being created

அழ.வள்ளியப்பா: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 10: Line 10:
1941 -ல் ''சக்தி'' பத்திரிகையில் இருந்து விலகி இந்தியன் வங்கியில் சேர்ந்தார். வங்கிப் பணியிலிருந்தவாறு கவிதையும் கட்டுரையும் எழுதத் தொடங்கியவர் 1982 -நவம்பரில் வங்கிப் பணியிலிருந்து ஓய்வு பெறும் வரை எழுதினார். ஓய்வுக்குப் பின்பும் எழுதிக் கொண்டுதான் இருந்தா
1941 -ல் ''சக்தி'' பத்திரிகையில் இருந்து விலகி இந்தியன் வங்கியில் சேர்ந்தார். வங்கிப் பணியிலிருந்தவாறு கவிதையும் கட்டுரையும் எழுதத் தொடங்கியவர் 1982 -நவம்பரில் வங்கிப் பணியிலிருந்து ஓய்வு பெறும் வரை எழுதினார். ஓய்வுக்குப் பின்பும் எழுதிக் கொண்டுதான் இருந்தா


''சக்தி'' பத்திரிகையில்  பணியாற்றிய போது வள்ளியம்மை என்பாரைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகனும், நான்கு மகள்களும் உள்ளனர்.
''சக்தி'' பத்திரிகையில்  பணியாற்றிய போது வள்ளியம்மை என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், நான்கு மகள்களும் உள்ளனர்.


== இலக்கியவாழ்க்கை ==
== இலக்கியவாழ்க்கை ==
Line 20: Line 20:


== இலக்கிய இடம் ==
== இலக்கிய இடம் ==
தமிழ் குழந்தை இலக்கியத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களையும், 55க்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியுள்ளார். எளிய வார்த்தைகளும், ஓசை நயத்துடனும் குழந்தை இலக்கியங்கள் படைத்தவர்.
தமிழ் குழந்தை இலக்கியத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களையும், 55க்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியுள்ளார். எளிய வார்த்தைகளுடனும், ஓசை நயத்துடனும் குழந்தை இலக்கியங்கள் படைத்தவர்.


தலைமுறைகள் தாண்டினாலும் மாறாத குழந்தைகளின் மனநிலையை புரிந்து கொண்டு அவர் எழுதிய பாடல்கள்,
தலைமுறைகள் தாண்டினாலும் மாறாத குழந்தைகளின் மனநிலையை புரிந்து கொண்டு அவர் எழுதிய பாடல்கள்,
Line 133: Line 133:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==


* <nowiki>https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B4._%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE</nowiki>
* https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B4._%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE
* <nowiki>https://www.jeyamohan.in/34376/</nowiki>
* https://www.jeyamohan.in/34376/
* <nowiki>http://krktnpscnotes.blogspot.com/2014/03/blog-post_27.html</nowiki>
* http://krktnpscnotes.blogspot.com/2014/03/blog-post_27.html
* <nowiki>http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=3211</nowiki>
* http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=3211


{{being created}}
{{being created}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 21:43, 3 March 2022

அழ.வள்ளியப்பா
அழ.வள்ளியப்பா

அழ. வள்ளியப்பா (நவம்பர் 7, 1922 - மார்ச் 16, 1989) குழந்தை இலக்கியங்கள் படைத்தவர். 2,000 க்கும் மேலான குழந்தைகளுக்கான பாடல்கள் எழுதி “குழந்தைக் கவிஞர்” என்று அழைக்கப்பட்டவர்.

பிறப்பு, இளமை

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இராயவரம் என்னும் சிற்றூரில் 1922ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய பெற்றோர் அழகப்ப செட்டியார் – உமையாள் ஆச்சி. உள்ளூரில் சு.கதி. காந்தி ஆரம்பப் பாடசாலையில் ஐந்தாம் வகுப்பு வரையில் பயின்றார். பிறகு ராமச்சந்திரபுரத்திலுள்ள ஸ்ரீ பூமீஸ்வரசுவாமி உயர்நிலைப் பள்ளியில் 11வது வகுப்பு வரையில் படித்தார்.

தனி வாழ்க்கை

1940 ஆம் ஆண்டில் வை. கோவிந்தனின் சென்னை சக்தி பத்திரிகை அலுவலகத்தில் காசாளராகச் சேர்ந்தார். அப்போது சக்தி ஆசிரியராக இருந்த தி. தி. ஜ. ரங்கநாதனின் ஊக்குவிப்பின் காரணமாக சக்தி இதழிலேயே எழுத ஆரம்பித்தார். "ஆளுக்குப் பாதி" என்னும் தம் முதல் கதையை எழுதினார்.

