அவிநயம்

From Tamil Wiki
Revision as of 11:27, 10 February 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with " = அவிநயம் = <nowiki>https://ta.wikipedia.org/s/1922</nowiki> கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. Jump to navigationJump to search '''அவிநயம்''' என்பது கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஒரு தமிழ் இலக்கண நூல் ஆகும்....")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

அவிநயம்

https://ta.wikipedia.org/s/1922

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. Jump to navigationJump to search அவிநயம் என்பது கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஒரு தமிழ் இலக்கண நூல் ஆகும். இதனைக் கி.பி. ஆறாம் நூற்றாண்டு நூல் எனவும் குறிப்பிடுகின்றனர்.  இந்த நூல் அவிநாயனார் என்று அறியப்படும் புலவரால் எழுதப்பட்டது. இந்தப் புலவரின் பெயர் அவிநயம் என்னும் நூல் எழுதியதால் உருவாக்கப்பட்டதாக எண்ண இடம் தருகிறது. இடைக்காலத்தில் பல்லவர் காலத்தில் தோன்றிய நூல் இதுவாகும்.

தொல்காப்பியம், இறையனார் களவியல், யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை, வீரசோழியம், நன்னூல், களவியற் காரிகை, புறப்பொருள் வெண்பாமாலை, பன்னிரு பாட்டியல் என்னும் நூல்களுக்கு எழுதப்பட்ட உரைநூல் மேற்கோள்களிலிருந்து திரட்டப்பட்டவை. இதனை முதன்முதலில் திரட்டியவர் மயிலை சீனி வேங்கடசாமி.

இந்த நூலுக்கு இராச பவித்திரப் பல்லவதரையன் என்ற உரையாசிரியர் உரை எழுதி உள்ளார்.

அவிநயம், அவிநயப் புறனடை, அவிநயனார் பாட்டியல், அவிநயனார் புறத்திணைப்படலம் என நான்காகப் பிரிக்கப்பட்டு அவிநயம் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றது. எழுத்த்திகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம், யாப்பதிகாரம், அவிநயப் புறனடை, அவிநயனார் பாட்டியல் எனவும் இதனைப் பகுத்துக் காட்டியுள்ளனர்.

வெளி இணைப்புகள்[தொகு]

  • அவிநயம்

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. ↑ சுப்பிரமணியன், முனைவர் ச. வே., தமிழ் இலக்கண நூல்கள், மூலம் முழுவதும், குறிப்பு விளக்கங்களுடன், மெய்யப்பன் பதிப்பகம், 2007, பக்கம் 10 மற்றும் 95
  2. ↑ க. ப. அறவாணன் பதிப்பு