under review

அழகியல் விலக்கம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Corrected error in line feed character)
 
(One intermediate revision by the same user not shown)
Line 2: Line 2:
== தோற்றம் ==
== தோற்றம் ==
[[அமெரிக்க புதுத்திறனாய்வு]] அணுகுமுறையின் குறிப்பிடத்தக்க கொள்கைகளில் ஒன்று இது. இம்மானுவேல் காண்டின்(Immanuel Kant) விமர்சன மதிப்பீடு (Critique of Judgement) என்னும் கருத்தில் இருந்து பிறந்தது. ஒன்றை அடையவோ நுகரவோ விருப்பம் இல்லா நிலையில் அதில் இருந்து மகிழ்வையும் நிறைவையும் அடைதல் என அதை காண்ட் வரையறை செய்தார். அதுவே தூய அழகியல் அனுபவம் என்றார். (பார்க்க [[அழகியல்]])  

அழகியல் விலக்கம் என்னும் சொல்லாட்சி இலக்கிய விமர்சகர் எட்வர்ட் பல்லோ (Edward Bullough) 1912-ல் எழுதிய ஒரு கட்டுரையில் இருந்து தொடங்குகிறது. ஒரு படகில் இருக்கும் பயணி கடல்மேல் பனிமண்டலம் கவிவதை கண்டு அச்சமுற்றால் அவரால் அதை ரசிக்க முடியாது. அவர் அருகே ஒரு தீவில் இருந்து அதைப் பார்த்தால் ரசிக்க முடியும். ஆகவே படைப்பு உருவாக்கும் உணர்வுநிலையை தனிப்பட்ட உணர்வுநிலையுடன் இணைத்துக்கொண்டால் அதை ரசிக்கமுடியாது என்றும், அந்த தனிப்பட்ட உணர்வுநிலைகள் ரசனை சார்ந்தவை அல்ல என்றும் பல்லோ வாதிட்டார்.

== இலக்கியத்தில் அழகியல் விலக்கம் ==
== இலக்கியத்தில் அழகியல் விலக்கம் ==

Latest revision as of 20:09, 12 July 2023

அழகியல் விலக்கம் (Aesthetic distance ) (முருகியல் அயன்மை). ஒரு கலைப்படைப்பை அதன் அழகியல் செல்வாக்குக்கு ஈடுபடாமல் விலக்கம் கொண்டு நின்று அணுகுவது. அழகியல் சார்ந்து உருவாகும் உணர்வுநிலைகள் கலைப்படைப்பை ஒற்றைப்படையாக பார்க்கச் செய்கின்றன என்றும், கலைப்படைப்பை சமநிலையுடன் முழுமையாக அணுக அதில் இருந்து ஒரு விலக்கம் வாசகனுக்குத் தேவை என்றும் இந்தக் கொள்கை வாதிடுகிறது. ஒரு கலைப்படைப்பை அணுகும் வாசகர் அல்லது ரசிகர் அது உருவாக்குவது ஒரு புனைவு சார்ந்த உலகம் என்ற தெளிவுடன் தான் வாழும் உலகையும் தன் அகவுலகையும் அதில் இருந்து விலக்கி வைத்துக்கொள்ளவேண்டும் என்று இது கூறுகிறது.

தோற்றம்

அமெரிக்க புதுத்திறனாய்வு அணுகுமுறையின் குறிப்பிடத்தக்க கொள்கைகளில் ஒன்று இது. இம்மானுவேல் காண்டின்(Immanuel Kant) விமர்சன மதிப்பீடு (Critique of Judgement) என்னும் கருத்தில் இருந்து பிறந்தது. ஒன்றை அடையவோ நுகரவோ விருப்பம் இல்லா நிலையில் அதில் இருந்து மகிழ்வையும் நிறைவையும் அடைதல் என அதை காண்ட் வரையறை செய்தார். அதுவே தூய அழகியல் அனுபவம் என்றார். (பார்க்க அழகியல்) அழகியல் விலக்கம் என்னும் சொல்லாட்சி இலக்கிய விமர்சகர் எட்வர்ட் பல்லோ (Edward Bullough) 1912-ல் எழுதிய ஒரு கட்டுரையில் இருந்து தொடங்குகிறது. ஒரு படகில் இருக்கும் பயணி கடல்மேல் பனிமண்டலம் கவிவதை கண்டு அச்சமுற்றால் அவரால் அதை ரசிக்க முடியாது. அவர் அருகே ஒரு தீவில் இருந்து அதைப் பார்த்தால் ரசிக்க முடியும். ஆகவே படைப்பு உருவாக்கும் உணர்வுநிலையை தனிப்பட்ட உணர்வுநிலையுடன் இணைத்துக்கொண்டால் அதை ரசிக்கமுடியாது என்றும், அந்த தனிப்பட்ட உணர்வுநிலைகள் ரசனை சார்ந்தவை அல்ல என்றும் பல்லோ வாதிட்டார்.

