அ.ச.ஞானசம்பந்தன்

From Tamil Wiki
Revision as of 18:24, 15 March 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|அ.ச.ஞானசம்பந்தன் அ.ச.ஞானசம்பந்தன் ( ) தமிழறிஞர், சைவ அறிஞர். புகழ்பெற்ற மேடைப்பேச்சாளராகவும் மரபிலக்கிய ஆய்வாளராகவும் திகழ்ந்தார். == பிறப்பு கல்வி == அ. ச. ஞ...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
அ.ச.ஞானசம்பந்தன்

அ.ச.ஞானசம்பந்தன் ( ) தமிழறிஞர், சைவ அறிஞர். புகழ்பெற்ற மேடைப்பேச்சாளராகவும் மரபிலக்கிய ஆய்வாளராகவும் திகழ்ந்தார்.

பிறப்பு கல்வி

அ. ச. ஞானசம்பந்தன் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கல்லணைக்கருகில் உள்ள அரசன்குடி என்ற ஊரில் புகழ்பெற்ற தமிழறிஞரான அ. மு. சரவண முதலியார் மற்றும் சிவகாமி இணையருக்கு பிறந்தார். அவரது தந்தை அ.மு.சரபண முதலியார் திருவிளையாடல் புராணத்திற்கு உரையெழுதியவர். அ..ச.ஞானசம்பந்தன் தந்தையிடம் தொடக்க கல்வியை பெற்றார். பின்னர் லால்குடி போர்டு உயர்நிலைப் பள்ளியில் உயநிலைக் கல்வி முடித்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பாடத்தில் இண்டர்மீடியட் படித்தார். அண்ணாமலைப் பல்கலையில் தமிழ்ப் பேராசிரியராக இருந்த நாவலர் சோமசுந்தர பாரதியார் அவரது தமிழ் அறிவை அடையாளம் கண்டு அவரை இயற்பியலில் இருந்து தமிழுக்கு மாறும்படி செய்தார். அக்கல்லூரியில் படிக்கும் போது வி.எஸ்.ஸ்ரீனிவாச சாஸ்திரி , திரு.வி. கல்யாணசுந்தர முதலியார், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் போன்ற தமிழ் அறிஞர்களின் தொடர்பு கிடைத்தது. அண்ணாமலை பல்கலையில் தமிழில் இளங்கலையும் முதுகலையும் பயின்றார்

தனிவாழ்க்கை

தமிழில் முதுகலைப் பட்டம் பெற்று 1942ல் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக வேலையில் சேர்ந்தார். அக்கல்லூரியில் 1956 வரை வேலை பார்த்தார்.

நூல்கள்

அ.ச.ஞானசம்பந்தனின் எல்லா நூல்களும் நாட்டுடைமையாக்கப்பட்டு இணையநூலகத்தில் கிடைக்கின்றன. இணைப்பு

உசாத்துணை