1941 -ல் சக்தி பத்திரிகையில் இருந்து விலகி இந்தியன் வங்கியில் சேர்ந்தார். வங்கிப் பணியிலிருந்தவாறு கவிதையும் கட்டுரையும் எழுதத் தொடங்கியவர் 1982 -நவம்பரில் வங்கிப் பணியிலிருந்து ஓய்வு பெறும் வரை எழுதினார். ஓய்வுக்குப் பின்பும் எழுதிக் கொண்டுதான் இருந்தா

சக்தி பத்திரிகையில் பணியாற்றிய போது வள்ளியம்மை என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், நான்கு மகள்களும் உள்ளனர்.

இலக்கியவாழ்க்கை

செய்தித்தாள் ஆசிரியராக தனது இலக்கிய வாழ்வை தொடங்கினார். பாலர் மலர், டமாரம், சங்கு ஆகிய செய்தித் தாள்களுக்கு கௌரவ ஆசிரியராகப் பணியாற்றினார். 1951 முதல் 1954 வரை பூஞ்சோலை என்ற இதழுக்கும், ஓய்வு பெற்ற பின் 1983 முதல் 1987 வரை, கல்கி வெளியீடான கோகுலம் என்ற இதழிலும் ஆசிரியராக இருந்தார்.

வள்ளியப்பாவின் 23 பாடல்கள் கொண்ட முதல் கவிதைத் தொகுதி “மலரும் உள்ளம்” 1944 ஆம் ஆண்டு வெளிவந்தது.

1950 -ல் குழந்தை எழுத்தாளர்கள் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார். சக்தி வை.கோவிந்தன் இச்சங்கத்தின் முதல் தலைவராக இருந்தார். அவரைத் தொடர்ந்து வள்ளியப்பா இந்த அமைப்பின் காரியதரிசியாகவும், தலைவராகவும், வழிகாட்டியாகவும் பல பொறுப்புகளை ஏற்றுச் செயல்பட்டார். காரைக்குடி குழந்தை எழுத்தாளர் சங்கத் தலைவராகப் பொறுப்புவகித்தார்.

இலக்கிய இடம்

தமிழ் குழந்தை இலக்கியத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களையும், 55க்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியுள்ளார். எளிய வார்த்தைகளுடனும், ஓசை நயத்துடனும் குழந்தை இலக்கியங்கள் படைத்தவர்.

தலைமுறைகள் தாண்டினாலும் மாறாத குழந்தைகளின் மனநிலையை புரிந்து கொண்டு அவர் எழுதிய பாடல்கள்,

'அம்மா இங்கே வா... வா...

ஆசை முத்தம் தா... தா...’


' மாம்பழமாம் மாம்பழம்...

மல்கோவா மாம்பழம்...'


'கைவீசம்மா கை வீசு...

கடைக்கு போகலாம் கை வீசு...'

விருதுகள்

  • 1963 ஆம் ஆண்டில் இலக்னோ நடைபெற்ற அகில இந்திய குழந்தை எழுத்தாளர் மாநாட்டில் பதக்கமும் பாராட்டிதழும் வழங்கப்பட்டன.
  • குழந்தைகள் இலக்கிய முன்னோடி, பிள்ளைக் கவியரசு, மழலைக் கவிச் செம்மல் என்று சில அமைப்புகள் பாராட்டி போற்றியுள்ளனர்.
  • 1982 -ல் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தினால் "தமிழ்ப் பேரவைச் செம்மல்" என்று விருதளிக்கப்பட்டு பாராட்டப்பட்டார்.
  • 1982ஆம் ஆண்டில் மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்விக்குழுவில் வாழ்நாள் உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.
  • 1970 நவம்பர் 22ஆம் நாள் "குழந்தைக்கவிஞர் இலக்கியப்பணி" வெள்ளிவிழா சென்னையில் நடைபெற்றது.
  • பூவண்ணன் தலைமையில் இயங்கிய பாலர் பண்பாட்டுக்கழகம் 1980ஆம் ஆண்டில் 'வள்ளியப்பா வானொலி-தொலைக்காட்சிச் சிறுவர் சங்கம்' என்னும் பிரிவைத் தொடங்கியது.
  • 'பிள்ளைக்கவியரசு' என்னும் பட்டத்தை சென்னை பாரதி இளைஞர் சங்கம் வழங்கியது.
  • 'மழலைக்கவிச்செம்மல்' என்னும் பட்டத்தை காரைக்குடி சர்வதேசக் குழந்தைகள் ஆண்டுவிழாக்குழு வழங்கியது.

