)
  • ஆசாரக்கோவை (1900)
  • நான்மணிக்கடிகை (1900)
  • சிவசேத்திர விளக்கம் (1901)
  • உரிச்சொனிகண்டு (1902)
  • திருவாதவூரர் புராணமுலம் (1902)
  • பழமொழி விளக்கம் (1903)
  • சதாசாரக்கவித்திரட்டு (1901)
  • சிவத்தோத்திரக்கவித்திரட்டு (1911)
  • ஆத்திசூடி வெண்பா (1901)

உசாத்துணை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.