அழகியல் விலக்கம்

From Tamil Wiki
Revision as of 09:32, 16 September 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "அழகியல் விலக்கம் (Aesthetic distance ) (முருகியல் அயன்மை). ஓர் கலைப்படைப்பை அதன் அழகியல் செல்வாக்குக்கு ஈடுபடாமல் விலக்கம் கொண்டு நின்று அணுகுவது. அழகியல் சார்ந்து உருவாகும் உணர்வுநிலைகள்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

அழகியல் விலக்கம் (Aesthetic distance ) (முருகியல் அயன்மை). ஓர் கலைப்படைப்பை அதன் அழகியல் செல்வாக்குக்கு ஈடுபடாமல் விலக்கம் கொண்டு நின்று அணுகுவது. அழகியல் சார்ந்து உருவாகும் உணர்வுநிலைகள் கலைப்படைப்பை ஒற்றைப்படையாக பார்க்கச் செய்கின்றன என்றும், கலைப்படைப்பை சமநிலையுடன் முழுமையாக அணுக அதில் இருந்து ஒரு விலக்கம் வாசகனுக்குத் தேவை என்றும் இந்தக் கொள்கை வாதிடுகிறது. ஒரு கலைப்படைப்பை அணுகும் வாசகன் அல்லது ரசிகன் அது உருவாக்குவது ஒரு புனைவு சார்ந்த உலகம் என்ற தெளிவுடன் தான் வாழும் உலகையும் தன் அகவுலகையும் அதில் இருந்து விலக்கி வைத்துக்கொள்ளவேண்டும் என்று இது கூறுகிறது.

பார்க்க அ

தோற்றம்

அமெரிக்க புதுத்திறனாய்வு அணுகுமுறையின் குறிப்பிடத்தக்க கொள்கைகளில் ஒன்று இது. இம்மானுவேல் காண்டின்(Immanuel Kant) விமர்சன மதிப்பீடு (Critique of Judgement) என்னும் கருத்தில் இருந்து பிறந்தது. ஒன்றை அடையவோ நுகரவோ விருப்பம் இல்லா நிலையில் அதில் இருந்து மகிழ்வையும் நிறைவையும் அடைதல் என அதை காண்ட் வரையறை செய்தார். அதுவே தூய அழகியல் அனுபவம் என்றார்.

அழகியல் விலக்கம் என்னும் சொல்லாட்சி இலக்கிய விமர்சகர் எட்வர்ட் பல்லோ (Edward Bullough) 1912ல் எழுதிய ஒரு கட்டுரையில் இருந்து தொடங்குகிறது. ஒரு படகில் இருக்கும் பயணி கடல்மேல் பனிமண்டலம் கவிவதை கண்டு அச்சமுற்றால் அவனால் அதை ரசிக்க முடியாது. அவன் அருகே ஒரு தீவில் இருந்து அதைப் பார்த்தால் ரசிக்க முடியும். ஆகவே படைப்பு உருவாக்கும் உணர்வுநிலையை தனிப்பட்ட உணர்வுநிலையுடன் இணைத்துக்கொண்டால் அதை ரசிக்கமுடியாது என்றும், அந்த தனிப்பட்ட உணர்வுநிலைகள் ரசனை சார்ந்தவை அல்ல என்றும் பல்லோ வாதிட்டார்.

இலக்கியத்தில் அழகியல் விலக்கம்

அழகியல் விலக்கம் நவீனத்துவ எழுத்தாளர்களில் ஆழமான செல்வாக்கைச் செலுத்தியது.


இது அழகியல் சார்புணர்வு ( ) கொள்கைக்கு நேர் எதிரானது.