அ.சே.சுந்தரராஜன்

From Tamil Wiki
Revision as of 22:54, 18 March 2022 by Thirumalai.p (talk | contribs) (அ.சே.சுந்தரராஜன்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

அ.சே.சுந்தரராஜன் (1899) (பேராசிரியர் அன்பில் சே. சுந்தரராஜன்) என்ற இவர் கம்ப ராமாயண அறிஞராக அறியப்படுகிறார். இவர் கம்ப ராமாயணத்திற்கு அகராதி ஒன்றை தொகுத்து அளித்தார்.

வாழ்க்கை குறிப்பு

பிறப்பு,கல்வி

இவர் திருச்சிக்கு அருகில் உள்ள அன்பில் என்ற ஊரில் 1899 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் திருச்சியில் உள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரியில் வரலாற்றுப்பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

இவர் யாழ்ப்பாணத்தில் இராமநாத வள்ளல் நிறுவிய பரமேஸ்வரன் கல்லூரி, இராமநாதன் கல்லூரி ஆகிய இரு கல்லூரிகளில் தமிழாசிரியராக 1922 ஆம் வருடம் முதல் 22 ஆண்டுகள் பணிபுரிந்தார்.

இவருடைய நூல்கள் சென்னை, அண்ணாமலை மற்றும் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் பாடமாக இருந்தன.

பங்களிப்பு

இவர் கம்ப ராமாயணத்திற்கு அகராதி ஒன்றை கம்ப ராமாயண அகராதி (1-5) என்ற பெயரில் தொகுத்து வெளியிட்டார். இந்த நூல் 1978 பிறகு மறுபதிப்பு காணவில்லை.

இவர் எழுதி வெளியிட்ட நூல்கள்

உசாத்துணை