படைப்புகள்

நூல்கள்

அழ. வள்ளியப்பா 11 பாடல் தொகுதிகள், 12 புதினங்கள், 9 கட்டுரை நூல்கள், 1 நாடகம், 1 ஆய்வு நூல், 2 மொழிபெயர்ப்பு நூல்கள், 1 தொகுப்பு நூல் ஆகியவற்றை வெளியிட்டுள்ளார்.

  • அம்மாவும் அத்தையும்
  • இனிக்கும் பாடல்கள் (பாடல்); இ.பதி. செப்டம்பர் 1991; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை; 27 பாடல்கள்
  • ஈசாப் கதைப் பாடல்கள் - முதல் தொகுதி (பாடல்) குழந்தைகள் புத்தக நிலையம், சென்னை-40;
  • ஈசாப் கதைப் பாடல்கள் - இரண்டாம் தொகுதி (பாடல்) குழந்தைகள் புத்தக நிலையம், சென்னை-40;
  • ஈசாப் கதைப் பாடல்கள் (பாடல்); முழுயான தொகுப்பு; 1987 சனவரி; குழந்தைகள் புத்தக நிலையம், சென்னை-40; 38 பாடல்கள்
  • உமாவின் பூனைக் குட்டி
  • எங்கள் கதையைக் கேளுங்கள் (விலங்கியற் கட்டுரைகள்); மு.பதி 1962; இ.பதி 1967 மார்ச்; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை; 10 விலங்குகள் தங்களது கதையைத் தாங்களே கூறுகின்றன.
  • எங்கள் பாட்டி
  • கதை சொன்னவர் கதை - நூல் 1 (வரலாறு); 1962 மே; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை; கதைஞர்கள் 4 வரலாறு
  • கதை சொன்னவர் கதை - நூல் 2 (வரலாறு); 1962 மே; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை; கதைஞர்கள் 4 வரலாறு
  • கதை சொன்னவர் கதை - நூல் 3 (வரலாறு); 1962 மே; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை; கதைஞர்கள் 4 வரலாறு
  • குதிரைச் சவாரி (நெடுங்கதை); ஏப்ரல் 1978; பழநியப்பா பிரதர்ஸ், சென்னை;
  • குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள் முதல் தொகுதி (பாடல்): 1962; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை; 50 பாடல்கள்
  • குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள் இரண்டாம் தொகுதி (பாடல்); 1962; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை;
  • குழந்தைக் கவிஞரின் வேடிக்கைப் பாடல்கள்; 1962
  • குழந்தைக்குரல் (பாடல்) தமிழ்நிலையம், புதுக்கோட்டை; பாடல்கள்
  • கேள்வி நேரம்
  • சிட்டுக் குருவி (பாடல்); 1949 ஜனவரி; தமிழ்நிலையம், புதுக்கோட்டை; 16 பாடல்கள்
  • சிரிக்கும் பூக்கள் (பாடல்); 1986; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை; 110 பாடல்கள்
  • சின்னஞ்சிறு பாடல்கள் (பாடல்); 6ஆம் பதிப்பு 1992; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை; 26 பாடல்கள்
  • சின்னஞ்சிறு வயதில் (வரலாறு), , குழந்தைப் புத்தக நிலையம், சென்னை; 38பேர்களின் இளமைக்கால அனுபவங்கள்; தமிழ்நாடு அரசினர் பரிசுபெற்றது.
  • சுதந்திரம் பிறந்த கதை (வரலாறு)
  • சோனாவின் பயணம் (கதை)
  • திரும்பி வந்த மான் குட்டி (கதை)
  • நமது நதிகள்: தென்னாட்டு ஆறுகள் (புவியியல்), தேசிய புத்தக டிரஸ்ட், புதுதில்லி. 14 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.
  • நல்ல நண்பர்கள் (கதை); பழனியப்பா பிரதர்ஸ், சென்னை; தமிழ்நாடு அரசின் பரிசுபெற்றது
  • நான்கு நண்பர்கள்: பஞ்சதந்திரக் கதைகள் (கதை); 1962 நவம்பர் 14; எஸ்.ஆர்.சுப்பிரமணியபிள்ளை, திருநெல்வேலி;
  • நீலா மாலா (கதை); 1977 ஆகஸ்ட்; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை
  • நேரு தந்த பொம்மை (பாடல்கள்); 1977 நவம்பர் 14; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை; 21 பாடல்கள்
  • நேருவும் குழந்தைகளும் (வாழ்க்கை வரலாறு); 1963;
  • பர்மா ரமணி (கதை); 1969; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை
