அ.அ.மணவாளன்

From Tamil Wiki
Revision as of 21:47, 12 March 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "ஏ. ஏ. மணவாளன் (1937–2018) தமிழறிஞர். இந்தி, ஆங்கிலம் மொழிகளில் பயிற்சி கொண்டவர். மரபிலக்கியங்களை பதிப்பிப்பது, உரை எழுதுவது அகியவற்றில் ஈடுபட்டிருந்தார். == பிறப்பு, கல்வி == File:அ.அ.மணவாள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ஏ. ஏ. மணவாளன் (1937–2018) தமிழறிஞர். இந்தி, ஆங்கிலம் மொழிகளில் பயிற்சி கொண்டவர். மரபிலக்கியங்களை பதிப்பிப்பது, உரை எழுதுவது அகியவற்றில் ஈடுபட்டிருந்தார்.

பிறப்பு, கல்வி

அ.அ.மணவாளன் பாராட்டு

தனிவாழ்க்கை

அ.அ.மணவாளானுக்கு சரசுவதி என்ற மனைவியும், சீனிவாசன் (46) ஜகன்மோகன் (45) என்ற மகன்களும், பிருந்தா (52) என்ற மகளும் உள்ளனர்.

மில்டன் மற்றும் கம்பனில் இதிகாசக் கதாநாயகத்துவம் என்ற தலைப்பில் ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

இலக்கியவாழ்க்கை

உலகத்தமிழ் இலக்கிய வரலாறு- கி.பி 901 முதல் கி.பி.1300 வரை (2006), இருபதாம் நூற்றாண்டின் இலக்கியக் கோட்பாடுகள் (1994) என்ற இரண்டு நூல்களையும் எழுதியுள்ளார். சாகித்திய அகாடெமிக்காகத் தமிழ்ப் பக்தி இலக்கியம்(2004) என்னும் பெருந்தொகை நூல் ஒன்றைத் தொகுத்து அவற்றை வாசிப்பதற்கான முன்னுரையையும் வழங்கியிருக்கிறார்

கே.கே.பிர்லா அமைப்பு வழங்கும் உயரிய இலக்கிய விருதான சரஸ்வதி சம்மான் விருது 2005ல் இவர் எழுதிய 'ராமகாதையும் ராமாயணங்களும்" என்ற ஆராய்ச்சித் தொகுப்பு நூலுக்காக வழங்கப்பட்டது. அந்த நூல் உலகம் முழுதும் வழங்கும் 48 ராமாயணங்கள் குறித்த ஆராய்ச்சித் தொகுப்பு. பாலி, சம்ஸ்கிருதம், பிராக்ருதம், திபெத்தியன், தமிழ், பழைய ஜாவா மொழி, ஜப்பானிய மொழி, தெலுங்கு, அஸாமி, தாய் மற்றும் காஷ்மீரி ஆகியவற்றில் வழங்கப்படும் ராமாயணக் கதைகளுடன் ஒப்பிட்டுப் படைக்கப்பட்டது அந்த நூல்.

மறைவு

அ.அ.மணவாளன் 1 டிசம்பர் 2018 அன்று மறைந்தார்.

உசாத்துணை