இலக்கியத்தில் அழகியல் விலக்கம்

அழகியல் விலக்கம் நவீனத்துவ எழுத்தாளர்களில் ஆழமான செல்வாக்கைச் செலுத்தியது. அவர்கள் வாசகர்கள் தங்கள் படைப்புகளுடன் உணர்வுரீதியாக ஒன்றாமல் இருக்கும்படி பலவகையான உத்திகளை பயன்படுத்தி எழுதினர். ஆசிரியரே ஒட்டாத குரலில் கதை சொல்வது, (உதாரணம் பதினெட்டாவது அட்சக்கோடு) கதைகூறலில் மெல்லிய பகடியை ஓடவிடுவது ( உதாரணம், ஜே.ஜே. சில குறிப்புகள்) நிகழ்வுகளை உணர்வுகலவாத அறிக்கைநடையில் கூறுவது ( உதாரணம் நாளை மற்றுமொரு நாளே) விரிவான தரவுகளை அளித்து புறவயமான சித்திரத்தை மட்டுமே உருவாக்குவது ( பிறகு ) போன்றவை படைப்புகளில் காணக்கிடைக்கின்றன. படைப்பின் உணர்வுநிலைகளுடன் வாசகர்களை ஒன்றச்செய்யும் பொதுவாசிப்பு எழுத்துக்களில் இருந்து இவை முற்றிலும் மாறுபட்டிருந்தமையால் இவையே இலக்கியத்தின் அடிப்படை இயல்புகள் என்றும் நவீனத்துவ காலகட்டத்தில் கூறப்பட்டது.

எதிர்நிலைகள்

அழகியல் விலக்கம் ஐம்பதாண்டுகளுக்கும் மேல் நவீன இலக்கியத்தில் செல்வாக்கு செலுத்தியது. இது அரிஸ்டாட்டில் முன்வைத்த உணர்ச்சிதூய்மை (Catharsis ) என்னும் கொள்கைக்கு எதிரானது. அரிஸ்டாட்டில் ரசிகர் ஒரு கலைப்படைப்பின் உணர்வுகளுடன் ஒன்றி, அந்த உணர்ச்சி உச்சங்களை தன்னுள் நிகழ்த்திக்கொண்டு தன்னுடைய அகத்தின் சிக்கல்களை விடுவித்துக்கொண்டு, தூய்மை அடைந்து, மேலான உணர்வுநிலைக்குச் செல்கிறார் என்று கூறினார். அழகியல் விலக்கத்திற்கு நேர் எதிரான கருத்து அழகியல்சார்பு (Aesthetic attitude). ஒரு கலைப்படைப்பு உருவாக்கும் அழகியலுக்கு ரசிகர் தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்து அந்த உச்சத்தை தானும் அடைவைதை இது குறிக்கிறது.

அழகியல் விலக்கம் செவ்வியல் படைப்புகளின் இயல்பு என்றும், அழகியல் சார்பை கோருபவை கற்பனாவாத படைப்புகள் என்றும் நவீனத்துவர்கள் வாதிட்டனர். ஆனால் செவ்வியல் இலக்கியங்கள் உணர்ச்சித்தூய்மை நிலையை அளிப்பவை. அதேசமயம் அவை வெவ்வேறு உணர்ச்சிநிலைகள் நடுவே சமநிலையையும் உருவாக்கி அதனூடாக ஒரு விலக்கத்தையும் உருவாக்குகின்றன. மாறாக, கற்பனாவாதப் படைப்புகள் ஒட்டுமொத்தமாக ஒற்றை உணர்ச்சிநிலையை நோக்கி வாசகர் அல்லது ரசிகரை கொண்டுசெல்கின்றன

(பார்க்க அழகியல் சார்பு, அழகியல்வாதம் )

உசாத்துணை

✅Finalised Page