  • பாப்பாவுக்குப் பாட்டு (பாடல் தொகுதி); தமிழ்நாடு அரசின் பரிசுபெற்றது
  • பாட்டிலே காந்தி கதை (பாடல் வரலாறு); 1968 அக்டோபர்; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை; இந்திய ஒன்றிய அரசின் பரிசு பெற்றது
  • பாட்டுப் பாடுவோம் (பாடல்); 1998 ஏப்ரல்; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை; 12 பாடல்கள்
  • பாடிப் பணிவோம் (பாடல்); அக்டோபர் 1979; செல்வி பதிப்பகம், காரைக்குடி; 23 பக்திப்பாடல்கள்
  • பாலர் பாடல் (பாடல்); 1947 ஆகஸ்ட்; தமிழ்நிலையம், புதுக்கோட்டை; 18 பாடல்கள்
  • பிள்ளைப் பருவத்திலே! (வரலாறு); 1968; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை; 29 பெரியோர்களைப் பற்றிய கட்டுரைகள்; தமிழ்நாடு அரசின் பரிசுபெற்றது
  • பெரியோர் வாழ்விலே முதல் தொகுதி (வரலாறு); 1955; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை; எழுவர் வாழ்க்கை நிகழ்ச்சியைப் பற்றிய கட்டுரைகள்; தமிழ்நாடு அரசின் பரிசுபெற்றது
  • பெரியோர் வாழ்விலே இரண்டாம் தொகுதி (வரலாறு); குழந்தைப் புத்தக நிலையம், சென்னை; ஐவர் வாழ்க்கை நிகழ்ச்சியைப் பற்றிய கட்டுரைகள்
  • மணிக்கு மணி
  • மலரும் உள்ளம் முதல் தொகுதி (பாடல்), 1944 முதற்பதிப்பு; பழனியப்பா பிரதர்ஸ், சென்னை; 23 பாடல்கள் கொண்டது,
  • மலரும் உள்ளம் முதல் தொகுதி (பாடல்), 1954 இரண்டாம்பதிப்பு; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை; 135 பாடல்கள் கொண்டது; இந்திய ஒன்றியம்; தமிழ்நாடு அரசுகளின் பரிசு பெற்றது.
  • மலரும் உள்ளம் இரண்டாம் தொகுதி (பாடல்), 1961; குழந்தைப் புத்தக நிலையம், சென்னை; 117 பாடல்கள்
  • மல்லிகை (பாடல்)
  • மிருகங்களுடன் மூன்று மணி
  • மூன்று பரிசுகள்
  • ரோகந்தாவும் நந்திரியாவும்
  • ரோஜாச் செடி (கதை); மூன்றாம் பதிப்பு 1968 மே; ஸ்டார் பிரசுரம், சென்னை
  • வளர்ந்து வரும் குழந்தை இலக்கியம், 1979, வானதி பதிப்பகம், சென்னை
  • வாழ்க்கை விநோதம்
  • விடுகதை விளையாட்டு
  • வித்தைப் பாம்பு (மொழிபெயர்ப்புக் கதை)
  • வெளிநாட்டு விடுகதைகள்
  • வேட்டை நாய்
தொகுத்த நூல்கள்
  • கேள்வி நேரம்: பெரியோரின் கேள்விகளும் பிள்ளைகளின் பதில்களும்; 1988 ஏப்ரல்; தமிழ்நிலையம், புதுக்கோட்டை
பதிப்பித்த நூல்கள்
  • நிமிஷக் கதைகள்; தமிழ்நிலையம், புதுக்கோட்டை.
  • பாலர் கதைகள் (3ஆம் பதிப்பு); தமிழ்நிலையம், புதுக்கோட்டை
மொழிபெயர்த்த நூல்கள்
  • ரோகந்தாவும் நந்திரியாவும் (கதை); மூல ஆசிரியர்: கிருஷ்ண சைதன்யா; முதற்பதிப்பு 1972, நேஷனல் புக் டிரஸ்ட், சென்னை.
  • எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள் (கதைகள்); மூல ஆசிரியர்: சாந்தா ரங்காச்சாரி; முதற்பதிப்பு 1977; நேஷனல் புக் டிரஸ்ட், சென்னை.
சொற்பொழிவுகள்
  • 1979 -ல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் கல்கி அறக்கட்டளை நிகழ்வில் "வளர்ந்து வரும் குழந்தை இலக்கியம்" என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.
  • 1981 -ல் 5வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் "வளர்ந்து வரும் குழந்தை இலக்கியம்" என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.
வாழ்க்கை வரலாறு

அழ. வள்ளியப்பாவின் வாழ்க்கை வரலாற்றை அவரது மணிவிழா ஆண்டில் "குழந்தைக்கவிஞர் வள்ளியப்பா (வாழ்க்கை வரலாறு) என்னும் நூலை முனைவர் பூவண்ணன் எழுதினார். அதனை 1982 நவம்பரில் வானதி பதிப்பகம் வெளியிட்டது.

உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.